கனடிய தமிழ் இளையோரால் 11வது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த ஆண்டு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பாரிய இனப்படுகொலையை ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்கள் மீது நிகழ்த்தியிருந்தது.


மேமாதத்தை வலிசுமந்த மதமாக அறிவித்து கனடியத் தமிழ் இளையவர்கள் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துளார்கள்.


அதில் ஓர் அங்கமாக பல்கலைகழக மாணவர்களால் அவ்இனப்படுகொலையை செய்த அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றில் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ள வேண்டும் என்றும் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூறும் முக்கமாகவும் கனடியத்தமிழ் இளையவர்கள் பதினோராவது நாளாக தொடர் போராடமாக முன்னெடுத்துவருகின்றனர்.


அமெரிக்க துணைத் தூதுவரலயம் முன்பாக கூடிய இளையவர்கள் எமது மக்களின் துயரங்களை சர்வ்தேதுக்கு எடுத்துகாடும் முகமாவும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை போர்குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும் என்றும் பதாதைகளை தாங்கியவாறு நின்றனர்.


இதன்படி ரொறொண்டோவில் உள்ள அமெரிக்க துனைத்தூதுவரலயம் முன்பாக கூடிய மக்கள் தமது கவனயீர்ப்பு நிகழ்வை தமது வாயில் கறுப்பு துணியால் கட்டியவாறு பங்குகொண்டனர். இவ்கவனயீர்ப்பு நிகழ்வு நாள் தோறும் மே 19வரை தொடந்து நடைபெறவுள்ளது எனபது குறிப்படத்தக்கது.

Comments