யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும் சிங்கள யாத்திரிகர்கள்! யாழ் மக்கள் விசனம்!

யாழ்குடா நாட்டை நோக்கி அதிக எண்ணிக்கையில் வரும் சிங்கள் மக்களின் வருகையால் பல நெருக்கடிகளும், மாற்றங்களும் தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பிலிருந்து பெரும் தொகை பணத்தை செலவு செய்து யாழ் வரும் சிங்களவர்கள், யாழ்ப்பாணத்தில் நடந்து கொள்ளும் முறை மற்றும் அவர்களின் பின்புலங்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

அளவுக்கு அதிகமாக அவர்கள் வருகை தருவதால் தாம் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாவதுடன் சுகாதார மற்றும் கலாச்சார நெருக்கடிகளை பாரியளவில் எதிர் நோக்குவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எவ்வித ஆயத்தமும் இன்றி கொழுபிலிருந்து வரும் இவர்கள் தங்குவதற்கு இடம் தேவை என தமது நண்பர்கள் மற்றும் சகபாடிகளிடம் கேட்கின்றனர். அவர்கள் தங்குவதற்கான இடங்களை ஒழுங்குபடுத்திய பின்னர் பணம் கொடுக்க மறுப்பது பலர் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் காணாமல் போன படையினரின் குடும்பங்கள் மற்றும் அங்கவீனமடைந்த படையினரின் கு:ம்பங்களை ஏமாற்றி, அவர்களுக்கு சில ஆயிரங்கள் கொடுப்பனவு செய்து, உங்கள் உறவுகள் தமிழ் மக்களின் நிலங்களில் போராடிய இடங்களை சென்று பார்வையிட்டு வாருங்கள் என அரசியல் வாதிகளால் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அத்துடன் தென்னிலங்கையில் வீதி அனுமதிப்பத்திரம் பெற விண்ணப்பிக்கும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணத்துக்கு படை அதிபாரிகள் மற்றும் அரசியல் வாதிகளுக்கு நெருக்கமானவர்களின் குடும்பங்களை ஏற்றி; சென்றாலே தவிர மற்றும்படி அவ் வீதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது என மிரட்டப்படுகின்றனர்.

அழிந்துபோயுள்ள யாழ்ப்பாணத்தையும், வன்னியையும் பார்க்க இவ்வளவு தொகையான சிங்களவர் வருவது போரின் வடுக்களைத் தாங்கியுள்ள தமிழ் மக்களின் மனங்களில் தொடர்ந்தும் வடுக்களை விதைக்கும் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Comments