மே18 ஜ் பயன்படுத்தி தமிழகத்தில் பெரும் சதிசெய்ய இலங்கை முஸ்தீப்பு

தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு தமிழகத்தில் இருக்கின்றது. அதன் அமைப்பாளர் பாலகுரு, அவருடன் "தமிழா தமிழா" என்ற பத்திரிக்கையை எப்போதாவது கொண்டுவரும் பாண்டியன் என்பவரும் சேர்ந்து கடந்த வாரம் ரகசியமாக கொழும்பு சென்றுள்ளார்கள்.

அவர்கள் அப்படி செல்வது தமிழகத்தில் உள்ள எந்த உணர்வாளர்களுக்கோ, அமைப்புக்கோ, தலைவர்களுக்கோ தெரியாது.

அவர்களின் திடீர் பயணம் ஏன் எதற்காக என்ற கேள்வி??

இந்த இருவரையும் அங்கே யார் அழைத்தது, எதற்காக அழைத்தார்கள் என்ற பெரும் சந்தேகம் எழுந்தது. இது குறித்து நாம் மேலும் துப்புத்துலக்கியதில் வெளிவந்த செய்திகள் திடுக்கிடும் தகவலாக அமைகிறது.

குறிப்பாக இவர்கள் இருவரும் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு இயக்க கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள். சில போராட்டங்களை நடத்தியவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கொழும்பு செல்ல 'விசா' அனுமதியை சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் எப்படி வழங்கியது என்ற கேள்வி? அப்படியே இங்கு தெரியாமல் கொடுத்திருந்தாலும் அங்கே கொழும்பிற்குள் இறங்கும் போது விசாரிக்காமல் தமிழர்கள் பகுதிக்குள் விடுவார்களா என்ற கேள்வி?

இவை ஒருபுறம் இருக்க தமது பிரயாணத்தின் நோக்கத்தை யாரும் சந்தேகப்படாமல் இருக்க இவர்கள் இருவரும் முதலில் சிவாஜிலிங்கத்தை, மரியாதை நிமிர்த்தமாகச் சந்தித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து வந்தவர்களாயிற்றே என்று சிவாஜிலிங்கமும் இவர்களிடம் பேசியிருக்கிறார். 'நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்க்க வந்தோம்' என இருவரும் கூறியிருக்கிறார்கள்.

குறிப்பாக தமிழ்நாட்டிற்கு திரும்பிச் சென்று அங்கு நடைபெறவுள்ள மே 18 நினைவுதினத்தை திசை திருப்பி, தேசிய தலைவர் உயிரோடு இல்லை என்ற கருத்தை, தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் பரப்பி, ராம் தான் இனித் தலைவர் என்ற கேட்பாட்டை வெளிக்கொண்டுவர இவர்கள் ஒரு பெரும் சதித் திட்டத்தை தீட்டியுள்ளனர்.

முதலில் தமிழகம் சென்று அங்கு நடைபெறவுள்ள, மே 18 நினைவுதினத்தில் ராமைப் பற்றிப் பேசுவது, பின்னர் படிப்படியாக புலம்பெயர் தேசத்திற்கு அதனை எடுத்துச் செல்வதே இவர்களுக்கு கிடைத்துள்ள கட்டளையாகும்.

ஒரு வாடகை கார் மூலம் யாழ்பாணம், வவுனியா என்று பல இடங்களுக்கும் சென்றுள்ளார்கள் இவர்கள். அந்த வாடகை காரை ஒட்டியது இலங்கையின் ராணுவ உளவு பிரிவை சேர்ந்தவர். பல இடங்களை சுற்றிய இவர்கள் இறுதியாக மட்டக்களப்பு சென்றுள்ளார்கள். அங்கு காடுகளில் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப்படும் விடுதலைப் புலிகளின் முன் நாள் உறுப்பினர் 'ரா'ம் அவர்களை இருவரும் சந்தித்தித்து, நீண்ட நேரம் பேசியுள்ளனர்.

ராம் அவர்களின் நோக்கம் தலைவர் இல்லை என்பதை வெளியில் சொல்ல வேண்டும். அதற்கு புலம்பெயர் தமிழர்களும் தயாராக இல்லை. தமிழகத்தில் உள்ள தமிழர்களும் தயாராக இல்லை. இந்த இருவர் மூலமாகவாவது கலகத்தை ஏற்படுத்தினால் சரியாக இருக்கும் என்பதே 'ராம் அவர்களின் திட்டம். ஈழத்தில் உள்ள தமிழர்கள் அப்படி பல குழுக்களாக இருக்கின்றார்கள். தமிழகத்தில் அப்படி அல்ல. அரசியல் ரீதியாக பிரிந்திருந்தாலும், இயக்கத்தை தவிர்த்துவிட்டு எதையும் பேசமாட்டார்கள். அப்படி இருப்பதை குழப்ப வேண்டும். அதற்கு அந்த இருவரையும் பயன்படுத்த வேண்டும் என்பதே 'ரா'மின் திட்டம். ராமை இயக்குவது இலங்கை புலனாய்வுத்துறை என்பது யாவரும் அறிந்தே.

அதுமட்டுமின்றி பல நாடுகளுக்கும் இவர்களை அனுப்பி வைக்கும் திட்டமும் அங்கே பேசப்பட்டிருக்கிறது. நேரில் பேசியபோதும் சரி, அதற்கு முன்பும் பின்பும் தொலைபேசியில் பேசிக்கொண்டபோதும் சரி 'பணத்தை பற்றி கவலை படவேண்டாம்' என்ற உத்தரவாதம் அடிக்கடி 'ரா'ம் அவர்களால் வழங்கப்பட்டிருக்கிறது.

'ரா'ம் அவர்கள் உண்மையிலேயே காட்டிற்குள்தான் இருக்கின்றார். அவருக்கு சில தமிழர்கள் ரகசியமாக உதவிகொண்டிருக்கிறார்கள். மிக கஷ்டத்தில் இருக்கும் அவரை பற்றியும், அவருடன் உள்ள போராளிகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ளாமல் குறை சொல்லகூடாது. அவர் எங்கே இருக்கின்றார் என்பதைகூட தெரிந்துகொள்ளாமல் அவர்மீது வீண் பழியை சொல்லக்கூடாது என்பதெல்லாம் (பாலகுரு, பாண்டியனின் வாதமாக தமிழகத்தில் இருக்கின்றது.) ஆனால் கஷ்ட நிலையில் இருக்கும் அவர்கள் எப்படி 'பணத்தை பற்றி கவலைப்படாதீர்கள்' என்று அந்த இருவருக்கும் கூற முடியும்.

இது இவ்வாறிருக்க இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு பிரபல அருட்தந்தை ஒருவரிடம் தொடர்பைப் பேணிவருவதாகவும், அவரிடம் பணம்பெற்று சில காரியங்களை நகர்த்திவருவதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது. பாலகுரு மற்றும் பாண்டியன் போன்றோர், தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஊடுருவா வண்ணம் நாம் விழிப்பாக இருக்கவேண்டும். ராமை ஒரு தளபதிபோல உருவாக்கி, போராட நினைக்கும் அல்லது போராட்டத்திற்கு உதவ நினைக்கும் தமிழர்களிடம் இருந்து பணத்தைப் பறிப்பது மட்டுமல்லாது, போராட்டம் ஒன்று இருப்பது போன்ற தோற்றப்பாட்டை வெளிக்காட்டி, அதனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயல்கிறது இலங்கை புலனாய்வுப் பிரிவு. இனி வரும் காலங்களில் இவை கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறும். இதனை தமிர்களாகிய நாம் ஒன்றிணைந்து முறியடிக்கவேண்டும்.

சமீபத்தில் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் அனுப்பப்பட்ட சில தமிழர்கள் இத்தாலியில் கைதான விடையம் யாவரும் அறிந்ததே. ஆனால் இது குறித்து எவரும் தகவல் கூறவில்லை. இத்தாலியத் தமிழர்களுக்கு இது குறித்து மேலதிக விபரம் தெரிந்தால் தெரியப்படுத்தவும். அனுப்பப்பட்ட உளவாளிகள் யாருடன் இருந்தார்கள் அவர்கள் யார் யாருடன் தொடர்புகளைப் பேணிவந்தார்கள் என்பது போன்ற தகவல்களை தமிழ் மக்கள் அச்சமின்றி பரிமாறிக்கொள்ளவேண்டும். இதன் மூலமே நாம் ஒரு வலைப் பின்னலை உருவாக்கி அதனூடாக இலங்கை புலனாய்வுப் பிரிவின் எல்லை கடந்த பயங்கரவாதத்தை ஒடுக்க முடியும்.

Comments