போர்க்கப்பல்களை குறிவைக்கும் சீனாவின் `டொங் வெங் 21டி`

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்பது சாசுவதமான உண்மை. பல்குழல் எறிகணை வீச்சுப் போல் அடுக்கடுக்காக வெளிவரும் நேர்காணல்கள், அடிப்படைப் பிரச்சினையை மறைத்து விடுகின்றன. மனித உரிமை ஆணைக்குழு தெரிவிக்கும் தகவல்களின் பிரகாரம், யுத்தம் நிறைவுற்ற பின்னர் தமிழர் தாயகத்திலிருந்து 3000 பேரளவில் காணாமல் போகப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

முறைப்பாடுகள் நாலாயிரத்தையும் தாண்டி விட்டன. ஒடுக்குறைகள் அதிகரிக்கும்போது அதற்கெதிராக போராட வேண்டிய சக்திகள் நேர்காணல்களுக்குப் பொழிப்புரை எழுதுவதில் காலத்தை வீணடிக்கின்றன.

நம்பிக்கைத் துரோகம், தேசத் துரோகம், சமுகத் துரோகம் என்றவாறு பல்வேறு பரிமாணங்களில் மக்கள் விரோதச் சக்திகள் அலசப்படுகின்றன. ஆனாலும் பட்டறிவிலிருந்து கற்ற நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிப்பவர்கள் குறிப்பாக பெரும்பான்மை இனத்தவர்கள் தமது பேரினவாதச் சிந்தனையை வலியுறுத்தும் போக்கிலிருந்து மாறவில்லை என்கிற விடயத்தைப் பலரும் உணர மறுக்கின்றார்கள்.

இராணுவத்தினருக்கான குடியிருப்பினை நிறுவுவது குடியேற்றமாகாது என்கிற வகையில் பாதுகாப்புச் செயலாளர் விளக்கமளிக்கிறார். அத்தோடு வடக்கு கிழக்கிலிலுள்ள இராணுவ முகாம்கள், படைத்தளங்கள் வலுப்படுத்தப்படும் என்று ஆணைக்குழுவின் முன் உறுதிபடக் கூறுகின்றார். அழிக்கப்பட்டதாக இவர்களால் கூறப்படும் விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார்கள் என்று அச்சுறுவது போல் நடித்து சிங்களக் குடியேற்றங்களை அவர் நியாயப்படுத்துகிறார்.

நடைபெறும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றுகூடல், இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துமா வென்பதில் பலத்த சந்தேகம் உண்டு. இவற்றுக்கு அப்பால் பிராந்திய நலன் தேடும் வல்லரசாளர்களின் நகர்வுகள், புதிய திசை நோக்கி பயணிப்பதைக் காணக் கூடியதாகவிருக்கிறது.

முடிவடையாப் போர்க் கப்பல் வருகையில் ஏவுகணைகள் தாங்கிய மொஸ்வா என்கிற ரஷ்யக் கப்பலொன்றும் அண்மையில் இணைந்திருப்பதை அவதானிக்கலாம். இந்திய, அமெரிக்க, தென் கொரிய, பங்களாதேஷ் கப்பல் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் வேளையில் கருங்கடலில் இருந்து ஆசியச் சுற்றுலாவில் இறங்கியுள்ள ரஷ்யக் கப்பல் இலங்கைக்கு நிச்சயம் வருமென்பதை இலகுவில் ஊகிக்கலாம். ஆனாலும் சீனக் கப்பல்தான் இன்னமும் வரவில்லை. விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் சீனாவிடம் இல்லையென்பது வேறு விடயம். அதன் நீர்முழ்கிக் கப்பல்கள் வரும் சாத்தியப்பாடுகளும் உள்ளன.

தனது நேரடியான இராணுவப் பிரசன்னத்தை இலங்கையில் ஏற்படுத்தி அமெரிக்காவுடன் முறுகல் நிலையை உருவாக்காமல் தவிர்க்கவே சீனா விரும்புகிறது.

கொரிய வளைகுடாவில் இன்னமும் பதற்ற நிலை தணியவில்லை. தென் கொரிய அமெரிக்க இரண்டாம் கட்ட போர்ப் பயிற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

சீனாவின் ஆசியப் பிராந்தியக் கடலாதிக்க கனவினை, தென் சீனக் கடற்பரப்பிற்குள் முடக்குவதற்கு அமெரிக்கா முயற்சிக்கும் இவ் வேளையில் சீன இராணுவத் தரப்பிலிருந்து வெளிவரும் செய்தியொன்று பென்டகனை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

மொத்தமாகவுள்ள 250 யுத்தக் கப்பல்களில், அதிவிசேட போர் விமானங்கள் தாங்கிய யுத்தக் கப்பல்கள் பதினொன்றினை உலகக் கடற்பரப்பெங்கும் அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது.

பெருங்கடலில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் இப்போர்க் கப்பல்கள் எத்தகைய தாக்குதல்களையும் துரித கதியில் இணங்காணும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளன. ஆனாலும் இத்தகைய தற்காப்புக் கவசங்களை தன்னகத்தே இக்கப்பல்கள் கொண்டிருந்தாலும் அதையும் மீறி அக்கப்பலை ஊடுருவித் தாக்கும் வல்லமை பொருந்திய கப்பல் எதிர்ப்பு குறுந்தூர ஏவுகணை ஒன்றினை சீன இராணுவம் தயாரித்திருப்பதாக அமெக்க பென்டகன் கவலை கொள்கிறது.

டொங் வெங் 21 டி என் கிற நாசகாரிக் கப்பலை அழிக்கும் ஏவுகணையானது 900 மைல்கள் தூரத்திலுள்ள இலக்கினைத் துல்லியமாகத் தாக்கக்கூடியது.

அதாவது தரைவழியாக நகர்த்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த டி.எவ்.
21 டி ஆனது நகர்ந்து செல்லும் அதிந வீன பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட யூ.எஸ். ஜோர்ஜ் வாஷிங்டன் போன்ற போர்க் கப்பல்களையும் தாக்கியழிக்கலாமென இராணுவத் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதேவேளை சீனாவின் இப்புதிய ஏவுகணையை இடைநடுவில் தடுத்து நிறுத்தி நிர்முலமாக்கும் ஏவுகணைகளை உடனடியாக உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை அமெக்காவின் இராணுவ உயர்பீடத்தில் எழுவதைக் காணலாம்.

சீனாவின் நிலத்திலிருந்து இயக்கப்படும் போர்க் கப்பல்களைத் துல்லியமாகத் தாக்கியழிக்கும் குறுந்தூர ஏவுகணை, நெடுந்தூர ஏவுகணையாக நாளை விரிவடையுமாயின் ஓசியானியாவிலுள்ள குவாம் அன்டசன் விமானப்படைத்தளத்தில் நிலை கொண்டுள்ள கப்பல்கள் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புண்டு.

குவாமிலுள்ள இந்த அன்டர்சன் விமானப்படைத்தளமானது அமெரிக்காவின் மிகப் பெரிய கட்டளை மைய பீடமாகக் கருதப்படுகிறது.

ஒரு இலட்சம் குண்டுகளையும், ஏவுகணைகளையும், 66 மில்லியன் கலன் ஜெட் எரிபொருளை சேமிப்பாகவும் கொண்ட இப்படைத் தள ஓடுபாதையில், இ17 குளோப் மாஸ்டர் மற்றும் ஊ/அ18 கோனெட் Mகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விரிவடையும் குவாம் கடற்படைத்தளத்தில் அமெக்காவின் அணு ஆயுதம் தாங்கிய நீர் முழ்கிக் கப்பல்களும் நிலை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு மற்றும் கிழக்கு சீனக்கடலில், சீனக்கடற்படையின் ஆதிக்கம் மேலோங்குமாயின் அவுஸ்திரேலியாவை அண்மித்த ஓசியானியாவிலுள்ள குவாம், கரோலைன், மார்சல், வடக்கு மயானா, சொலமன் தீவு போன்ற பிரதேசங்களில் தனது படைவலுவை அமெரிக்கா அதிகரிக்குமென்று எதிர்பார்க்கலாம், ஆனாலும் சீனாவின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு கடற்பரப்பில், பெரும் முற்றுகையை இந்த ஓசியானியா அமெரிக்கப்படைத்தளங்கள் உருவாக்கினாலும் தென் கிழக்காசிய மற்றும் இந்து சத்திரப் பிராந்தியத்தில் எவ்வாறு இத்தகைய முற்றுகையை அமெரிக்கா ஏற்படுத்தப்போகிறது என்கிற கேள்வி எழுகிறது.

ஏற்கனவே பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், மியன்மார் போன்றவற்றில் துறைக அபிவிருத்தி என்கிற போர்வையில் கடலா திக்கத்திற்கான அடித்தளத்தை சீனா அமைத்து வருகின்றது.

இலங்கையில் போர் முடிவடைந்ததும் அம்பாந்தோட்டை துறைக அபிவிருத்தி துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு முதலாம் கட்ட நிர்மாணப் பணிகளும் நிறைவடைந்துவிட்டன.

இந்து சத்திரப் பிராந்தியத்தில் கடலாதிக்கப் போட்டிக்கான தயாரிப்பு வேலைகளில் விமானம் தாங்கி போர்க் கப்பல்களைக் கொண்ட நாடுகள் இறங்கியுள்ளதனை வரிசையாக வரும் கப்பல் பயணங்கள் தொண்டுப் பணி செய்ய திருமலையிலும் புத்தளத்திலும் குதித்துள்ள அமெரிக்கப் படைகள் உணர்த்துகின்றன. சீனாவைப் பொறுத்தவரை வெளிப்படையான முரண்பாடுகளைத் தவிர்த்தாவது மிகச் சாதுரியமான வகையில் காய்களை நகர்த்துவதில் வியூகங்களை அமைப்பதிலும் அதிக செயற்திறன் கொண்டது.

பெரும் போர்க்கப்பல் தொடரணிகளைக் கொண்ட அமெரிக்க கடற்படையோடு மோதுவதற்கு மிகுந்த பொருட் செலவில் மான போர்க்கப்பல்களை நிர்மாணிப்பதை விட அக்கப்பல்களைத் துல்லியமாகத் ழிக்கும் ஏவுகணைகளை உருவாக்குவது வு குறைந்த புத்திபூர்வமான விடயமென்று சீனா சிந்திப்பதில் தவறில்லை.

இலங்கையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்திலும் இந்த வகையான ஒரு உத்தியையே விடுதலைப் புலிகள் கையாண்டார்கள்.

இந்தியா வழங்கிய சிறிய போர்க் கப்பல்களையும் இஸ்ரேலிய அதிவேக டோராப் படகுகளையும் சீன ராடர்களையும் கொண்ட அதிக வலுவுள்ள இலங்கை கடற்படைக்கு எதிராக சிறிய கடற்கலங்களை தாக்குதல் படகுகளாக வடிவமைத்த கடற்புலிகள், ஏவுகணை போன்று கடற்கரும் புலிப்படகுகளை பயன்படுத்தினர். “பேச்சுவார்த்தைகளை நீடித்து விடுதலைப் புலிகளை பலவீனமாக்கி பிளவுபடுத்தினோம்' என்று முன்னாள் சமாதான செயலக பணிப்பாளர் பேர்னாட் குணதிலக கூறும் விளக்கத்தில் சமாதான காலத்தில் கடற்படையின் வலுவை அதிகரித்தோம் என்கிற விவகாரம் உள்ளடங்கியிருக்கிறது.

அண்மையில் காலியிலுள்ள வெளிச்சவீட்டு விடுதியில் நடைபெற்ற “காலி கலந்துரையாடல் 2010' என்ற ஒன்றுகூடலில் பயங்கரவாதத் திற்கெதிரான கடற்பாதுகாப்பு வியூகம் குறித்து பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ நிகழ்த்திய உரை, கடலாதிக்கப்போட்டியில் குதித்துள்ள வல்லரசாளர்களை கவரவில்லை.

போர் காலத்தைப் போன்று அதற்குப் பின்னான காலத்திலும் இப்போட்டியாளர்களை தமக்குப் பின்னால் ஓரணியில் இழுத்துச் செல்லும் உத்தியை இலங்கை அரசு கையாள முயற்சிப்பதாக உணரப்படுகிறது. தாம் தனிமைப் பட்டுவிடக் கூடாதென்பதற்காக இதில் கலந்து கொண்டவர்களும் உண்டு. ஆனாலும் இனிவரும் நாட்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையத் தரிப்பிடமாக இலங்கை அமையும்.

அதேவேளை, வல்லரசுகளின் நகர்வுகளை தீர்மானிக்கும் சக்தியாக அது இருக்கப்போவதில்லை. ஐ.நா. சபையின் போர்க்குற்ற விசாரணைக்கான ஆலோசனைக் குழுவின் கூட்டங்களும் அதற்கு ஆதரவாக இலண்டனிலிருந்து புறப்பட்டு ஜெனீவா வரை மனிதநேய நடைப் பயணம் மேற்கொண்ட சிவந்தனின் கவனயீர்ப்புப் போராட்டம் இனப்படுகொலையிலிருந்து தப்பித்து கனடாவில் கூட்டு அரசியல் தஞ்சம் கோரிய 490 ஈழத் தமிழர்களின் ஆபத்தான கடல் பயணங்களும் இலங்கை அரசின் மீதான சர்வதேச அழுத்தங்களை அதிகக்க உதவுகின்றன. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழந்த தாக்கத்திலிருந்து சீனாவும் இந்தியாவும் தம்மைக் காப்பாற்றும் என்று கருதும் அரசு, உள்நாட்டிலும் பல பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கிறது.

ஆனாலும் ஒற்றைக் கம்பியில், இந்தியா என்கிற தடியை தனது சமநிலை பேணும் கருவியாகப் பயன்படுத்தி நடக்க முயலும் இலங்கை அரசு, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி விடயத்தில் இந்தத் தடியை இழக்கலாம்.

- இதயச்சந்திரன்
நன்றி: வீரகேசரி

Comments