புலம்பெயர் தமிழீழ சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட அமெரிக்கா விருப்பம்

பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்காவின் கிழக்கு, மத்திய மற்றும் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவர் செனட்டர் பொன் கசே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அமெரிக்காவின் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவராகிய நான் சிறீலங்காவில் நடைபெற்றுவந்த துன்பமான போரை ஆராய்ந்து வந்துள்ளேன்.

இடம்பெயர்ந்த மக்களின் நெருக்கடிகள் தொடர்பாகவும், போரின் பின்னரான அபிவிருத்திகள் குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். போருக்கு பின்னரான நடவடிக்கைகளில் சிறீலங்காவில் தொடர்ந்து ஒரு காத்திரமான பங்களிப்பை வழங்க நாம் ஆவலாக உள்ளோம்.

சிறீலங்கா போரில் இருந்து மீண்டு வருகையில், நாட்டுக்கு வெளியில் உள்ள தமிழ் சமூகம் அதன் முன்னேற்றங்களில் கணிசமான பங்களிப்பை வழங்கவேண்டும். சிறீலங்காவின் ஜனநாயக வழிகளுக்கு ஆதரவளிக்கும் உலகத் தமிழர் பேரவைக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.

குறிப்பாக நாட்டின் நெருக்கடியான சமயத்தில் அவர்கள் இதனை மேற்கொண்டுள்ளனர். போர், பயங்கரவாதம், வன்முறைகள், அரசியல் அடக்குமுறைகள் போன்றவற்றை விடுத்து சிறீலங்கா மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றுவார்கள் என நான் நம்புகிறேன்.

அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் மக்களின் அரசியல் செயற்பாட்டு சபையின் பணிகளையும் நான் பாராட்டுகிறேன். சிறீலங்காவில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து வெளியுலகின் கவனத்திற்கு அவர்கள் கொண்டுவந்துள்ளதுடன், அமெரிக்க கொள்கை வகுப்பளர்களுக்கும் அதனை உணர்த்தியுள்ளனர்.

நாம் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும் என விரும்புகிறேன். பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments