நாடு கடந்த தமிழீழ அரசு: அவுஸ்திரேலிய வேட்பாளர்களின் விவரம் அறிவிப்பு

நாடு கடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளை நியு சவுத்வேல்ஸ் மாநிலத்தில் தெரிவுசெய்வதற்கான தேர்தல், எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், மேலும் இரு வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தாமதமாக கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் வட, தென் மற்றும் மேற்கு மாநிலங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கும் காலப்பகுதியும் நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது தாமதமாக கிடைத்துள்ள இரண்டு வேட்பாளர்களையும் உள்ளடக்கி, மொத்தமாக எட்டு வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக அவுஸ்திரேலியா தேர்தல் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துக்கொள்கின்றது.

இதன்படி தற்போது வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களின் விபரங்கள் வருமாறு:

நியு சவுத்வேல்ஸ் மாநிலம் (ஒதுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் – 04)

1. திரு. சிவசம்பு பிரபாகரன்
2. திரு. விக்ரர் ராஜகுலேந்திரன்
3. திரு. ஞானேந்திரன் அருச்சுனன்
4. திரு. குணசிங்கம் தர்சன்
5. திரு. பாலசிங்கம் பிரபாகரன்
6. திரு. சஞ்சயன் குலசேகரம்
7. திரு. இராமலிங்கம் கருணாநிதி
8. திரு. சேரன் சிறிபாலன்

விக்ரோரிய மாநிலம் (ஒதுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் – 03)

1. திருமதி. ஜனனி பாலசந்திரன்
2. திரு. டொமினிக் சந்தியாப்பிள்ளை
3.
திரு. துரைசிங்கம் சண்முகானந்தகுமார்

அவுஸ்திரேலிய மைய மற்றும் தாஸ்மனியா மாநிலங்கள் (ஒதுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் – 01)

1. திருமதி. அபிராமி விசுவநாதன்

குயின்ஸ்லாந்து மாநிலம் (ஒதுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் – 01)

1. பேராசிரியர் இளையதம்பி செல்வநாதன்

வட, தென் மற்றும் மேற்கு மாநிலங்கள் (ஒதுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் – 01)

வட, தென் மற்றும் மேற்கு மாநிலங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு வேட்புமனுவானது உரியமுறையில் சமர்ப்பிக்கப்படாததால், இதற்கான புதிய வேட்புமனுக்களை, சமர்ப்பிப்பதற்கான காலப்பகுதி எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மாநிலங்களில், போட்டியின்றி வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் அனைவரும், நாடு கடந்த தமிழீழ அரசிற்கான அவுஸ்திரேலியாவின் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்பதை அறியதருகின்றோம். அதன்படி தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின் பிரதிநிதிகளின் விபரங்கள் வருமாறு:

1. திருமதி. ஜனனி பாலசந்திரன்
2. திரு. டொமினிக் சந்தியாப்பிள்ளை
3. திரு. துரைசிங்கம் சண்முகானந்தகுமார்
4. திருமதி. அபிராமி விசுவநாதன்
5. பேராசிரியர் இளையதம்பி செல்வநாதன்

நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் மேலதிகமாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால் அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட்டு நான்கு பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதற்கான தேர்தல், எதிர்வரும் 22 – 05 – 2010 அன்று சனிக்கிழமை நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

நடைபெறவுள்ள இத்தேர்தல் பற்றியும் ஏனைய மேலதிக விபரங்களும் விரைவில் www.tgte-au.info என்ற இணையதளம் ஊடாகவும், தமிழ் ஊடகங்கள் ஊடாகவும் வெளியிடப்படும் என்பதை அறியதருகின்றோம்.

தேர்தல் ஏற்பாட்டுக்குழு

Comments