பிரான்சு மாநிலசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் பசுமைக்கட்சியின் வேட்பளாராக போட்டியிடுகின்றனர்

http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b3/Blason93.PNGஎதிர் வரும் மார்ச் 14ம் திகதி பிரான்சு நாடு தழுவிய மாநிலதேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் Seine Saint Denis 93 மாநிலத்தில் இரண்டு தமிழர்கள் பசுமைக்கட்சியின் (Europe-ecologie) வேட்பளாராக போட்டியிடுகின்றனர்.

Ile -de -France யின் பிரதேசசபைக்கான தேர்தலில் போட்டியிடும் Cécile Duflot (Europe-ecologie) தலைமையில் Seine Saint Denis (93) மாநிலத்தில் போட்டியிடும் Stéphane Gatignon (Maire de Sevran) (இவர் தமிழ்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கடந்து வந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு வகையான உதவிகளை புரிந்து வரும் செவரோன் மாநகர முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது)

உலகமெங்கு முள்ள பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயின்று வரும் தாய்மொழியாம் தமிழ்மொழி இனி பாராளுமன்றத்திலும் அரசியலிலும், ஒலிக்கப்போவது தமிழ்மொழிக்கும், தமிழைப் பேசி, அதை உயிராய் நேசிக்கும் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு தமிழர்கள் இந்த தேர்தலில் நிற்பது எமக்கு இந்நாடு கொடுக்கும் மரியாதை. இவர்கள் மருத்துவக்கல்லூரி மாணவியும், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் செயலாளரும், சர்வதேசப்பேச்சாளருமான செல்வி.கிருசாந்தி (சாலினி) சக்திதாசன் அவர்களும், Ile Saint Denis மாநகரசபை ஆலேசகராக 2007 தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட செல்வன் முருகநாதபிள்ளை ரவிசங்கர் ஆகிய இருவரும் தேர்தலில் நிற்கின்றனர்

2007ல் உங்கள் வாக்கு தெரிவு 9 தமிழர்களை மாநகரசபை ஆலோசகர்களாக அனுப்பி வைத்தது.

2010 ல் உங்கள் வாக்கு தெரிவு 2 தமிழர்களை மாநிலத்திற்கு அரசியல் ஆலோசகர்களாக அனுப்பி வைக்க முடியும்.

அன்பானவர்களே!

தமிழ்வாழவும், அதைப்பேசும் இனம்வாழவும் நாம் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல, எல்லாமே ஓர் உயரிய நோக்கத்தை அடையவே! அந்த தேவைகளையும், ஆசைகளையும், அபிலாசைகளையும், நிறைவேற்றவும், அடையவும், இன்று பிரெஞ்சு அரசியலில் முன்னிலையிலும், மக்கள் மத்தியிலும், உயிர்களுக்கும், மனிதவுரிமைகளுக்கும் எதிர்காலத்தில் பெரும் கேடுவிளைவிக்கும் காரணிகளுக்கெதிராக பசுமைப்புரட்சி செய்து வரும் பட்சைக்கட்சியினரோடு நாமும் இணைந்து எம்மையும், எமது மக்களையும், எமது மண்ணையும் வாழவைப்போம், வாக்களிப்போம்.

இவர்களுக்கு 93ம் பிரதேசம் வாழும் பிரஞ்சுக்குடியுரிமை பெற்ற அனைத்து தமிழ்மக்களும் வாக்களிப்பதுடன், எமது பிரெஞ்சு மற்றும் இதர நாட்டு நண்பர்களுக்கு கூறி இவர்களுக்கு வாக்களிக்கச்செய்வோம்.

தேன்மதுரத்தழிழோசை உலகமெல்லாம் பரவச்செய்தருளல் வேண்டும் என்ற பாரதியின் கனவு நனவாக பிரான்சு வாழ் தமிழர் நாம் வாக்களிப்போம். தமிழன் என்ற பெருமையை பெற்றுக்கொள்வோம். எமது துன்பத்தை அரசியல் வழியில் எடுச்செல்ல இதனை பயன்படுத்துவோம் வெற்றியளிகச்செய்வோம்.

Comments