நான் கிளி நொச்சிக்கு வந்திட்டேன் ….

அக்கா நாங்கள் கிளிநொச்சிக்கு வந்திட்டம். போன புதன் கிழமை வந்தனாங்கள் கோல் பண்ண ஏலாமல் போச்சு , பற்றி சார்ஜ் இறங்கிவிட்டுது. முந்த நாள் வீட்டுக்கு போயிட்டம். ரவுணுக்க இலவசமா சார்ஜ் போட்டு கொடுக்கிறாங்கள் அங்க வந்து சார்ஜ் பண்ணிட்டுதான் கதைக்கிறன்.

வீடுகள், இயக்கத்தின்ர கட்டடங்கள் எல்லாம் கள்ளர்களோ ஆமியோ ஆரெண்டு தெரியாது எல்லாம் உடைச்சு கொண்டு போயிட்டாங்கள். பத்தைகள் வளர்ந்து இருக்கு. இயக்கத்தின் காவல்துறை ஆமி பாவிக்கிறாங்கள். வெற்றி மனை மன நோயாளர் விடுதி ஆமி முகாம் போட்டிருக்கிறான். வெண்புறா அமைப்பின் காணிதான் பெரிய புத்த கோயிலாக இருக்கின்றது.

சமாதான செயலகம், அரசியல் துறை செயலகம் ஆமிதான் பாவிக்கிறான் போல இருக்கு. பொது கட்டடங்கள் எல்லாம் முதல் வந்த சனங்கள் உடைச்சு போட்டுது போல இருக்கு முதல் வந்த ஆட்கள் காணிகளுக்க கல்லுகுவியல்கள் கிடக்குது. மற்றும்படி ஒரு அரச மரமும் மிச்சம் இல்ல எல்லா இடமும் புத்தர் சில வைக்கப்பட்டு இருக்கு. சனங்கள் கூடுதலாக வந்திட்டுதுகள் இப்பதான் மூன்று கடை திறந்திருக்கினம்.

புத்த கோயில்களுக்கான பூசைகள்தான் இங்க கூட நடக்குது ஸ்பீக்கரில கூட பூசை கேட்கலாம். சிங்கள சனம் நிறைய வந்து புத்த கோயில்ல கும்பிட்டு போகுதுகள். குருகுலம் ஜெயந்தி நகர் பக்கம் போனோம் . அங்க சின்ன அக்காவின்ர காணிபார்த்தோம். அப்படியே இருக்கு வீட்டைதவிர. குருகுலம் கட்டடங்களையும் கள்ளர் வந்து இடிச்சு இருக்கிறாங்கள். பிறகு ஜி.எஸ் (கிராமசேவகர்) அந்த இடத்தில போட் போட்டிருக்கிறார். அந்த இடத்துக்கு உள்ளே யாரும் போனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று.

குருகுலம் ஆட்கள் வந்திட்டினம் இல்லத்தினை திரும்ப ஆரம்பிக்க கதைச்சு கொண்டிருக்கினம். ஈழநாதம் கட்டடத்தில் ஆமி முகாம் போட்டிருக்கிறான். எல்லாம் சிங்கள மயமாதான் இருக்கு . ஆனால் காணி பறிபோய்விடும் என்பதால் எல்லா சனமும் வந்து காணிபதிவுகளை செய்து காணிகளை துப்பரவாக்குதுகள். ஆமி இப்போ செக் பண்ணுவதில்லை. கந்தசாமி கோயில் பக்கம் புனர்வாழ்வு கட்டடத்தில இருந்த ஆமி வேற இடம் போயிட்டாங்கள். இனி கோயில் பூசை ஒழுங்காக நடக்கும் என்று நினைக்கிறன்.

புனர்வாழ்வு கட்டிடம் மேல் மாடி இடிஞ்சு இருக்கு. ஆனால் இப்போ ஒருவரும் இல்லை. இப்போ காணிப்பதிவுதான் மும்முரமாக நடக்குது. தெரிஞ்ச ஆட்களுக்கு சொல்லுங்கோ காணி உரிமையாளர்களை வந்து பதிய சொல்லி பதிஞ்சு துண்டு எடுக்காவிட்டால் அதனை வேறு தேவைக்கு எடுத்து விடுவாங்கள். ஸ்கூல் எல்லாம் நடக்குது. சென்றல் கொலிஜ்இல் நேற்று கொஞ்ச சனம், 55 ம் கட்டை சனங்கள் வந்திருக்குதுகள் நாளைக்கு விடுவாங்கள் போல இருக்கு.

போன 12 ஆம் திகதி ஓமந்தைக்கு தம்பிய பார்க்க போனம் பிரச்சினை இல்லை எனக்கு தெரிஞ்ச போராளிகளையும் பார்த்தனான். எப்ப விடுவாங்கள் என்று எங்களிடம் கேட்டாங்கள். நாங்கள் என்ன செய்வது? கெதியா விடப்போறாங்களாம் என்று சொன்னேன். அடுத்த மாதம் 12 ஆம் திகதி போவேன். எங்கட வீட்டிற்கு பக்கத்தில சானங்களுக்க காணி சண்டை நடக்குது . இனி இஞ்ச அதுதான் நடக்க போகுது. எங்கட காணிக்க கூட சிலபேர் வந்து இருந்தவ ஆனால் நாங்கள் வந்ததும் போயிட்டினம்.

இஞ்ச சனங்களுக்குள்ள சண்டைகள் நடக்குது. இயக்கத்திற்கு வேலை செய்த ஒரு குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டு சனத்திற்கும் சண்ட நடந்து இயக்கத்திற்கு வேலை செய்த குடும்பம் திரும்பவும் வவுனியா போயிட்டினம். அந்த இயக்கத்திற்கு வேலை செய்த குடும்பம் முகாமில் ஆட்களை காட்டி கொடுத்தார்கள் தங்களின் சொந்த காரர்களை காட்டி கொடுத்தார்கள் என்றே மற்ற ஆட்கள் சொல்லுகினம்.

சனம் எல்லாம் ஒரு வித்தியாசமான சூழலில் இருக்கின்றார்கள். களவு, சண்டை, குடி வெறி, கூடாத வார்த்தைகள், சேட்டைகள், எல்லாம் மலிஞ்சு போய் இருக்கு. ஆமி காரங்களுக்கும் பொலிசுக்கும் நல்ல பொழுது போக்கு விளக்கம் தீர்க்குறதில அவங்களுக்கு வாழ்க்கை வெறுக்கும் போல இருக்கு. அவரையும் ( கணவர்) எல்லா இடமும் தேடி பாத்திட்டம் ஆனால் ஒரு இடமும் இல்ல, முள்ளிவாய்க்காலில இருந்து சனங்களோட வந்தவர் எண்டு தெரிஞ்ச ஆட்கள் எல்லாரும் சொல்லுகினம். ஆனால் காண இல்லை.

எனக்கு பிறகு காயப்பட்டு கப்பலில வந்த ஆட்கள் சொன்னார்கள் இவரை தாங்கள் ஆஸ்பத்திரியில் கண்டது என்று. எல்லா இடமும் அறிவிச்சு இருக்கிறம் பார்ப்பம். ஆமி காரங்கள் நல்லா கதைக்க பழகிவிட்டாங்கள். இனிமேல் சமாதானமாக இருப்பம் உங்க பக்கத்திலையும் இழப்பு எங்க பக்கத்திலையும் இழப்பு இனிமேல் சமாதானமாக இருப்பம் என்று கதைக்கிறாங்கள்.

தமிழீழம் கிடைக்காட்டிலும் பரவாயில்ல எங்கட சனங்கள திருத்துறதுக்கு தலைவர் வரவேண்டும். இல்லாவிட்டால் எங்கட சனம் தங்களுக்கு உள்ளேயே அடிபட்டு சாகும் போல கிடக்கு. இப்பவே எடுத்தது எல்லாத்துக்கும் காசுகேட்க வெளிக்கிட்டங்கள். ஏதோ பார்ப்பம் ….

வாற சனி கிழமை ஒருக்கால் எடுங்கோ..

ஒகே அக்கா .

நன்றி: ஈழநாதம்

Comments