மதுரையில் வலி சுமந்த வாரத்தின் முதல்நாள் நிகழ்வு மதுரையில் நடைபெற்றது

கடந்த ஆண்டு மே மாதம் 1 முதல் 18 வரை ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமக்காகஇபாதுகாப்புக்காக போராடிய இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கான பேர் ஈவு இரக்கமற்ற வகையில் கொத்து குண்டுகள் வீசி கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் மே 18 ஆம் நாள் முக்கிய தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இது தமிழர்களின் இதயங்களில் மிக பெரிய வலியை ஏற்படுத்தியது. இந்த வலி சுமந்த மாதத்தில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 12 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த உள்ளோம். அதைத் தொடர்ந்து 18 ஆம் தேதி வரை ஒவ்வொரு நகரிலும் மாலை 1 மணி நேரம் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என புதிய தமிழகம் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அறிவிப்பு கடந்த வாரம் அறிவிப்பு செய்திருந்தார்.

அதன்படி இன்று மாலை மதுரையில் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மதுரை மேலமாசி வீதி-வடக்கு மாசி வீதி சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏற்றி வலி சுமந்த வாரத்தின் முதல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர்கள் தொண்டர்கள்இ தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் கூறியதாவது:-

நாளை திருநெல்வேலி 14-ஆம் தேதி திருச்சிஇ15-சேலம்இ 16 கோயம்முத்தூர் 17- விழுப்புரம் 18- சென்னையிலும் நடைபெறும்.தமிழ் மக்கள் ஜாதிஇ மதம் மற்ற வேறுபாடுகள் மறந்து தமிழர் என்ற அடையாளத்துடன் இந்த வலிசுமந்த வார நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

Comments