ஜேர்மனியில் தமிழர்கள் கைது: பின்னணில் தானே இருந்தாராம் - ஜெகத் டயஸ் பெருமிதம்


உணருமா தமிழினம்?

அன்று நாம் கூறிய கருத்தின் சில பகுதிகளை படியுங்கள் பின் விடையத்தை கூர்ந்து கவனியுங்கள் .

வன்னியில் எமது இனத்தின் வரலாற்றுச் சுவடுகளையே அழித்த- வீடுகள் கோவில்கள், வளங்கள், உறவுகள் அனைத்தையுமே சிதைத்து சின்னாபின்னமாக்கிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸை சிஙகள அரசு ஜேர்மனிக்கு துணைத் தூதரக அனுப்பப் போகிறது.

தமிழ்மக்களை அழித்தவர்களுக்கு சிங்கள அரசு கொடுக்கும் கௌரவம் இதுவாம். மனிதஉரிமைகளை குழி தோண்டிப் புதைத்தவர்களை கோபுரத்தில் ஏற்றிக் கொண்டாடுவதே சிங்கள அரசின் மரபு.

மனித உரிமைகளை மதிக்கின்ற ஜேர்மனி போன்ற நாடுகள்- ஒரு போர்க்குற்றவாளியை துணைத் தூதராக ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியது எமது கடமை.

போரை முடிவுக்குக் கொண்டு வருவது தமது கையில் இல்லை என்று கூறி எம்மைக் கைவிட்ட மேற்குலகின் மனச்சாட்சியை உலுப்புவதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பம்.

போர்க்குற்றவாளி ஒருவரை இராஜதந்திரியாக ஏற்கக் கூடாதென்று சுட்டிக் காட்ட வேண்டியதும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் தமிழ்மக்களின் கடமை.

எமது உறவுகளை ஓடஓட விரட்டியவருக்கு- கொன்று குவித்தவருக்கு நாம் கொடுக்கும் சரியான நீதியாக இது அமைய வேண்டும்.

நாம் வலுவானவர்கள் என்பதை சிங்கள தேசத்துக்கு உணர்த்த இந்தச் சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதுடன் தமிழ்மக்களின் உரிமைப்போர் முடிந்து விட்டதாக யாரும் தப்புக்கணக்குப் போட்டு விடக்கூடாது.

அப்படிப்பட்ட தவறான புரிதலுக்கு நாமே பொறுப்பாளிகளாகி விடவும் கூடாது.

தாயகத்தில் உள்ள மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு இப்போது தான் எமக்கு அதிகமாக இருகிறது.

ஒன்றுபட்டு நாம் சிங்கள தேசத்துக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.

போர் முடிந்து விட்டது. போருக்கு அப்பால் தமிழ்மக்களின் உரிமைகளை வெல்வதற்கான சூழலை உருவாக்க வேண்டியது எமது கடமை.

அதற்காக புலம்பெயர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான்- தமிழ்மக்களின் வலிமையை சிங்கள தேசம் தெரிந்து கொள்ளும். சர்வதேசமும் புரிந்து கொள்ளும்.

வாருங்கள் வடம் பிடிப்போம். உரிமைக்குத் தோள் கொடுப்போம்.

செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009

  • இனி செய்தியை கவனத்தில் கொள்ளவும்

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாள்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் தாமே இருந்ததாக அங்குள்ள சிறிலங்கா தூதரகம் அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஆட்கள் தொடர்பாக ஜேர்மனிய புலனாய்வுத்துறையினருக்கு இரகசியத் தகவல்களைத் தாமே வழங்கியதாக சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது.

ஜேர்மனிக்கான சிறிலங்கா பிரதித் தூதுவராக பேர்லினில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இதை தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள்.ஆனால், வெளிநாடுகளில் சிலர் புலிகளின் பெயரில் இன்னும் இயங்கி வருகின்றார்கள்.

இது சிறிலங்காவின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது” என்று கூறியுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரைக் கைது செய்ததற்காக ஜேர்மனியின் புலனாய்வுச் சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு தகவல்களை வழங்கி இந்தக் கைதின் பின்னணியில் தாமே இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

சிறிலங்கா இராணுவத்தின் 57வது டிவிசன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், வன்னிப் போரில் முக்கிய பங்கு வகித்தவர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா அரசினால், பிரதித் தூதுவராக பேர்லினுக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையி்ல் - வாகீசன், சசிதரன், சிவநாதன், செந்தில், மகிழன், ராகுலன் ஆகிய இந்த ஆறு பேரின் கைது நடவடிக்கை தொடர்பாகத் தெரிவித்துள்ள ஜேர்மன் காவல் துறை வட்டாரங்கள் -

இந்த ஆறு பெரும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக நிதி சேகரித்தார்கள் என்று கூறியுள்ளன.

அது தொடர்பான பல முறைப்பாடுகள் மக்களிடம் இருந்து தமக்குக் கிடைக்கப் பெற்றதை அடுத்தே தாம் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

கீழ் வரும் ஆக்கத்தினை காலத்தின் தேவைகருதி சில பதிவுகளை மீள் இடுக்கை செய்கின்றோம்

Comments