கைதானவர்கள், சரணடைந்தவர்கள் , உயரதிகாரிகள் உத்தரவால் சுட்டுக்கொண்றோம்: இராணுவம் வாக்குமூலம்

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகொலை செய்யப்பட்ட காணொலியை வெளியிட்ட சனல் – 4 தொலைக்காட்சி, அவ்வாறு இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது.





இந்த புகைப்படங்கள் சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவரினால் எடுக்கப்பட்டவை என்று சனல் – 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தினுள் கண்மூடித்தனமான – அகோர – எறிகணை மற்றும் விமான தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டதை அடுத்து, அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகாயங்களுடன் திக்குத்திசை தெரியாது ஓடினர். இதன்போது, இராணுவத்தினரால் பெருந்தொகையானவர்கள் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பலரை சிறிலங்கா இராணுவத்தினர் நிர்வாணமாக்கி கைகள் பின்னால் கட்டப்பட்டு கண்களும் கட்டப்பட்ட நிலையில் வெட்டவெளி புற்தரைகளில் அமர்த்தி பின்புறமாக தலையில் சுட்டு படுகொலை செய்த காணொலியை சனல் – 4 தொலைக்காட்சி கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியிட்டிருந்தது.

இந்த காணொலியின் உண்மைத்தன்மையை பன்னாட்டு சுயாதீன அமைப்புக்கள் உட்பட ஐக்கிய நாடுகள் சபையின் படுகொலைகளுக்கு எதிரான அமைப்பும் உறுதிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சிறிலங்கா இராணுவத்தினால் பிடிக்கப்பட்ட சிறுவர்கள் உட்பட பல ஆண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடங்கு ஒன்றில் வரிசையாக உட்காரவைக்கப்பட்டிருக்கும் படங்களை சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவரிடம் பெற்று சனல் – 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது.

அத்துடன், கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியிட்ட காணொலி தொடர்பாக மேலும் ஆதாரங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் அந்த படுகொலைகளை மேற்கொண்ட சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவரினதும் போர் முனையில் கடமையிலிருந்த இராணுவ தளபதிகளில் ஒருவரினதும் கருத்தினையும் சனல் – 4 தொலைக்காட்சி மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.

“எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்” – என்று படுகொலைகளை மேற்கொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் சனல் – 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார் என்றும் -

” விடுதலைப்புலிகளின் முக்கியமானாவர்கள் எவரையும் வைத்துப்பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்கவேண்டும்” – என்று சிறிலங்கா இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர் சனல் – 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்று கேட்டபோது, குறிப்பிட்ட சிறிலங்கா இராணுவ சிப்பாய் பதிலளிக்கையில் -

முதலில் நாங்கள் அவர்களை கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். பின்னர் கொலை செய்தோம். போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம். பெருந்தொகையான சடலங்கள் அங்கு காணப்பட்டன. அவ்வாறு கொலை செய்யுமாறு எமது தளபதி எங்களுக்கு உத்தரவிட்டார்” – என்று கூறினார்.

சனல் – 4 தொலைக்காட்சியினால் தொடர்புகொள்ளப்பட்ட குறிப்பிட்ட சிறிலங்கா இராணுவத்தின் மூத்த தளபதி மேலதிக தகவல் ஒன்றினை தெரிவிக்கையில் -

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 13 வயது மகன் சிறிலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அவரது தந்தையார் – தலைவர் பிரபாகரன் – எங்கு உள்ளார் என்று விசாரணை செய்யப்பட்டு பின்னர் சுடப்பட்டார் என்று கூறியுள்ளார்.

இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்து பிரிட்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்திடம் சனல் – 4 செய்தி நிறுவனம் கேட்டபோது -

சிறிலங்கா படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர் அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் எற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை.

சனல் – 4 தொலைக்காட்சியினால் தற்போது வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து தற்போது நான் எந்த பதிலும் கூறமுடியாது. இது தொடர்பான காணொலியை அனுப்புங்கள். அதன் பின்னர் அது குறித்து கருத்து கூறமுடியும்.

சிறிலங்கா படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரச அதிபர் குழு ஒன்றினை நியமித்துள்ளார் – என்று பிரிட்டனுக்கான சிறிலங்கா தூதுவர் பதிலளித்துள்ளார்.

தாம் மக்கள் வாழும் முள்ளிவாய்க்கால் பகுதியில் கனரக ஆயுதங்கள் எதனையும் பாவிக்கவில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தது இலங்கை இராணுவம். (கடந்த வருடம்) இருப்பினும் சனல் 4 தொலைக்காட்சிக்கு இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கொடுத்த படங்களில், கடற்கரை ஓரமாக பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள் நடாத்தப்படுவதையும் இங்குள்ள படங்களில் காணலாம்.


அத்தோடு இரண்டு பெண்களின் கைகளைக் கட்டி அவர்களை சுட்டுக் கொண்றுள்ள படமும் இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை.



இந்தப் பெண்போராளி, வேலி குறும்படம் "வேலி" இல் நடித்த இசைப்பிரியாவா ?? துவாரகாவின் புகைப்படத்தில் உண்மை இல்லை: சீமான் பேட்டி-காணொளி

இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்களின் கைகளைக் கட்டி தலையில் சுடும் காட்சிகள் கடந்த ஓகஸ்ட் மாதம் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது யாவரும் அறிந்ததே. ஆனால் அதில் சுடப்படும் நபர்கள்களை இலங்கை இராணுவம் முதலில் எடுத்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.



Comments