ரொரன்ரோவில் பல்லாயிரத்தில் மக்கள் கலந்து கொண்ட கறுப்பு யூலை ஒன்றுகூடல்

ஞாயிற்றுக்கிழமை, யூலை 25ஆம் நாள் மாலை 6 மணிக்கு ரொரன்ரோ பாராளுமன்றம் Queen's Park முன்றலில் கனடியத் தமிழர்கள் நடாத்திய பாரிய கறுப்பு யூலை ஒன்றுகூடலில் பல்லாயிரத்தில் மக்கள் கலந்து கொண்டனர்.








கனடியத் தேச்pய கீதம், தமிழீழ கொடியேற்றப்பாடல் ஆகியவற்றுடன் ஆரம்பித்த நிகழ்வு, ஈகைச்சுடரேற்றம், அகவணக்கம், படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான மலர் வணக்கம் எனத் தொடர்ந்தது. அடுத்து வானம்பாடிகளின் இசையில் தமிழகத்தில் இருந்து வந்திருந்த தமிழீழ தாயக பாடல்கள் பலவற்றைப் பாடியிருந்த ரி.எல். மகாராஐன் தாயக பாடல்களை, மக்கள் அவலங்களை வெளிக்கொணரும் பாடல்களைப் பாடினார்.





27 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்றும் 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது. இந்நிலையில்; சர்வதேசம் தனது மனிதநேய கடமைகளை உடன் ஆற்ற வேண்டும்.




அதற்காக நாம் அனைவரும் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம். அதற்கான பல வேலைத்திட்டங்கள் விரைந்து முன்னெடுக்கப்படும் என உறுதி கூறினர்.




போர்குற்றங்கள் குறித்து சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை மேலும் தாமதமின்றி உடன் நடாத்தப்பட வேண்டும். போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும்.


மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்கும் வரை, ராஐதந்திர, பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஓன்றுகூடலின் முக்கிய கருப்பொருள்களாக முன்வைக்கப்பட்டன. மக்களின் அவலங்களை வெளிக்காட்டும் நடனமும் இடம்பெற்றது.


இது வருகை தந்தவர்களின் மனதை உருக்குவதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்விடயங்களை உறுதியுடன் முன்னெடுப்போம். தமிழீழ தேச விடுதலை கனியும் வரை போராடுவோம் என மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு; இறுதியில் மக்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.


இந்நிகழ்வை கனடிய தேசிய ஊடகங்கள் பலவும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருந்தன. சிபி24 செய்தி நிறுவனம் நேரடியாக அவ்அவப்போது நிகழ்வை ஒளிரப்பியது. குளோபல் தொலைக்காட்சியும் நிகழ்வை ஒளிபரப்பியது.

பிரபல வானொலிகள் 680, 640 ஆகியன முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டன. ரோரன்ரோ சன் பத்திரிகையின் தனது பதிப்பில் நிகழ்வு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Comments