எங்கள் பணத்தால் எங்களுறவுகளை அழிக்க அனுமதிக்கக் கூடாது.



ஸ்ரீலங்காவிலுள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம்

நாம் ஸ்ரீலங்கப் பொருளாதாரத்தில் எந்த வகையில் பணத்தை இட்டாலும் அது எப்படியாவது ஸ்ரீலங்காவின் சிங்கள இராணுவத்தைச் சென்றடைந்து தமிழர்களை வேரறுத்து அடிமைத்தளையில் தள்ளவே பயன்படுத்தப்படும்.

►ஸ்ரீலங்காஅரசுடன் இணைந்து தமிழீழ விடுதலையைச் சிதைப்பதற்கு வழிவகுத்த கே.பீ.யின் பிரதிநிதிகளாகச் செயற்பட முன்வந்துள்ள அன்ரனி தாஸ், ஸ்ரீபதி, விமலதாஸ் போன்றோரிடம் பணம் கொடுக்க வேண்டாம்

►ஸ்ரீலங்காவிற்குப் பயணம் செய்ய வேண்டாம்

►கொழும்புவில் வீடுகள் வாங்க வேண்டாம்

►ஸ்ரீலங்காவிலுள்ள வங்கி எதிலும் பணத்தை வைக்க வேண்டாம்

►ஸ்ரீலங்காவிலுள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம்

►ஸ்ரீலங்காவில் பங்குகளோ கடன் பத்திரங்களோ வாங்க வேண்டாம்

►"யாழ்ப்பாண வளர்ச்சி நிதி" அல்லது மட்டக்களப்பு புதுப்பிப்பு அறக்கட்டளை" அல்லது "மறுவாழ்வு" என்பதைப் பெயரில் கொண்ட எந்த கவர்ச்சிகரமான சொற்றொடர்களைக் கண்டும் மயங்கி விடாதீர்கள். சுனாமிக்காக ஸ்ரீலங்கா அரசு வசூலித்த பணம் எதுவும் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடையவில்லை; அது கொழும்பிலேயே தங்கிவிட்டது என்பதை நினைவில் வைத்திருப்போம்.

►துணிமணிகள், பலசரக்குப் பொருட்கள், ஸ்ரீலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அல்லது வேறு எந்தப் பொருட்களையும் வாங்க வேண்டாம், மேலும் சில்லறை வியாபாரியிடமும் (மொத்த விநியோகிப்பாளர் யாரென்று தெரிந்தால் அவரிடமும்) இப்பொருட்களை இனிமேல் விற்க வேண்டாம் என அறிவுறுத்துவோம்.

புறக்கணி சிறிலங்கா

தென் ஆப்பிரிக்காவில் உலக நாடுகள் முதலீடு செய்யாமல் தவிர்த்தது நல்ல விளைவைத் தந்தது.

அதன் விளைவுகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி அரசு வளைந்து கொடுத்து இனஒதுக்கல் கொள்கையைக் கைவிட்டது.

கொழும்பின் சிங்கள அரசாங்கம் தமிழர்களை அமைதியாகத் தங்கள் தாயகத்தில் எப்போது வாழ விடும் என்பது தெரியவில்லை, ஆனாலும் நாம் நமது கடமையைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

http://www.boycottsrilanka.com/
http://www.notosrilanka.com/

Comments