இலங்கை ஓய்வூதியம் பெறும்தமிழ் முதியவர்களை குறிவைக்கும் இலங்கை அரசு: எச்சரிக்கை

புலம் பெயர் நாடுகளில் வாழும் ஓய்வு பெற்ற தமிழ் முதியவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு மாதாந்தம் வழங்கி வந்த ஓய்வூதியத்தை இலங்கை அரசு தற்போது நிறுத்தியுள்ளதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது. இந்த முதியவர்கள் வாழும் நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு இவர்கள் சென்று தம்மை அடையாளப்படுத்தி பதிவுசெய்து கொள்ளவேண்டும் என இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளதுடன் அவர்கள் திறந்து தரும் குறிப்பிட்ட ஒரு வங்கியில் தான் ஓய்வூதியம் செலுத்தப்படும் எனவும் அறிவுறுத்துகிறது.

இலங்கை தூதரகத்திற்குச் செல்லும் ஓய்வுபெற்ற முதியவர்களை விசாரிக்கும் அதிகாரிகள் அவர்கள் வெளிநாட்டு கடவுச் சீட்டை வைத்திருக்கிறார்களா என சோதித்து, அப்படி வைத்திருந்தால் அந்த கடவுச்சீட்டு பெறப்பட்ட தேதியை பார்த்து, அன்று முதல் இன்று வரை அவர்கள் பெற்ற ஓய்வூதியத்தை திருப்பிக் கட்டுமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக அதிர்வின் வாசகர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். எனவே புலம் பெயர் நாடுகளில் தற்போது வசித்து வரும் ஓய்வூதியம் பெற்று வரும் வயோதிபர்கள் மிகுந்த கவனத்துடன் இவ் விடயத்தைக் கையாளவேண்டும்.

தகுந்த சட்ட ஆலோசனை அல்லது நண்பர்களின் ஆலோசனைகளைப் பெற்றுச் செயல்படுவது நல்லது. எந்தத் தகவல்களையும் இலங்கை அரசுக்கு கொடுக்கு முன் முன்யோசனையோடு நடந்துகொள்ளல் நன்று. அத்துடன் வைப்பில் இடப்பட்ட உங்கள் ஓய்வூதியப் பணம் குறித்தும் ஆராய்வது நல்லது. இது தமிழர்களிடம் மட்டுமே நடைபெற்று வருகின்றது.

வெளிநாட்டில் வசித்துவரும் சிங்கள வயோதிபர்களிடன் இவ்வாறு எந்தக் கோரிக்கைகளும் இன்றுவரை இலங்கை அரசாங்கம் விடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிர்வு

Comments