சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் அனுப்பப்பட்ட 9 தமிழர்கள் இத்தாலியில் கைது! திடுக்கிட வைக்கும் தகவல்கள்!!

Italyசிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் இத்தாலிக்கு அனுப்பப்பட்ட ஒன்பது தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்நாட்டில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்த இவர்கள் ஒன்பது பேரும் தாம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு நடவடிக்கைக்காக இத்தாலிக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்ததை அடுத்து, இவர்கள் அனைவரையும் இத்தாலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் வருமாறு:-

அருமைநாதன் கிருஷ்ணஜெகன் (வயது 22) - சாவகச்சேரி

கோபாலகிருஷ்ணன் கிருஷ்ணன் (வயது 20) - சாவகச்சேரி

கஜிதா ரஞ்சிநாதன் (வயது 23) - யாழ்ப்பாணம்

சிவநேஸ்வரன் கோகிலதாஸ் (வயது 31) - காரைநகர்

தர்மதுரை சிறீதரன் (வயது 26) - யாழ்ப்பாணம்

ஸ்டாலின்ராசா துஷ்யந்தன் (வயது 29) - யாழ்ப்பாணம்

தர்மகுலசிங்கம் துஷ்யந்தன் ( வயது 24) - மானிப்பாய்

எட்வேர்ட் ஜேசுஜெய்சன் (வயது 27) - பேசாலை

நந்தகுமார் உதயபுத்திரன் (வயது 25) - உடுவில் ஆகியோரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் போர் வன்னியில் கடைசி நேரப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து சேர்நதார்கள் என்றும் அவ்வாறு வந்தவர்கள் சிறிலங்கா இராணுவத்தினார் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

Arested_Teamஅங்கிருந்து பாதுகாப்பு அமைச்சின் விசேட நடவடிக்கைக்காக இத்தாலிக்கு அனுப்பப்பட்டார்கள் என்றும் தம்மை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைச்சர் ஒருவரின் உதவியாளர்கள் கொண்டுவந்து இறக்கிவிட்டு சென்றார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இத்தாலிக்கு வந்த தம்மை அங்குள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணிபுரியும் கிருஷ்ணன் என்பவர் வந்து சந்தித்தார் என்றும் இவர் இத்தாலியில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அபி வெனவுன் அபி என்ற நிதி சேகரிக்கும் திட்டத்துக்கு தலைவராக செயற்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கடைசியில் இத்தாலியில் பலரிவோ நகர ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் கைது தொடர்பாகவும் இவர்கள் தெரிவித்துள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கை குறித்தும் சிறிலங்கா இராணுவப்பேச்சாளருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் அதனை மறுத்துள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இவ்வாறு யாரையும் இத்தாலிக்கு அனுப்பவில்லை என்றும் புனர்வாழ்வு முகாமில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கும் இராணுவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments