தீராத தேசியப் பிரச்சினைக்குத் தொடரும் “பயங்கரவாத ஒழிப்பு”, அணுகுமுறை

ஈழுத்தமிழரின் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கு சூழ்நிலைக் கைதியான செல்வராசா பத்மநாதனைக் கொழும்பு பாவிப்பதிலிருந்து இலங்கையின் தீராத தேசியப் பிரச்சனையைப் பயங்கரவாதத்திற்கு எதிரான அணுகுமுறையையே சில சக்திகள் தொடர்ந்து பாவிக்க முயல்கின்றன எனத் தமிழ்வட்டார அவதானிகள் கூறுகின்றனர்.

வாஷிங்டனுக்கு G.L.பீலிஸ் சென்ற பின், ஒரு அரசியல் அஸ்திவாரமும் இல்லாது புலம்பெயர்ந்த மக்களை ஈர்க்கும் எண்ணத்துடன் கூடியதும், ராபர்ட் பிளேக் இன்னும் “சில பிரிவினைகள்” இருக்கின்றன எனக் கூறுவதுமாக எடுக்கப்பட்ட முயற்சிகள் ஆகும். கடந்த சிலவாரங்களுக்குள் பல வெளிநாட்டுப் பிரமுகர்கள் இலங்கைக்குச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. ஓரே சமயத்தில் நல்லதும் கெட்டதுமான இரட்டை முகங்களைக் காட்டும் மேற்கு நாடுகளால் கையாளப்பட்ட ஒரு தொடர்ந்த நடவடிக்கைக் கோர்வையில் இதெல்லாம் ஒரு பகுதியாகும். கே.பி.யின் கொழும்பு விடயமானது வெளிநாட்டில் பயிற்றப்பட்ட இலங்கை இராணுவ உளவுத்துறையால் கையாளப்பட்டு வருகிறது.

கே.பி.யின் ஊடாகத் தமிழ் இனஉணர்வாளர்களை உள்வாங்கி, அவர்களுடன் பேசுவதன் மூலம் புலம்பெயர்ந்த மக்களின் பணத்தைச் சுரண்டுவதும், அதற்கு அவர்கள் ஒத்துவராவிடில், அவர்களை எப்படிக் கையாள்வதும் என்பதே பிந்தி அமையும் திட்டமாகும். இதன்பொருட்டு புலம்பெயர் தமிழர்கள் பகுதி பகுதியாகக் கையாளப்படுவர். கே.பி.யின் திட்டங்கள் நடைபெறும் அதே சமயம் இன்னுமொரு புலம்பெயர் தமிழ் மக்கள் குழு டக்ளஸ் தேவானந்தாவுடன் கூட்டங்களைக் கொழும்பில் நடத்துகிறது.

கோத்தபைய இராஜபக்சேவின் நிலைமைப்படி புலம்பெயர் மக்களுடன் முன்பு நடந்ததைவிட்டு எதிர்காலம் பற்றிய பேச வேண்டும் என்று கூறுகையில், G.L.பீலிஸ் சிங்கள மக்களின் ஆணையில்லாது அரசியல் தீர்வைப் பற்றிப் பேச முடியாது எனக் கூறுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதே சமயம் மகிந்தா இராஜபக்சேவின் தமிழின ஒழிப்புத் திட்டம் எல்லோரும் நன்கு அறிந்ததொன்றே ஆகும்.

எனினும், புலம்பெயர் தமிழ் மக்களைக் கொழும்பு பயமுறுத்த முயல்வதைச் சில சர்வதேச சக்திகள் தமிழ் மக்களை இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழ் மக்களை காட்டிப் பயமுறுத்த உடன்படுகின்றன. தமிழ் அரசியல்வாதிகளான யோகி, புதுவை இரத்தினதுறை ஆகியோருக்கு என்ன நடந்தது என்பதை கொழும்பு ஒழிக்க முற்பட்டபோதும், அவர்களுக்குச் சிறீலங்கா அரசால் என்ன நடந்தது என்ற பயம் இன்னும் நிலவுகிறது.

அமெரிக்காவிடம் இலங்கையைக் காட்டிக்கொடுக்கத் தேவையான சாட்சியங்கள் எல்லாமிருந்தும், அவற்றை அது தனது “பண்டமாற்றுத் தேவை” க்கே பாவிக்குமெனத் தமிழ் வட்டாரங்கள் கூறுகின்றன. யுத்தம் உக்கிரமமாக நடைபெற்றப் போதும், அதற்கு முன்பும் அமெரிக்காவும் இந்தியாவும் நெருக்கமாக இலங்கை நிலவரம் பற்றி ஒருங்கிணைந்து செயற்பட்டன என அமெரிக்க வெளிநாட்டு அதிகாரியொருவர் கூறுகின்றார். இந்தியா இன்றும் தமிழ் தேசிய உரிமையை ஒரு பண்டமாற்றுப் பொருளாக இன்னும் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது.



எனினும் மகிந்தா இராஜபக்சேவினால், உளுத்துப்போன 13-வது திருத்தச் சட்டத்தைக்கூட அவரால் அமுல்படுத்த முடியவில்லை என அவதானிகள் கூறுகின்றனர். மேற்குலகை நம்பியும், சீனா உட்பட்ட பல நாடுகளை நம்பியும் இருக்கும் இலங்கை சீப்பா (CEPA) ஒப்பந்தத்தை இந்தியாவுடன் கையொப்பமிடுவதும் தற்போது கேள்விக்குறியிலேயே உள்ளது. தமிழ் நாட்டு அரசியலும் கொழும்புக்குச் சவாலாக அமையாத ஒரு கோமாளிக் கூத்தாகவே கருதப்படுகிறது. கொழும்பு அரசு டக்ளஸ் - கே.பி.யை பாவிக்க முற்படும்போது தமிழ் தேசிய சபை இந்தியாவின் உதவியுடன் என்ன செய்ய முடியும் என்பதும் ஒரு புதிராக உள்ளது.

புலம்பெயர் மக்களின் தமிழ் அபிலாட்சைகளைத் தழுவி வரும் எல்லா அரசியல் அமைப்புகளும் கொழும்பாலும், “பயங்கரவாத எதிர்ப்பு”ச் சக்திகளாலும், கே.பி.யாலும் புறக்கணிக்கப்படும் எனக் கே.பி.யுடன் தொடர்புள்ள தமிழ் வட்டாரங்கள் கூறுகின்றன. சர்வதேச சமூகங்களின் போக்கில் ஒரு மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என நாடு கடந்த தமிழீழ அரசைச் சார்ந்த (TGTE) ருத்திரகுமாரன் கூறுகிறார். ஈழத்தமிழர் தமது தேசியப் போராட்டத்தைத் தொடரும் வரை இவர்களது அச்சுறுத்தல்களும் தொடர்ந்து இருப்பதால் வுபுவுநு தன்னை இவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என அவர் கருதுகிறார்.

மேல்நாட்டு நிறுவனங்களின் போக்கை வெறுக்கும் சில தமிழ் பிரமுகர்கள் தற்போது பயங்கரவாத எதிர்ப்பு என்பது எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிப்பதோடு, இன்றைய புதிய அரசியலில் புலம்பெயர் சமூகம் ஒரு பங்கை வகிப்பதைத் தடுக்கும் முயற்சியுமாகப் பாவிக்கப்படலாம் எனக் கருதுகின்றனர்.

இதை மனதிற்கொண்டு ஒரு இடதுசாரி சிங்களவர் விடுதலை புலிகளின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறதென முள்ளிவாய்க்கால் போருக்கு முன்பே கூறியுள்ளார். கே.பி.யும் கடத்தப்படும் முன் இந்தியாவையோ, அமெரிக்காவையோ குறைக்கூற விரும்பவில்லை. கே.பி வெளிநாட்டு புலம்பெயர் மக்களின் அரசியல் அமைப்புகளைத் தன்வசப்படுத்த முயற்ச்சித்து வருகிறார்.

புயங்ஙகரவாதத்திற்கு எதிர் என எழுதும் ரோகன் குணரத்தனாவும், ஜெயராஜீம் அப்படி எழுதுவதன் மூலம் மறைமுகமாகச் சாதாரண தமிழ் மக்களை யார் யார் எந்த நிலைப்பாடு எடுக்கின்றார்கள் என்பதை யூகிக்க உதவுகின்றார்கள். செயலிழந்து நிற்கும் நெடியவனை அவரை தூற்றுவதன் மூலம் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க எத்தனிக்கிறார்கள்.

சூழ்நிலைக்கு அடிமைப்பட்டவர்கள் ஒருபோதும் அரசியல் தலைவர்களாக முடியாது. எனவே, புதிய தலைமுறையினர் அவர்களை இனங்கண்டு விழிப்பாய் இருத்தல் அவசியம்.

மூன்று பெரிய சக்திகளின் இடையே இழுபடும் இலங்கை அரசியலை எப்படி தமிழர்களின் அபிலாட்சைகளுக்குப் பாவிக்கலாம் என்பது முக்கியம். நாம் எமக்குள் சுதந்திரமான ஒரு அரசியலமைப்பை அமைத்து, அதனுடன் தனித்தனியே ஒவ்வொரு சக்தியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். சிங்கள முற்போக்குச் சகத்திகளுடன் தொடர்பு கொண்டு, அவர்களுடனும் இணைந்து, சிறிய அளவிளாகினும் திட்டங்களை வகுக்க வேண்டும். “பயங்கரவாத எதிர்ப்பு” மேன்மேலும் விரிசலை உண்டாக்குமேயல்லாது ஒருபோதும் சமாதானத்தை உண்டாக்கமுடியாது.

போர்க்குற்ற விசாரணை என்பது ஒரு சில சக்திகள் இலங்கையில் தமது பொருளாதார முயற்சிகளை நிறுவுவதற்குப் பாவிக்கப்படும் ஒரு தந்திரமாகலாம். இது “பயங்கரவாத தடுப்பு” எனும் நாடகத்தின் மறுபுறத்தே இயங்கலாம்.

புhதிக்கப்பட்ட மக்களின் அரசியல் அமைப்புகளை கைப்பற்றியும், தடை செய்தும், அழித்ததின்பின் எப்படி நம்பகரமான சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்த முடியும்?. முறையான விசாரணை நடத்தப்பட்டால் ஐ.நா.சபை உட்படப் பல முக்கிய நாடுகள்கூட இத்தகைய விசாரணையிலிருந்து தப்பமுடியாது.

ஈழத்தமிழர்கள் விரும்புவதாவது வெறும் கண்துடைப்புகளை விடுத்து, பலதசாப்தங்களாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பைச் சர்வதேசக் குழுக்கள் விசாரணை செய்து, தமிழ் தேசிய விடுதலையை அங்கீகரித்து, மனித நாகரீகத்திற்கு அமைய அவர்களுக்கு உரிமையான அரசியல் நீதியை வழங்குவதாகும்.

(Tamilnet இணையதளத்தில் 23ம் திகதி அன்று வெளிவந்தContinuing ‘counter insurgency’ approach to chronic national question என்ற கட்டுரையினைத் தழுவிய தமிழாக்கம்)

Comments