நாடுகடந்த அரசின் தேர்தல் குறித்த விபரங்கள்

நாடு கடந்த அரசாங்கத்தின் தேர்தல் விபரங்கள், நாடுவாரியாக !






--------------------------------

FRANCE

2010 மே 2ம் திகதி பிரான்சில் நாடுகடந்த கடந்த தமிழீழ அரசினதும், தமிழீழ மக்கள் பேரவையினதும் சனநாயகத்தேர்தல்

நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலும், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் தேசிய அரசியல் கட்டமைப்புக்கான தேர்தலும், எதிர் வரும் மே மாதம் 2ம் திகதி பிரான்சு நாடு தழுவிய ரீதியில் நடைபெறுகின்றது.

இன்றைய புதிய உலகமாற்றத்தில் தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக்கி எமது மக்களின் விடுதலைப்போராட்டத்தை அழித்து ஒரு பெரும் இனப்படுகொலையை செய்ய இடமளித்து உலகத்தில் ஒரு புதிய துயரசரித்திரத்தினை எழுதப்பட்டிருக்கும் இன்றைய நிலையிலும், எமது தாய்நாட்டில் அம்மக்களின் உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டு அடக்கியாளப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்திலும,; எமது தேசத்தையும், எமது அரசையும், மக்களையும், மீட்டு எமது தேசத்தை கட்டியெழுப்ப வேண்டியது புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் எங்கள் எல்லோரின் தலையாய கடமையாகும்.

தமிழீழ தேசத்தின் இதயமான வன்னிபெரு நிலப்பரப்பில் தமிழீழ தேசத்தின் நடைமுறையரசு இருந்ததும், அங்கே எமது மக்கள் சுதந்திரமிக்கவர்களாகவும், பாதுகாப்பாகவும், நிம்மதியான வாழ்வையும் வாழ்ந்ததையும், அனுபவித்ததையும், சென்று வந்த எம்மவர்கள் முதல் அந்நிய நாட்டு ராஐதந்திரிகளும் கண்டதும், சொன்னதும் மறைக்க முடியாத மிகப்பெரும் உண்மையும், அதன் வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் உரமாக இருந்ததும் யாவரும் தெரிந்த செய்தியுமே.

இன்று அத்தேசம் மானிட உலகில், மனிநேயமிக்கவர்களால் நினைத்துக் கூடப்பார்க்க முடியாத அளவு பூர்விக காலமாக தம் நிலத்தில் வாழ்ந்து வந்த எங்களின் நிலமும், வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டும், அதற்கப்பால் அவர்களில் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களும் பறிக்கப்பட்டு, அந்த மிகப்பெரும் திட்டமிட்ட

இனப்படுகொலையின் அடையாளங்களை அழித்து அதற்கு மேல் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி சிங்கள மயமாக்கப்பட்டுக் பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்கு துணைபோன போன தமிழர்களாக நம் வரலாற்றில் பதிவாகாமல் தமது உறவுகளை மீட்போராகவும், நீதி கேட்போராகவும், அன்றும், இன்றும், என்றும் எமது உறவுகளுக்காக குரல் எழுப்புபவர்களாகவும், தேசத்தை மீட்டு அதைக்கட்டியெழுப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.

அன்பான தமிழீழ மக்களே!

இன்றைய காலம் எமது கைகளில் இரண்டு பெரும் சக்திகளை உருவாக்கும் கடமை தரப்பட்டிருக்கின்றது. ஒன்று எமது மண்ணில் அழிக்கப்பட்ட எமது அரசை உருவாக்கி உலக அரசியல் மேடையில் இயங்குவதும், (நாடுகடந்த தமிழீழ அரசு) மற்றையது அந்தந்த நாடுகளில் அரசியல் கட்டமைப்புக்களை உருவாக்கி தமிழ்மக்களின் ஏகோபித்த பெருவிருப்பமான தமிழீழ தனியரசினை அங்கீகரிக்கச் செய்யும் (தமிழீழ மக்கள் பேரவை)

செயற்திட்டங்களில் ஈடுபடுதலாகும். (தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் 2008ம் ஆண்டு மாவீரர்நாள் செய்தியில் தீர்க்கதரிசனமாக சொன்ன செய்தி உலகம் முழுவதும் வாழும் தமிழ்மக்களும், புலம்பெயர்மக்களும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து கொண்டு செல்ல வேண்டும்) என்றும் அதில் அடுத்த சந்ததியினர் இதில் பங்கு தாரர்களாக மாறவேண்டும் என்றார். இன்று இப்போராட்டம் அடுத்த சந்ததிக்கு சென்று விட்ட நிலையில் எமது அனைத்து சக்திகளையும் ஒண்றினைத்து எமது இனவிடுதலையை மாத்திரம் குறிக்கோளாக கொண்டு செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டளையாகும்.

இந்த உண்மையை புரிந்து கொண்டு சளைக்காமல், சலுக்காமல், தொய்யாமல், துவளாமல், கிஞ்சித்தும் அஞ்சாமல் இனத்துரோகத்திற்கும், சுயநலத்திற்கும், துணைபோகாமல், மண்ணை நேசித்து மானமுடன் தன்தாய்மண்ணை முத்தமிட்ட மறவர்களின் வழிவந்தவர்கள் நாங்கள் என்பதை மீண்டும் மீண்டும் உலகிற்கும், எம்மை கருவோடுவேரறுக்க நினைக்கும் சக்திகளுக்கும் எமது தாகம் தமிழீழ தாயகம் என்பதை அரசியல் ரீதியில் உணர்த்துவோம்.

எதிர் வரும் மே 2ம் திகதி புலம்பெயர் தமிழ்மக்களின் மீண்டும்மொரு வரலாற்று பதிவில் உலக அரசியலில் மாபெரும் மக்கள் படையாக சேர்ந்து தமிழீழத்தை நோக்கிச்செல்வோம் உங்கள் பிரதிநிதிகளை நீங்களே தெரிவுசெய்யுங்கள். எமது விடுதலையை ஒன்றாக வென்று எடுப்போம்.


தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

------------------------------------------------------------------

AMERICA-USA

அமெரிக்காவில் தேர்தல் ஆணையகம் அமைந்தது! 10 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க மே 2 இல் தேர்தல்!!


மே மாதம் 2ஆம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலை நாடாத்துவதற்கான தேர்தல் ஆணையகம் அமெரிக்க செயற்பாட்டுக்குழுவினால் அமைக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலைத் திட்டமிட்டு நடாத்தி முடிப்பதற்கான பொறுப்பை இவ் ஆணையகம் கொண்டிருக்கும்.

தலைமைத் தேர்தல் ஆணையாளராக அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் திரு சுயஅளநல ஊடயசம அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் 66 வது சட்டமா அதிபராக ஜனாதிபதி ஜோன்சன் அவர்களின் காலத்தில் பணிபுரிந்தவர் ஆவர்.


தேர்தல் ஆணையகத்தில் பின்வருவோர் உறுப்பினர்களாக உள்ளனர் :

Dr. Ilangovan,

former President of the Federation of Tamil Sangams of North America;


Mr. Sripathy Thillampalam,

President of the Eelam Tamil Association USA;


Prof. Pillai,

Mathematical Sciences Ohio University;


Mrs. Indrani Nagarajah;

Wife of late Mr. C. Nagarajah, former Mayor of Jaffna


Prof. Judith Lynch, Ph.D

Professor of History and Political Science Mercyhurst College


Mr. Kevin Matthews,


Mr. Prem Shan,

Journalist


Mr. Sage Kanagaratnam,

Board of Director of Boston Tamil Association;


Mr. Surenthra Thurairatnam,

Former president and current vice president of Boston Tamil Association;

Mr. Palani Nadarajah,

Former vice president of Boston Tamil Association;


Mr. R. Muruganantham;


Mr. Prabaharan Ponnuthurai.


மே மாதம் 2 ஆம் நாள் நடைபெறும் தேர்தலில் அமெரிக்காவில் இருந்து தெரிவு செய்யப்படும் 10 பிரதிநிதிகளில், 8 பேர் பிராந்திய மட்டத்திலும் 2 பேர் தேசிய மட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படுவர். பிராந்திய அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவோர் 8 பிராந்தியங்களில் இருந்து - ஒரு பிராந்தியத்துக்கு ஒரு பிரதிநிதி என்ற வகையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.


தேர்தலுக்காக வகுக்கப்பட்ட பிராந்தியங்களின் விபரம் பின்வருமாறு:

1. New England (Maine, New Hampshire, Vermont, Massachusetts, Rhode Island Connecticut)



2. New York



3. New Jersey



4. Mid Atlantic (Pennsylvania, Delaware, Maryland, Washington DC, Virginia)



5. South (North Carolina, South Carolina, Georgia; Florida, Puerto Rico, Alabama, Mississippi, Arkansas, Louisiana, Texas, Oklahoma, Nebraska, Kansas)



6. Midwest (Ohio, Illinois, Indiana, Iowa, West Virginia, Tennessee, Kentucky, Missouri, Michigan, Minnesota, Wisconsin, Montana, North Dakota, South Dakota, Idaho)



7. North West (Northern California, Washington, Oregon, Nevada, Colorado, Utah, Wyoming, Alaska)



8. South West (Southern California, Arizona, New Mexico, Hawaii, American Samoa).


வேட்பாளர்கள் பிரந்திய மட்டத்திலோ அல்லது தேசிய மட்டத்திலோ போட்டியிட முடியும். குறிப்பி;ட்ட பிராந்தியத்தில் வாழ்ந்து வரும் தகமையுள்ள வாக்காளரே அக் குறிப்பிட்ட பிராந்தியத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். வாக்களிக்கத் தகமையுள்ள அனைத்து வாக்காளர்களும் தேசிய மட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். ஒரு வாக்காளர் தமது பிராந்தியத்தில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கும் தேசிய மட்டத்தில் போட்டியிடும் இரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க முடியும்.

இத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையகத்திடேமா அல்லது செயற்பாட்டுக்குழுவிடமோ ஏப்ரல் 11 முதல் 19 ஆம் நாள் வரையுள்ள காலப்பகுதியில் தாக்கல் செய்யலாம்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு: infousa@govtamileelam.org, tgte.elections@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுடன் தொடர்பு கொள்ளலாம்.

இவண்

விசுவநாதன் ருத்ரகுமாரன்

இணைப்பாளர்

---------------------------------------------------------

GERMANY

ஜேர்மனியில் ஏப்ரல் 20 வரை வேட்புமனுக்கள் ஏற்பு!

4 தேர்தல் தொகுதிகளில் மே 2 இல் தேர்தல்!


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்காக ஜேர்மனியில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள 10 பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் மே மாதம் 2 ஆம் நாள் நடாத்தப்படுகிறது. இ;த் தேர்தலைப் பொறுப்பேற்று நடாத்துவதற்கான சுயாதீனமான தேர்தல் ஆணையகம், விரிவுரையாளரும் ஆய்வாளருமான னுச. நுஎய புநசாயசண (டீழஉhரஅஇ டீநைடநகநடன பல்கலைக்கழகங்கள்) அவர்களைத் தலைமை ஆணையாளராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.


ஜேர்மனியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போல நான்கு தேர்தல் தொகுதிகளில் நடைபெறுகிறது.


இத் தேர்தல் தொகுதிகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:


தேர்தல் தொகுதி 1: Berlin மாநிலம் (தலைநகரை உள்ளடக்கியது) - 1பிரதிநிதி

தேர்தல் தொகுதி 2: வடக்கு ஜேர்மனி: Bremen, Hamburg, Niedersachsen, Schleswig-Holstein
- 2 பிரதிநிதிகள்

தேர்தல் தொகுதி 3: மத்திய ஜேர்மனி: Nordrhein-Westfalen (தமிழ் மக்கள் மிகவும் செறிந்து வாழும் இடம்) - 4 பிரதிநிதிகள

தேர்தல் தொகுதி 4: தெற்கு ஜேர்மனி: Baden-Württemberg, Bayern, Hessen, Rheinland-Pfalz, Saarland - 3 பிரதிநிதிகள் .

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தமது வேட்புமனுக்களை 12.04.2010 திங்கட்கிழமை முதல் தேர்தல் ஆணையகத்திடம் தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் 20.04.2010 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.


தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான தகைமைகள்;, வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்;வது தொடர்பான விபரங்கள், தேர்தலை ஒழுங்கமைக்கும் செயற்பாட்டாளர்கள் விபரங்கள் உட்பட்ட பல்வேறு தகவல்களை www.tgte-germany.de என்ற இணையத்தள முகவரியில் 12.04.2010 முதல் பெற்றுக் கொள்ளலாம். தொடர்புகளுக்கான மின்னஞ்சல் முகவரி: infogermany@govtamileelam.org

இவண்

விசுவநாதன் ருத்ரகுமாரன்

இணைப்பாளர்

------------------------------------------


SWISS

சுவிஸில் 7 தேர்தல் தொகுதிகளில் மே 2 இல் தேர்தல்!

ஏப்ரல் 18 வரை வேட்புமனுக்கள் ஏற்பு!


சுவிஸில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான 10 பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் நாள் நடாத்தப்படுகிறது. அத் தேர்தலினை ஒழுங்கமைத்து நடாத்துவதற்கான செயற்பாட்டுக்குழுவுடன் சுவிஸில் உள்ள தமிழ்ப் பொது அமைப்புக்களும்; இத் தேர்தல் ஒழுங்கமைப்பில் தம்மை இணைத்துள்ளன.


இத் தேர்தலுக்காக சுவிஸ் 7 தேர்தல் தொகுதிகளாக வகுக்கப்பட்டு அவற்றுக்குரிய பிரதிநிதிகள் தொகையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவை பற்றிய விபரம் பின்வருமாறு:


தேர்தல் தொகுதி 1 - Bern, Solothurn- 2 பிரதிநிதிகள்


செயற்பாட்டுக்குழு:

ஆ. பரமேஸ்வரன் - இணைப்பாளர் - தொலைபேசி இலக்கம் - 0796583612

செ. சுரேஸ்

வ. கொலம்பஸ்

கி. கிருபாகரன்

வ. கணேசமூர்த்தி

ஆ. மகாராஜா

ளு. சந்திரபாலன்

மு. மோகனதாஸ்

வே. குணபாலசிங்கம்

ஆ. புத்திரசிகாமணி


தேர்தல் தொகுதி 2 – Zurich, Schaffhausen, Thurgau - 2 பிரதிநிதிகள்


செயற்பாட்டுக்குழு:

சி. சசிகரன் - இணைப்பாளர் - தொலைபேசி இலக்கம் - 078 850 90 22 இ மின்னஞ்சல்: s.s.karan@bluewin.ch


இரா. ராஜன்பாபு

ச. ராஜன்

ச. ஜெயசந்திரன்


தேர்தல் தொகுதி 3 – Basel, Aargau, Jura - 1 பிரதிநிதி


செயற்பாட்டுக்குழு இணைப்பாளர்: ந. முரளி, தொலைபேசி இலக்கம் - 0793184702

தேர்தல் தொகுதி 4 - டுரணநசnஇ ணுரபஇ Nனைறயடனநnஇ ழுடிறயடனநnஇ ளுஉhறலணஇ ருசi - 1 பிரதிநிதி


செயற்பாட்டுக்குழு:

இரா. கிருபாகரன் - இணைப்பாளர், தொலைபேசி இலக்கம் - 0416611759

சி. கபிலன்

கே. பகீரதன்

சே. வசந்தமோகன்

செயற்பாட்டுக்குழு:

இரா. கிருபாகரன் - இணைப்பாளர், தொலைபேசி இலக்கம் - 0416611759

சி. கபிலன்

கே. பகீரதன்

சே. வசந்தமோகன்


தேர்தல் தொகுதி 5 - Vaud,Valais, Genève, Fribourg, Neuchâtel - 2 பிரதிநிதிகள

தேர்தல் தொகுதி 6 - Graubünden, Glarus, St.-Gallen, Appenzeller - 1 பிரதிநிதி


செயற்பாட்டுக்குழு:

இரா. பாக்கியராஜா - இணைப்பாளர் - தொலைபேசி இலக்கம் - 0786800825

க. பார்த்தீபன்

ச. சுதர்சன்

த. பார்த்தீபன்

தேர்தல் தொகுதி 7 - Tessin / Ticino - 1 பிரதிநிதி


செயற்பாட்டுக்குழு:

அ. தெய்வேந்திரன், இணைப்பாளர் - தொலைபேசி இலக்கம் - 0919676775

செ. மகேந்திரப்பிள்ளை

வெ. ரவீந்திரநாதன்

இரா. பாஸ்கரன்

செ. மகேந்திரன்

இரா. அருளாநந்தன்

இந்தத் தேர்தலை பொறுப்பெடுத்து நடாத்துவதற்கான தேர்தல் ஆணையகம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையகத்தின் பணிகளை சுவிஸ் தமிழ் டாயஸ்பரா (ளுறளைள வுயஅடை னுயைளிழசய) இ வுயஅடை நுடநஉவழைளெ ளுறவைணநசடயனெ ஆகிய அமைப்புக்கள் பொறுப்பெடுத்துச் செயற்படுத்துகின்றன.

இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதியில் இருந்து 18 ஆம் திகதி வரை தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்..


வேட்பு மனுக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தாக்கல் செய்வதற்குமான தொடர்பு விபரங்கள்.


Election Commission

TGTE
1, Rue de la Servette,
1201 Genève


இணையத்தள முகவரி: www.tgte-swiss.com
தொலைபேசி: 076770 99 9

------------------------------------------------------------------------------

NORWAY



--------------------------------------------------

DENMARK

டென்மார்க்கில் 30 இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள்! ஏப்ரல் 22 வரை

டென்மார்க்கில்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான 3 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் நாள் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.
இத் தேர்தலினை ஒழுங்கமைத்து நடாத்துவதற்கான அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டுக்குழுவுக்கு டென்மார்க் தமிழர் பேரவை தனது பூரண ஒத்துழைப்பை வழங்கி தேர்தல் சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாய் இருந்து வருகிறது.

தேர்தலை ஒழுங்கமைத்து நடாத்தும் செயற்பாட்டுக்குழுவின் இணைப்பாளராக திரு சிவா தியாகராஜா அவர்கள் பணிபுரிகிறார். இவருடனான தொடர்புக்கான தொலைபேசி இலக்கம்: 27860335

டென்மார்க்கில் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள 3 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக டென்மார்க் 3 தேர்தல் தொகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இவை பற்றிய விபரம் பின்வருமாறு

தேர்தல் தொகுதி 1 - Sjælland - 1 பிரதிநிதி

தேர்தல் தொகுதி 2 - Syddenmark - 1 பிரதிநிதி

தேர்தல் தொகுதி 3 - Midt & Nord Jylland - 1 பிரதிநிதி

தேர்தலை பொறுப்பேற்று நடாத்துவதற்காக முன்னாள் ஆசிரியையும் தமிழீழ மக்களின் விடுதலைக்காக டென்மார்க்கில் அரசியற்செயற்பாடுகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருபவருமான Agnete Schroeder அவர்களைத் தலைமைத் தேர்தல் ஆணையாளராகக் கொண்ட தேர்தல் ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் நாடு கடந்த தழிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர் வேட்புமனுவினையும் இது தொடர்பான ஏனைய தகவல்களையும் www.tamilvalg.dk/tgte என்ற இணையத்தளமுகவரியில் பெற்றுக் கொள்ளலாம். வேட்பு மனுக்கள் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 22 ஆம் நாள் வரை (22.04.2010) ஏற்றுக் கொள்ளப்படும்.

டென்மார்க்கில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள infodenmark@govtamileelam.org எனும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.

இவண்

விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்
தொடர்புகளுக்கு: info@govtamileelam.org

-------------------------------------------------------------------------

SWEDAN

சுவீடனில் ஏப்ரல் 18 வரை வேட்புமனுக்கள் ஏற்பு! 3 வாக்குச் சாவடிகளில் மே 2 இல் வாக்குப்பதிவு!!

சுவீடனில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ஒரு பிரதிநிதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் நாள் நடாத்தப்படுகிறது. இத் தேர்தலினை ஒழுங்கமைத்து நடாத்துவதற்கான செயற்பாட்டுக்குழுவுடன் நாட்டுப்பற்றுள்ள தமிழ்ப் பொது அமைப்புக்களும் தம்மை இணைத்துள்ளன.
இத் தேர்தலை ஒழுங்கமைத்து நடாத்தும் செயற்பாட்டுக்குழுவில் இடம் பெறுவோர் பெயர் மற்றும் தொடர்பிலக்கங்கள் பற்றிய விபரம் பின்வருமாறு:

கோவிந்தராஜா ஜெகன்மோகன் - 076 155 93 02
புனிதா சோதிநாதன் - 076 155 93 03
யோகதாசன் ஜேசுதாசன் - 076 155 93 04

தேர்தலை பொறுப்பேற்று நடாத்துவதற்காக பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.

அருண் மனோ ரகுநாதன்: 076 155 93 05
ஆனந்தி ஜெகன்மோகன்: 076 155 93 06
கருணா வேலுப்பிள்ளை: 076 155 93 07

இத் தேர்தலுக்காக சுவீடனில் 3 வாக்களிக்கும்நிலையங்களில் வாக்குப்பதிவுகள் நடைபெறவிருக்கிறது. அவை பற்றிய விபரம் பின்வருமாறு:

வாக்களிக்கும் நிலையம் 1 – Hallunda-Stockholm>,
வாக்களிக்கும் நிலையம் 2 ––Eskilstuna
வாக்களிக்கும் நிலையம் 3 – Helsingborg

தேர்தலில் வேட்பாளர்களாக தம்மை பதிவு செய்ய விரும்புவோர் தேர்தல் ஆணையத்துடன் உடன் தொடர்பு கொள்ளவும். வேட்பாளர் பதிவுக்கட்டணம் 500 குரோணர் (SEK). ஏப்ரல் 18ஆம் நாள் வரை (18.04.2010) வேட்பாளர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

சுவீடனில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான Npமலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள info@govtamileelam.org எனும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.

இவண்

விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்
தொடர்புகளுக்கு: info@govtamileelam.org


Comments