நியூசிலாந்தில் முதலாவது உத்தியோகபூர்வமான முடிவுகள் அறிவிப்பு!!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான மக்கள் பிரதிநிதிகள்!

நியூசிலாந்தின் Auckland நகரம் உள்ளடங்கிய வடக்குத் தீவின் மேல் அரைப்பங்குப் பகுதிக்குரிய (upper half of the North Island including Auckland) பிரதிநிதியாக திரு தேவராஜன் ஆறுமுகம் அவர்களும் வெலிங்டன் நகரம் உள்ளடங்கலான நியூசிலாந்தின் ஏனைய பகுதிகளுக்கான பிரதிநிதியாக கலாநிதி சிவபாதம் நகுலேஸ்வரன் அவர்களும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என முதன்மைத் தேர்தல் ஆணையாளர் திரு John Minto அவர்கள் அறிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை மக்களிடையே அறிமுகம் செய்வதற்கான சிறப்பு விழாவொன்று ஆக்லாந்து, வெலிங்டன் இரு நகரங்களிலும் இன்று (மே 2 ஆம் நாள்) நியூசிலாந்து நேரப்படி மாலை 7 மணியளிவில் ஆரம்பமாகி ஒரே நேரத்தில் நடந்தேறியுள்ளது.

இவ்விரு நிகழ்வுகளும் காணொளி மூலம் இணைக்கப்பட்ட வகைகியில் பேச்சாளர்கள் இரு அரங்குகளிலும் உரையாற்றும் வாய்ப்பு எற்படுத்தப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையாளர்கள் திரு John Minto வணபிதா Gerard Burns இருவரும் தமது உரையில் பல்வேறு இன்னல்கள் மத்தியிலும் உலகளாவிய ரீதியில் நடாத்தப்படுகின்ற ஜனநாயக வழிமுறைத் தேர்தல்கள் மெச்சத்தக்கவை எனக் குறிப்பிட்டுள்ளார்கள். நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான தொழிற்கட்சியினைச் சேர்ந்த பேராசிரியர் இராஜேந்திர பிரசாத், பசுமைக்கட்சியினைச் சார்ந்த திரு Keith Locke இருவரும் கலந்து கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இப் புதுமையான முயற்சியையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் பாராட்டி உரை நிகழ்த்தினர்.

இவ் விழாவின் போது காணொளி மூலம் உரையாற்றிய திரு. ருத்திரகுமாரன் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூன்றாவது கட்டமாகப் புதியதளத்தில் இன்று உருவாக்கப்படுவதை குறித்துக் கொண்டதோடு எமது உலகளாவிய முயற்சியின் முதலாவது உத்தியோகபூர்வமாக முடிவுகளாக நியூசிலாந்தின் முடிவுகள் அமைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

Comments