ஈழத் தமிழர்களது உரிமைகளை ஒடுக்க இந்தியாவில் ஒப்பந்தம் : மகிந்தவும், மன்மோகனும் கைச்சாத்து!


இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றுள்ள அதேவேளை கிழக்கும் மாகாணத்தின் துணை முதலமைச்சராக சிங்கள இனத்தைச் சார்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டாகள் என்றும் இதனால் இராணுவ மயமாக்கல் நியாயமானது என்றும் பி.பி.சி தொலைக்காட்சிக்குப் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோடாபய ராஜபக்ச நேர்காணல் வாழங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்தியா சென்றுள்ள ராஜபக்ச குழுவினர் இந்தியாவுடன் வர்தக ஒப்பந்தங்களும், குற்றவியல் ஒப்பந்தங்களும் கைச்சாத்திட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. குற்றவியல் ஒப்பந்தத்தில் கைதிகள் பரிமாற்றம் பிரதானமான அம்சமாக அமைந்திருப்பதாக மேலும் தெரிவிக்கும் டெல்லிச் செய்திகள், இந்தியாவில் புலிகள் என சந்தேகத்திற்கிடமான ஈழத் தமிழர்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அனைத்துமாக குற்றவியல், இருதரப்பு வணிகம் ஆகியன தொடர்பாக ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.

தமிழ் நாட்டின் எழுச்சிகளை கட்டுப்படுத்த அதிகாரப்பரவலாக்கம் குறித்தும், சீனாவின் பிரசன்னம் குறித்தும் பேசப்பட்டாலும் இந்த ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டுவிட்டன. ஆக, அழிக்கப்படும் தமிழ் மக்கள் குறித்த எந்தப் பேச்சும் இவர்களிடையே இடம்பெறவில்லை, மாறாக எதிர்காலத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக் குரலை அடக்கியொடுக்குவதற்கான ஒப்பந்தம் மட்டுமே நிறைவாகியுள்ளது என தெரியவருகிறது.

Comments