கன்னட, ஆந்திரா, மலையாள திரை உலகினர் இலங்கை விழாவில் கலந்து கொள்ள மறுப்பு

தமிழர்களைப் புண்படுத்தும் ஒரு நிகழ்வுக்கு நான் போகமாட்டேன்: நடிகர் மம்முட்டி

தமிழர்களைப் புண்படுத்தும் ஒரு நிகழ்வுக்கு நான் போகமாட்டேன் என்று கூறினார் மம்முட்டி. இலங்கையில் நடக்கும் ஐஃபா விழாவில் பங்கேற்க இந்திய திரை நட்சத்திரங்களுக்கு அழைப்பு மேல் அழைப்புவிடுத்து வருகிறது சிறீலங்கா அரசும் ஐஃபா நிறுவனமும்.
http://www.india-server.com/news-images/mammootty-launches-reality-show-to-find-9621.jpg
இந்த விழாவுக்கு ஃபிக்கி எனப்படும் இந்திய தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு வணிக ஆதரவு தந்துள்ளது. சிறீலங்கா அரசு 9 மில்லியன் டாலர்களை இந்த விழாவுக்கு செலவழிக்கிறது. ஆனால் 126 மில்லியன் டாலர் வருவாய்க்கு ஃபிக்கி நிறுவனம் உத்தரவாதமளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த உண்மை வெளியில் தெரிய வந்தபிறகே, தமிழ் உணர்வாளர்கள் ஃபிக்கிக்கு எதிராகவும் அதில் பொறுப்பு வகிக்கும் நடிகர் கமல்ஹாஸனுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஃபிக்கி அமைப்பு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று கமல் அறிவித்திருந்தாலும், வணிக ஆதரவை ஃபிக்கி விலக்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், தமிழ்த் திரையுலகில் ரஜினி உள்ளிட்ட யாரும் இந்த விழாவில் பங்கேற்கமாட்டார்கள் என முதலிலேயே அறிவிக்கப்பட்டது. அமிதாப்பின் குடும்பத்திலிருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்து தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பினர், இந்த விழாவுக்கு இந்திய நட்சத்திரங்கள் யாரும் போகக் கூடாது என்றும் அப்படிச் செல்பவர்களின் படங்களை தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் திரையிட விடமாட்டோம் என்றும் பகிரங்கமாக எச்சரித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பாலிவுட்டின் முதல்நிலை நடிகர் ஷாரூக்கானும் இந்த விழாவுக்குப் போவதைத் தவிர்த்துவிட்டார். சல்மான்கான், ஹ்ரித்திக் ரோஷன், லாரா தத்தா என சிலர் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

இன்னொரு பக்கம் தென்னிந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் மம்முட்டி, மோகன்லால், புனித் ராஜ்குமார், வெங்கடேஷ் போன்றவர்கள் ஐஃபா விழாவில் பங்கேற்கமாட்டோம் என தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மம்முட்டியிடம் கருத்து கேட்டபோது,

இந்த விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். ஆனால் இது தமிழரின் உணர்வுகளுக்கு எதிரானதாக ஏற்கெனவே எனக்குத் தெரிந்திருந்தது. எனவே இந்த விழாவுக்குப் போவதில்லை என முடிவெடுத்து அறிவித்துள்ளேன்.

தமிழர்கள் எனக்கு முக்கியம். சென்னை எனக்கும் சொந்த நகரம்தான். தமிழர்களோடு இரண்டறக் கலந்த நான் அவர்களைப் புண்படுத்தும் ஒரு நிகழ்வில் பங்கேற்பேன் என எதிர்ப்பார்ப்பது தவறு என்றார்.

வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்!-நமீதா
ஐஃபா விழாவில் பங்கேற்க வருமாறு நடிகை நமீதாவுக்கு ஐஃபா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை புறக்கணித்துள்ளதோடு, தமிழர் நலனுக்கு எதிரான எந்த நிகழ்விலும் நான் பங்கேற்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஐஃபா விழாவின் முதல்நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு நடனமாட நடிகை நமீதாவுக்கு ஐஃபா அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக பெரும் தொகை ஒன்றையும் வழங்க இலங்கை அரசு மற்றும் ஐஃபா நிர்வாகம் நமீதாவை அணுகியுள்ளது.

ஆனால், இந்த வாய்ப்பை அவர் ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டார். இதுகுறித்து நமீதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஐஃபா விழாவுக்காக என்னை சில தினங்களுக்கு முன்பே அணுகினார்கள். என்னை இந்த விழாவில் நடனமாட அழைத்தார்கள். அதற்காக பெரும் தொகையும் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இங்கே இந்த பிரச்சனை இருப்பது தெரிந்த பிறகும் எப்படி நான் போக முடியும்.

எனக்கு சோறு போட்டது தமிழ் மக்கள்தான். இன்று இந்த அந்தஸ்து வந்தததும் அவர்களால்தான். எனவே யாரும் சொல்வதற்கு முன்பே மறுத்துவிட்டேன். வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

---
கொழும்பு இந்தியத்திரைப்பட விழாவில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் விபரம்

கொழும்பில் வரும் ஜூன் 3,4,5 தேதிகளில் நடக்கும் ஐஃபா விழாவில் ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான், கத்ரீனா கைஃப், லாரா தத்தா, ப்ரியங்கா சோப்ரா, அக்ஷய் குமார் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஐஃபா இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில், ஐஃபாவின் புதிய தூதராக சல்மான்கான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வட இலங்கையின் நடக்கும் அபிவிருத்திப் பணிகளில் ஐஃபா அறக்கட்டளையுடன் இணைந்து அவர் செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ஷாரூக்கான் பங்கேற்று நடனம் ஆடுகிறார். நடிகைகள் தீபிகா படுகோன், மல்லிகா ஷெராவத், 3 இடியட்ஸ் படக்குழு, சாயிஃப் அலிகான், ஜான் ஆப்ரகாம் போன்ற கலைஞர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

ஐஃபா விழாவில் பங்கேற்கும் இந்திய நடிகர்களின் எந்தப் படமும் இனி தென்னிந்தியாவில் வெளியாகாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்திப் படங்களுக்கு பெங்களூர், மைசூர், சென்னை, ஐதராபாத், விஜயவாடா, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி நகரங்கள் முக்கிய வருவாய் ஆதாரங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஷாரூக்கானுக்கு சென்னையில் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சன் என அமிதாப் குடும்பத்துக் கலைஞர்கள் மட்டுமே தமிழ் அமைப்புகள் வேண்டுகோளை மதித்து ஐஃபா விழாவில் பங்கேற்க மாட்டோம் என வெளிப்படையாக அறிவித்துள்ளனர். மற்ற நடிகர்கள் இதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

தென்னிந்தியாவின் பிற மொழிக் கலைஞர்களான மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ், நாகார்ஜூன், புனித் ராஜ்குமார் போன்றவர்கள் ஏற்கெனவே இந்த விழாவைப் புறக்கணித்துவிட்டதாகக் கூறியுள்ளனர். தங்களின் நிலையை சம்பந்தப்பட்ட திரைப்பட சங்கங்களுக்கும் தெரிவித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதா ரவி நேற்று கூறினார்.

திரையுலக அமைப்புகளின் இந்த அறிவிப்பையும் தாண்டி பாலிவுட் பிரபரலங்கள் ஐஃபா விழாவில் பங்கேற்பார்களா… அப்படி பங்கேற்றால் கண்டிப்பாக தடை அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

------------
கன்னட, ஆந்திரா, மலையாள திரை உலகினர் இலங்கை விழாவில் கலந்து கொள்ள மறுப்பு


* இவ் விடயம் 31. 05. 2010, (திங்கள்), தமிழீழ நேரம் 20:57க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள்

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வேண்டுகோளை ஏற்று கன்னட, ஆந்திரா, மலையாள திரை உலகினர் இலங்கை விழாவில் கலந்து கொள்ள போவது எல்லை என அறிவித்து உள்ளனர் .

வருகிற ஜூன் 4 ,5 ,6 ஆகிய தேதிகளில் இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் சர்வதேச இந்திய திரை பட விழாநடை பெற இருக்கிறது.இந்த திரை பட விழாவுக்கு தமிழ் திரை உலக நடிகர் நடிகைகள் யாரும் கலந்து கொள்ள போவது இல்லை அறிவித்து இருந்தனர்.

தற்பொது இந்திய திரை உலக நடிகர்கள் கலந்து கொள்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தன.

இதையடுத்து இலங்கை படவிழாவுக்கு செல்லும் நடிகர், நடிகைகள் வீடுகளில் முற்றுகை போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தியாவில் இருந்து நடிகர், நடிகைகள் யாரும் இலங்கை பட விழாவுக்கு செல்லக்கூடாது என்றும், மீறி சென்றால் அவர்கள் படங்களை தியேட்டர்களில் திரையிட தடைவிதிக்கப்படும் என்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட திரைத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இலங்கை படவிழாவில் கலந்து கொள்வதில்லை என்று ரஜினி, கமல் ஆகியோர் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டனர். மணிரத்னம் ராவணன் படத்தை இவ்விழாவில் திரையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் தற்போது இவ்விழாவுக்கு செல்லவில்லை.

ராவணன் படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இப்படத்துக்கு சிக்கல் வரும் என்பதால் அதில் நடித்த ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் ஆகியோரும் கொழும்பு படவிழாவை புறக்கணித்து விட்டனர்.

இலங்கையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்படத் துறையினர் யாரும் கலந்து கொள்ள கூடாது என்றும், அவ்வாறு கலந்து கொள்ளும் அனைத்து இந்திய நடிகர்கள், தொழில் நுட்ப கலைகர் அனைவருக்கும் தென் இந்திய திரை பட துறை ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் மீறி கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகளின் திரை படங்கள் தென் இந்தியாவில் திரை இட விட மாட்டோம் என்றும் இந்த திரை பட விழாவை வேறு எந்த நாடுகளிலாவது நடத்துங்கள் என்று விழா குழுவினரை கேட்டு கொள்ளவும் வட இந்திய நடிகர்களும் இவ்விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவும் 15 பேர் கொண்ட குழு ஒன்று மும்பை செல்லவும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வேண்டுகோளை ஏற்று கன்னட, ஆந்திரா, மலையாள திரை உலகினர் இலங்கை விழாவில் கலந்து கொள்ள போவது எல்லை என அறிவித்து உள்ளனர் .

மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், திலீப், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஸ், நாகர்ஜுனா, புனித் ராஜ்குமார் ஆகியோரும் இலங்கை விழாவை புறக்கணித்துவிட்டதாக அறிவித்து உள்ளனர்..

அமிதாப்பச்சனும் இவ்விழாவுக்கு போகமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிருத்திக்ரோசன் உள்ளிட்ட சில இந்தி நடிகர், நடிகைகள் மட்டும் இலங்கை விழாவுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அவர்களின் படங்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களிலும் திரையிட தடைவிதிக்கப்படும் என தெரிகிறது.

-----------------------------

தமிழக உறவுகளின் எழுச்சிக்கு தலைசாய்க்கும் பொலிவூட் பச்சான் குடும்பம்!

தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு தலைசாய்த்து கொழும்பு செல்வதைத் தவிர்ப்பதற்கு பொலிவூட் திரையுலகின் பச்சான் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழீழ மக்களை வகைதொகையின்றி கொன்றுகுவித்து நரபலி வேட்டையாடிய சிங்கள தேசத்தின் தலைநகரில் அனைத்துலக இந்திய திரைப்பட விழா இடம்பெறுவதை ஆட்சேபித்து, தமிழக உறவுகளால் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பின்புலத்தில் தமிழக உறவுகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து கொழும்பு செல்வதை தவிர்ப்பதற்கு இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சான், அபிசேக் பச்சான், ஐஸ்வர்யாராய் பச்சான் ஆகியோர் முடிவு செய்திருப்பதாக இந்தியாவின் NDTV தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

Comments