கே.பி.வெளியிடும் செய்திகள் - உண்மையும்...பொய்யும்..?!


மேதகு.வே.பிரபாகரன் மரணச் செய்தி கேட்டு கதறி அழ துடிக்கும்., மகிந்தா..கருணாநிதி மற்றும் பார்ப்பனிய சோனியா கும்பல்கள்...( பட்டியல் நீளும்..செய்திகளின் தலைப்பு கருதி...)

டெய்லி மிர்ரர் செய்தியும்... ஈழதேசம் செய்தியும்...வாசகர்களின் பார்வைக்கு..

டெய்லி மிர்ரர் : கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணச் செய்தி கேட்டதும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குலுங்கி அழுதார் என்று கூறியுள்ளார் கேபி என்கிற குமரன் பத்மநாதன். இதுதொடர்பாக டெய்லி மிர்ரர் இதழுக்கு கேபி கொடுத்துள்ள பேட்டி...

ஈழதேசம் : உண்மை..மேதகு.வே.பிரபாகரன் மரணச் செய்தியை கேட்டு., வைக்கோ மட்டும் அல்ல, தேசியத் தலைவரை விரும்பும், ஈழ விடுதலையை விரும்பும்..தமிழ் நாட்டில் உள்ள அணைத்து தமிழ் தேசிய உணர்வாளர்களும் குலுங்கி குலுங்கி அல்ல..தேம்பித் தேம்பியும் அழுவார்கள்..புலம் பெயர் மக்களும் அவ்வாறே..ஏன்..? நெடுமாறன் போன்ற தலைவர்களும் அழத்தானே செய்வார்கள்..
இதில் என்ன வியப்பு இருக்கிறது..!(உயிருடன் உள்ளவரை சாவடைந்ததாக பிரச்சாரம் செய்வதை பார்த்து மேல் குறிப்பிட்டவர்கள் குலுங்கி குலுங்கி அழத்தானே செய்தார்கள்)

டெய்லி மிர்ரர் : தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது உண்மை. ஆனால் தலைவர் இருப்பதாக பிரசாரம் செய்து வருவோர் புலிகள் இயக்கத்துப் பணத்தை மனதில் கொண்டுதான் அவ்வாறு பேசி வருகின்றனர்.

ஈழதேசம் : பொய், தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது உண்மை..என்பது பொய்..! எங்களுக்கு தெரிந்து தமிழ் உணர்வாளர்கள் மற்றும் புலம் பெயர் மக்கள்..முள்வேலி முகாம்களில் உள்ள வறியவர்கள்...தமிழ்நாட்டின் பன்றித் தொழுவ முகாம்களில்.. பன்றிகளை விட மிக கேவலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அகதிகள்..இவர்கள் எவ்வாறு..? புலிகளின் இயக்க பணத்தை மனதில் கொள்வார்கள்...ஈழ சுதந்திரத்தை..ஈழத்தமிழ் மொழிக் காற்றை அல்லவா விரும்புவார்கள்...!(இவ்வாறிருக்க ஏன் இவர்களும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்கள் பாதுகாப்புடனும் உயிருடனும் உள்ளார் என்று சொல்கிறார்கள்)

டெய்லி மிர்ரர் : தலைவர் இருந்தபோது வசூலிக்கப்பட்ட பணமும், தலைவர் இறந்த பின்னர், இருக்கிறார் என்று கூறி வசூலிக்கப்பட்ட பணமும் பெருமளவில் குவிந்திருக்கிறது. இந்தப் பணம் எல்லாம் நெடியவனிடம்தான் உள்ளது.

ஈழதேசம் : ஒரு விடுதலை இயக்கம் என்றால்..இயக்க செயல்களுக்கு பணம் தேவைப்படும்..பணம் இருக்கும்..பின்பு இயக்கம் செயலற்ற நிலையில் அழியும்..மீண்டும் இயக்கம் செயல்படும் போது பணம் தானாக வந்து விடும்..விடுதலைப் புலிகள் என்ன... உலக வங்கியா..? நடத்தினார்கள்..வட்டி அசல் என்று பேசுவதற்கு.. நெடியவன்..குட்டையானவன் என்பதெல்லாம் யாருக்கு அவசியம்...மகிந்தா ராஜபக்சே கும்பலுக்கு..இந்திய பார்ப்பனிய கருணாநிதி மற்றும் சோனியா கும்பலுக்கு...உங்களுக்கு ஏன் அய்யா...அதுபற்றி கவலை..பேட்டிக்கு பேட்டி., பணம் பணம் என்று புலம்புகிறீர்..? பணம் எல்லாம் எங்கே..? என்று சிங்கள ராணுவம் அடிக்கடி சித்திரவதை செய்கிறார்கள் போலும்..!

டெய்லி மிர்ரர் : தலைவர் இறந்து விட்டது வைகோவுக்கு நன்றாகத் தெரியும். நான் அவரது மரணச் செய்தியை வைகோவுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தபோது வைகோ குலுங்கி அழுதார். ஆனால் மேடைகளில் தலைவர் இருக்கிறார் என்று பொய்யாகப் பேசி வருகிறார்.

ஈழதேசம் : மேடைகளில் தலைவர் இருக்கிறார் என்று வைகோ பேசிவருவது உண்மை..குலுங்கி அழுவதாக சொல்வது பொய்..ஏன் உணர்ச்சிவசப்பட்டுக் கூட அழுது இருக்கலாம்..வைகோ என்ன கடவுளா..அல்லது புத்தரா..? தலைவர் இறந்து விட்டார் என்ற படத்தை இந்திய டி.வி.க்கள் காண்பித்த பொழுது, தமிழ் நாட்டில் எண்ணற்றவர்கள் ஒரு நாள் முழுதும்...இரண்டு மூன்று நாட்கள் முழுதும் மன நிலை இழந்து, பைத்தியம் பிடித்து திரிந்தனர்...(ஆனால் பின்பு உண்மையை அறிந்து தெளிவாகியிருந்தனர்)

டெய்லி மிர்ரர் : உண்மையில் ஈழப் போரை முடிவுக்குக் கொண்டு வர நான் மேற்கொண்ட முயற்சிகளைத் தடுத்தவர் வைகோ. இதற்குக் காரணம், திமுகவுக்கு நல்ல பெயர் போய் விடக் கூடாதே என்பதற்காக இவ்வாறு செய்தார் வைகோ.

ஈழதேசம் : உண்மை..அதுதான் முடிவுக்கு கொண்டு வந்து விட்டீர்களே..! தி.மு.க.விற்கு நல்ல பெயர்..எம்.ஜி.ஆர். ஏன்..? இந்த அம்மையார் தற்பொழுது கூறிவருகிறார்..தமிழகத்தின் தி.மு.க.வை அல்ல..அதன் தலைவரை 'தீய சக்தி' என்று.. நல்ல பெயராம்..பொல்லாத நல்ல பெயர்..அவரின் அம்மா அஞ்சுகம் கூட கொண்டு வர முடியாது நல்ல பெயரை..!

டெய்லி மிர்ரர் :
ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் பல்வேறு இந்தியத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டார்.முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, பாதிரியார் ஜெகத் கஸ்பார் ஆகியோருடன் அவர் தொடர்பு கொண்டார். அவர்கள் மூலம் மத்திய அரசை சமாதானப்படுத்தி, இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்தி போரை நிறுத்த முயற்சித்து வந்தார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம், பிரபாகரனையும், அவரது குடும்பத்தினரையும் மற்றவர்களையும் உயிருடன் காக்க நினைத்து முயற்சித்தார் நடேசன்.


ஈழதேசம் : உண்மை..அதுதான் சொல்லி விட்டீர்களே..அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் என்று...
அதைத்தவிர அவருக்கு என்ன வேலை..? பல்வேறு அரசியல் புள்ளிகளை தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது..சமாதானம் ஏற்படுத்துவது..உடன்படிக்கை செய்து கொள்வது..
தேவைப்பட்டால் போர்நிறுத்தம் செய்து கொள்வது.. இதுதானே அரசியல் வேலை..ஒரு விடுதலை இயக்கத்திற்கு..! வேறு என்ன அரசியல் இருக்கப் போகிறது..? விடுதலைப் புலிகளின் தலைவரை, அவரின் குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பது நல்ல விசயம் தானே..போரை முடிவுக்கு கொண்டுவர தமிழக மக்கள், புலம் பெயர் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டனர்...!

டெய்லி மிர்ரர் : இந்த முயற்சிக்கு டெல்லியும் இணங்கி வந்தது. காரணம், அப்போது நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு பெரும் அடி விழுந்து விடுமோ என்று அவர்கள் பயந்தனர். ஜெயலலிதா வேறு புலிகளுக்கு ஆதரவான நிலையை எடுத்ததால் அவர்களது பயம் அதிகரித்தது.

ஈழதேசம் : பாதி பொய்..பாதி உண்மை..தேர்தலில் காங்கிரஸ் பெருச்சாளிகள் மற்றும் தி.மு.க. தோற்று விடும் என்பது உண்மை..

டெய்லி மிர்ரர் : இதையடுத்து மத்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைத்து வந்தார். போரை நிறுத்துவதாகவும், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைவதாகவும், ஈழத்திற்கு மாற்றான அரசியல் தீர்வுக்கு சம்மதிப்பதாகவும் அறிவிக்குமாறு புலிகள் இயக்கத்திற்கு ப.சிதம்பரம் யோசனை தெரிவித்தார்.

ஈழதேசம் : பொய், மத்திய அரசு சார்பில் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்தினார்..யாரோடு இலங்கை அரசோடு..ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைதல் வேறுவழியின்றி...இப்பொழுது நீங்கள் அடைத்து வைத்திருக்கிறீர்களே..முள்வேலி முகாம்களில்..அந்த மக்களுக்காக..
இல்லையென்றால் என்ன நடந்திருக்கும்..முள்வேலி முகாம் அமைத்திருக்க மாட்டீர்கள்..அதற்குப் பதிலாக வெறும் முள்வேலி..மின்சார வேலி மயானம் அமைத்திருப்பீர்கள்..'சின்னப்பயல்' பா.சிதம்பரம் புலிகளுக்கு மாற்று யோசனை..என்ன மாற்று யோசனை...சரி புலிகள்தான் இப்பொழுது இல்லையே இலங்கையில்...இப்பொழுது என்ன ஆயிற்று..? அந்த மாற்று யோசனை??

டெய்லி மிர்ரர் : மேலும் புலிகள் இயக்கத்திற்காக தானே ஒரு அறிக்கையையும் அவர் தயார் செய்தார். இப்படி அறிவிப்பு வெளியான பின்னர் இலங்கையை நிர்ப்பந்தித்து போரை நிறுத்த இந்தியா தீவிர முயற்சிகள் எடுக்கும் என்பது பேச்சுவார்த்தையின் முடிவாகும். இந்தத் திட்டத்தை நெடுமாறனிடமோ அல்லது வைகோவிடமோ தெரிவிக்கக் கூடாது என்றும் நடேசன் அறிவுறுத்தப்பட்டார். ஆனால் நடேசனோ, இந்தத் திட்டம் குறித்து சி.பி.எம்.எம்.எல்.ஏ கே.மகேந்திரனுடன் ஆலோசித்துள்ளார். இதையடுத்து மகேந்திரன் இந்த தகவலை வைகோவிடம் கொண்டு சென்று விட்டார்.

ஈழதேசம் : பொய், இதெல்லாம் எப்பொழுது நடந்தன..? பொத்தம் பொதுவாக கூறினால் எப்படி..? ஏன் நெடுமாறன், வைக்கோ போன்றவர்களிடம் தெரிவிக்கக் கூடாது..? உண்மையில் போர் நிறுத்தம் பற்றி பேசவில்லை..சிந்திக்கவில்லை...சின்னப்பயல் பா. சிதம்பரம்..! உங்கள் லாவணி அரசியல் நடத்தி இருக்கிறீர்கள்..தமிழக மக்களிடம்..உலக தமிழ் மக்களிடம்..சி.பி.எம். கட்சியினர் இங்கே எப்பொழுது வந்தனர்..அவர்களுக்கு விடுதலை, சுதந்திரம், தமிழீழம் என்றால் 'வயிற்று போக்கு' அல்லவா ஏற்படும்..இந்த மகேந்திரன், வைக்கோ அவர்களிடம் கொண்டு சென்று விட்டார் என்கிறார் கே.பி.

டெய்லி மிர்ரர் : இதைக் கேட்ட வைகோ அதிர்ச்சி அடைந்தார். எங்கே போர் நிறுத்தம் நடந்து விட்டால், அந்தப் பெருமை திமுக, காங்கிரஸுக்குப் போய் விடுமோ என அவர் அஞ்சினார். இதையடுத்து ஈழத்திற்கு மாற்றான தீர்வுக்கு புலிகள் சம்மதித்தால், தமிழகத்தில் எங்களுடைய ஆதரவை நீங்கள் இழக்க நேரிடும் என்று நடேசனை எச்சரித்தார்.

ஈழதேசம் : பொய், ஈழத்திற்கு மாற்றான தீர்வு..ஏது.. இப்பொழுது, மகிந்தா ராஜபக்சேவும், பார்ப்பனிய இந்திய அரசும்..செய்து கொண்டு இருக்கிறதே அதுவா..? அதுஎன்ன..? ஈழத்திற்கு மாற்று..! அனைவரையும் சிறையில் அடைத்து, கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரும் இல்லாமல் கொன்று விடுவதா..ஏது மாற்று தீர்வு..? அல்லது மகிந்தாவின் விருப்பமா..!

டெய்லி மிர்ரர் : இதைக் கேட்டதும், எங்கே அதிமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று, மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையுமோ என்று நம்பிய நடேசன் தனது திட்டத்தைக் கைவிட்டு விட்டார்.

ஈழதேசம் : நடேசன் தனது திட்டத்தை கைவிட்டார்..அ.தி.மு.க. பி.ஜே.பி எந்தக் கூட்டணியாக இருந்தாலும் ஒன்றும் வேறுபாடு கிடையாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரா..ஒரு பெரும் விடுதலை இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர்..அல்லது நீங்கள் எப்படி போரின் போது முடிவு எடுத்து, இன்று பேட்டிக்கு மேல் பேட்டி கொடுக்கும் முடிவை, அவர் எடுக்கவில்லை என்று கூறுகிறாரா.. கி.பி.

டெய்லி மிர்ரர் : காரியத்தைக் கெடுத்த நெடியவன்-காஸ்ட்ரோ

ஈழதேசம் : எந்த காரியங்களை..உண்மையை கூறுங்கள்..நீங்கள் இப்பொழுது எப்படி இருக்கிறீர்களோ அதற்கு, அந்த காரியத்தை செய்ய விடாமல் கெடுத்தவர்களா... ?

டெய்லி மிர்ரர் : இதேபோல, நெடியவனும், காஸ்ட்ரோவும், பிரபாகரனைக் காக்க நான் எடுத்த துணிகரமான நடவடிக்கைகளை கெடுத்து விட்டனர்.

ஈழதேசம் : நீங்கள் எடுத்த துணிகரமான முடிவை..? ( துணிகரமான முடிவு அல்லது துணிச்சலற்ற முடிவு என்பதெல்லாம், எப்பொழுது தெரிய வரும்..? செயல் முடிவின் விளைவை பொருத்து..) கெடுத்து விட்டனர்..அப்படியென்றால் உங்களின் தற்போதைய செயல் துணிகரமான முடிவு..??? திருவாளர் கே.பி..!

டெய்லி மிர்ரர் : ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தி பிரபாகரனை நான் காப்பாற்ற திட்டமிட்டேன். இதற்காக எனக்கு 10.5 மில்லியன் டாலர் பணம் தேவைபப்ட்டது. இதை தருவதாக காஸ்ட்ரோ தெரிவித்திருந்தார். இந்தப் பணத்தை நார்வேயிலிருந்து நெடியவன் அனுப்பி வைப்பார் எனவும் கூறியிருந்தார்.ஆனால் நெடியவன் பணத்தை அனுப்பவில்லை எனது
திட்டத்தைக் கேட்டு பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். தந்தை, தாயார் மற்றும் சகோதரன், சகோதரி ஆகியோரை எப்படியாவது வெளியில் அனுப்பி வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தார். ஆனால் நெடியவனால் அந்தத் திட்டம் நிறைவேற முடியாமல் போய் விட்டது.

ஈழதேசம் : இந்த செய்திகள் தான், கடந்த மே மாத இறுதியிலேயே கசிந்த செய்தியும், வாரப் பத்திரிகைகள் இது போன்ற செய்திகளை போட்டு நிறைய காசு பார்த்த செய்தி..மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் குறித்து செய்திக்காக தவிதவித்தனர் தமிழ் மக்கள்..புலம் பெயர் மக்கள்..உலகத் தமிழர்கள்..போதாக்குறைக்கு இந்திய உளவு அமைப்புகள் வேறு இருக்கிறார்கள்..புதிது புதிதாக சொன்னார்கள் பல செய்திகளை..பத்திரிகை வாயிலாக.. இவர் சொல்வது ஒன்றும் புதிய செய்திகள் இல்லை..ஒரே வித்தியாசம் சர்வதேச புலிகளின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டு, சற்று தடுமாற்றத்துடன் இருந்த தமிழர்கள், இவரை கொஞ்ச காலம் நம்பினார்கள்...பிறகு நெடுமாறன் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டவுடன் அந்த தடுமாற்றம் சரியாகி விட்டன..இப்பொழுது கோத்தபாய கஸ்டடியில் இருக்கும் பி.பி. அவர்கள் கூறுகிறார்..நான் எப்படியும் தலைவர் குடும்பத்தை காப்பாற்றி இருப்பேன் என்று...( கருணா, வாத்து டக்லஸ், நொண்டி பிள்ளையான் இவர்களை மிஞ்சும் திருவாளர் கே.பி...அதனால்தானோ அரற்றினார் கருணா...கே.பி.க்கு ஏன் முக்கியத்துவம் என்று...?

டெய்லி மிர்ரர் : எனது திட்டம் என்னவென்றால், ஒரு ஹெலிகாப்டரை எடுத்துக் கொண்டு, அதை வான் புலிகள் அமைப்பின் தலைவரான அச்சுதன் வன்னிப் பகுதிக்கு செல்வது, ஹெலிகாப்டர் மூலம் பிரபாகரன் உள்ளிட்டோரை மீட்டு கடலில் தயாராக நிறுத்தி வைக்கப்படும் கப்பலுக்குக் கொண்டு சென்று காப்பாற்றுவது என்பது.ஆனால் நெடியவன் பணத்தைத் தராததோடு மட்டுமல்லாமல், அச்சுதனையும் தடுத்து விட்டார். இதனால் அச்சுதன் என்னுடன் வைத்திருந்த தொடர்புகளை அப்படியே துண்டித்துக் கொண்டார்.

ஈழதேசம் : ஹெலிகாப்ட்டர் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் பகுதிக்கு, எப்படி வர முடியும்...
அதுபோல தயாராக நிற்கும் கப்பல்..? நிறைய கப்பல்கள் இலங்கை கடற்பகுதி முழுதும் நின்றன..
இந்திய கப்பல் படை மூன்று அடுக்குகளாக நின்றன, இவை தவிர சீன கப்பற்படைக் கப்பல்கள்..
மலேசிய கப்பல்கள்..ஆஸ்திரேலியா கப்பல்கள்.. சொல்லிக் கொண்டே போகலாம்..குறிப்பாக அமெரிக்க கடற்படை கப்பலும் நின்றன..பணத்தை தராததால் காப்பாற்ற முடியவில்லை..பணம் பெறுவதற்கு நீங்கள் எங்கு..? நின்று கொண்டு இருந்தீர்கள்..? முள்ளிவாய்க்கால் கரைப்பகுதியில்..? இல்லை முன்பே உங்களை கைது செய்து நான்காம் மாடியில் வைத்திருந்ததாகவும் செய்திகள் உள்ளன..இந்தியாவில் உள்ள ஒரு ரகசிய பங்களாவில் இருந்ததாகவும் செய்திகள் உள்ளன..
ஒருவேளை நீங்களே தமிழ் சினிமாவைப் போல ஹெலிகாப்ட்டர் ஓட்டி வந்திருப்பீர்களோ..
சினிமாவில் கடைசி காட்சியில் வருவார்களே..அதுபோல..! உங்களின் இந்த பேட்டி குறித்து வருங்காலத்தில், இலங்கை உயர் ராணுவ அதிகாரி சொல்லுவார் அவரது பேட்டியில்..! வெளிநாட்டில் இருந்தபடியே..கே.பி. என்பவர் யார் என்று..!

டெய்லி மிர்ரர் : தலைவரைக் காப்பாற்றி அந்தப் பெருமை எனக்கு வருவதை நெடியவனும், காஸ்ட்ரோவும் விரும்பாததே இதற்குக் காரணம்.

ஈழதேசம் : தலைவர் என்று சொல்லி இருக்கிறீர்கள்..ஒருவேளை இலங்கையில் இருந்தபடியே, விடுதலைப் புலிகளுக்கு உளவு மற்றும் பணி ஆற்றியதாக கோத்தபாய சொல்லப்போகிறார்...'இந்த கே.பி.என்ற நயவஞ்சகனை சிறப்பு கொட்டடியில் போடுங்கள் என்று..'

டெய்லி மிர்ரர் : இப்படி அனைத்தும் தாமதாமாகியதால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவம் முற்றுகையிட்டு விட்டது. இதனால் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நிலை. இதனால் பெரும் துயரத்துடன் எனது மீட்புத் திட்டங்களை கைவிடும் முடிவை எடுத்தேன்.

ஈழதேசம் : இப்படி அனைத்தும் தாமதமாக்கப்பட்டதால் உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்ல..
அதாவது ஹெலிகோப்டேரை தானே ஓட்டி வந்து, கடலில் நிற்கும் ஏதாவது ஒரு கப்பலில் தலைவரின் குடும்பங்களை ஏற்ற முடிவில்லை..காப்பாற்ற முடியவில்லை என்று வருத்தப்படும் கே.பி. யின் உண்மை நிலை என்ன..? பல நாடுகளுக்கு வேலை பார்க்கும் ஏஜென்ட்கள் கூற்றைப் போலவே இருக்கிறது திருவாளர் கே.பி.யின் வாக்குமூலம்..! பெரும் துயரத்துடன் எந்த முடிவை எடுத்தீர்கள்..யுத்தம் துவங்கிய சில மாதங்களில்..அல்லது நீங்கள் உங்கள் பொறுப்பில் இருந்து விடுவித்தவுடன்..?

டெய்லி மிர்ரர் : பொட்டு உடலை எரித்து விட்டார் பிரபாகரன்!:

ஈழதேசம் : அதுதானே..என்ன இன்னும் பொட்டு அவர்கள் குறித்து ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்ததும் கூறி விட்டார்...!

டெய்லி மிர்ரர் : போரின்போது யாருமே மிஞ்சவில்லை. பொட்டு அம்மானும் கூட கொல்லப்பட்டு விட்டார். நந்திக்கடல் பகுதி வழியாக வன்னி காட்டுக்குள் தப்ப முயன்றபோது பொட்டு அம்மான் கொல்லப்பட்டார்.

ஈழதேசம் : பொட்டு அவர்கள் போரின் போது கொல்லப்பட்டார் என்று தானே இன்று வரை இலங்கை அரசு சொல்கிறது..இந்தியாவின் மீடியாக்கள் அனைத்தும் சொல்லியது..போரின் போது யாருமே மிஞ்சவில்லை..இந்தக் கூற்றை இலங்கை அரசே சொல்ல தயங்கியதே..பொட்டு கொல்லப்பட்டார் என்று சொல்லவேண்டும்..ஏதாவது ஒரு பகுதியில் இருந்து, வேறு ஒரு பகுதிக்கு செல்லும் பொழுது கொல்லப்பட்டார் என்று கூறிவிட்டால் சரியாகப் போகிறது..காசா பணமா என்று சொல்ல முடியாது...காசும் பணமும் விளையாடிக் கொண்டிருக்கிறது இன்றுவரை இலங்கை ஈழ விசயத்தில்..இப்பொழுது இந்த விசயம் கே.பி.யிடம் இருந்து காசு பணங்களை பிடுங்கிக் கொண்ட இலங்கை அரசு இப்படி சொல்..என்று சொல்லவைக்கிறார்கள் கே.பி..யை..அவரும் சொல்கிறார்..இவ்வாறு..!(கே.பி அவர்கள் தற்போது இனவெறிபிடித்த இலங்கையின் கைதி எனவே அவர் சொல்லும் விடயங்கள் இலங்கை அரசு சொல்லும் "பொய்" செய்தியாகவே மக்களாகிய நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்)

டெய்லி மிர்ரர் :
பிரபாகரன், பொட்டு அம்மான் உள்பட 60 பேர் இலங்கை பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு தப்ப முயன்றனர். பிரபாகரன் கிட்டத்தட்ட தப்பி விட்டார். ஆனால் பொட்டு அம்மானால் வர முடியவில்லை. கொல்லப்பட்டு விட்டார். இதையடுத்து ராணுவத்தின் கைக்கு பொட்டுவின் உடல் போய் விடக் கூடாது என்பதற்காக பிரபாகரனே, பொட்டு அம்மான் உடலை தீயிட்டு எரித்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

ஈழதேசம் : பொட்டு அம்மான் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறுகிறார் திருவாளர் கி.பி. அதுஎன்ன..60 பேர் என்ற கணக்கு தெரியவில்லை..இலங்கை பாதுகாப்பு வளையம் என்றால் என்ன அது..? போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது சரணடையுங்கள் என்று உலக நாடுகள் அனைத்தும் குரல்வலை நொறுங்க சொன்னார்களே..அதை நம்பி...எவ்வளவு பொது மக்கள் பாதுகாப்பு வளையத்தை நோக்கி சென்றனர்...பொட்டு அவர்களின் உடல்..ராணுவத்தின் ( எந்த ராணுவத்தின்..
இந்தியா அல்லது சீனா என்று கூறலாமா..? ) கைக்கு கிடைக்காமல், தலைவர் அவர்களே, அவரின் உடலை தீயிட்டு எரித்து விட்டார் என்று சொல்கிறார் திரு பி.பி.

டெய்லி மிர்ரர் : குடும்பத்தில் யாரும் தப்பவில்லை:

ஈழதேசம் : புஷ் குடும்பம், பிளையர் குடும்பம். ஏன் அங்கெல்லாம் போக வேண்டும்..? காந்தி குடும்பம்..கருணாநிதி குடும்பம்..ஷேக் அப்துல்லா குடும்பம் என்று பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கையில், தலைவர் குடும்பத்தில் யாரும் தப்பவில்லை...இது ரொம்ப ஓவர்..?


டெய்லி மிர்ரர் : போரின்போது தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே கொல்லப்பட்டு விட்டனர்.பிரபாகரனின் மனைவி மதிவதணி, பிரபாகரன் வன்னிக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதற்கு முன்பே கொல்லப்பட்டு விட்டார். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், எப்போதும் தாயாருடனேயே ஒட்டிக் கொண்டிருப்பார். எனவே அவரும் தாயாருடன் சேர்ந்து கொல்லப்பட்டிருப்பார்.

ஈழதேசம்: வார்த்தைக்கு வார்த்தை தலைவர் என்று சொன்னீர்களே திரு பி.பி., இப்பொழுது சொல்கிறீர்கள்..தலைவரின் மனைவி பெயரை..பாலச்சந்திரன் அதுவும் தலைவரின் மனைவியுடன் எப்பொழுதும் கூடவே இருப்பார் என்று...இந்த புள்ளி விபரங்களை எப்பொழுது சொன்னீர்கள் இந்திய பார்ப்பனிய உளவு அமைப்புகளிடம்..? ஒரு சிறுவன் தாயுடன் அன்பாக, நேசத்துடன் இருப்பது குற்றம் என்பது போல உள்ளதே...? உங்களின் சொற்கள்...! எனவே திரு கி.பி. என்ன சொல்ல வருகிறார் என்றால், குடும்பத்தை கொன்று அழித்து விட்டோம் என்று.. மார்கோஸ் மனைவி இமல்டா இன்னும் உயிரோடு இருக்கிறார்...சோனியா கும்பல் குடும்பம் உயிரோடு இருக்கிறது.. ஏன் இவ்வளவு..! திருட்டு ரயில் ஏறி சென்னை வந்த கருணாநிதி குடும்பம் இருக்கிறது...ராஜபக்சே தந்தை துவக்கினார் இந்த சுதந்திரா என்ற கட்சியை...இன்று அவர்கள் குடும்பம் இருக்கிறது...இன்று வரை..! அட நாதாரிகளா...
கொள்ளை அடிப்பவர்கள்..மக்களுக்கு எப்பொழுதும் எதிராக செயல்படுவார்கள் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்கும்...என்பது போல உள்ளதே திரு பி.பி...!

டெய்லி மிர்ரர் : போராளிகளுன் இணைந்து போராடி வந்தவர்கள் மகள் துவாரகாவும், மூத்த மகன் சார்லஸ் அந்தோணியும். எனவே அவர்களும் கொல்லப்பட்டு விட்டனர். துவாரகா மே 14ம் தேதி கொல்லப்பட்டார்.

ஈழதேசம் :
போராளிகளுடன் இணைந்து போராடியவர் துவாராகா..சரி. அது தவறு என்று சொல்கிறீர்களா..? சரி கே.பி..! எல்லோரும் கொல்லப்பட்டு விட்டார்கள்..இவை எல்லாம் புகைப் படத்துடன் இந்திய மீடியாக்கள் வெளியிட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டது...இப்பொழுது நீங்கள் சொல்வதால் என்ன நடந்து விடப்போகிறது..நீங்கள் ஒப்புதல் வாக்கு மூலம் அளியுங்கள் என்று கோத்தபாய சொன்னாரா...?(திரும்பத் திரும்ப சொல்வதால் பொய் ஒன்றும் உண்மையாகிவிடாது)

டெய்லி மிர்ரர் : பிரபாகரன் உடலைப் பெற முன்வராத சகோதரர்கள்:

ஈழதேசம் : இறந்து போன ஒருவரின் உடலை, உடனே பெற்றுக்கொள்வார்கள் உறவினர்கள்...
நீங்கள் என்னப்பா..ஒருவரையா கொன்றீர்கள்...முள்ளி வாய்க்காலில் கொன்ற அணைத்து உடல்களையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அவர்களின், அதாவது நீங்கள் கொன்றவர்களின் உடல்களை பெற்று கொள்ளுமாறு அறிவிப்பை சொன்னீர்களா..? அவர்களின் உறவினர்களுக்கு..? இல்லையே...இப்பொழுது தலைவரின் சகோதர்களை குற்றம் சுமத்துவது ஏன்..? இதற்கு பின் ஏதாவது சதி வலை உள்ளதா..?


டெய்லி மிர்ரர் :
பிரபாகரன் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும், நான் இயக்கத்தை உயிர்ப்புடன் வைக்க தீவிர முயற்சிகள் எடுத்தேன். இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றேன். பின்னர் தலைவரின் உடலுக்கு முறைப்படி உரிமை கோருமாறு அவரது குடும்பத்தினரை கேட்டுக் கொண்டேன்.

ஈழதேசம் : தலைமைப் பொறுப்பை ஏற்றீர்கள்...என்பது பொதுமக்களுக்கு தெரிந்தது ஒரு சில வாரம்..அதுகூட கிடையாது..உங்களின் உண்மை நிலை..தலைவரின் உடலுக்கு முறைப்படி எப்பொழுது உரிமை கோரினீர்கள் என்று தெரியவில்லை...இது ஏதோ கசாப் வகையறா மாதிரி
தெரிகிறதே..முன்பு, இந்தியாவில் ஒரு தீவிரவாதியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு பாகிஸ்தானிய அரசை வலியுறுத்தினார்கள்... பாகிஸ்தான் அரசோ..அட போங்கப்பா..நாங்களே தாலிபான்களை வைத்து, ஒரு அரசியல் விளையாட்டை நடத்திக் கொண்டு இருக்கறோம்..நீங்கள் என்னடாவென்றால் இவரின் உடலை வாங்கு..அவரின் உடலை வாங்கு என்று உள்ளூர் அரசியல் செய்து வருகிறீர்கள்...

டெய்லி மிர்ரர் :
பிரபாகரனின் சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோரைத் தொடர்பு கொண்டு உடலைப் பெற உரிமை கோருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர்.
குறிப்பாக, பிரபாகரன் சகோதரியின் கணவர் தனது மனைவியிடமிருந்து போனை வாங்கி என்னிடம் கோபமாகப் பேசினார். இனிமேல் போன் செய்ய வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி வைத்து விட்டார்.

ஈழதேசம் : தலைவரின் சகோதரி கணவர் மீது ஏனப்பா இவ்வளவு கோபம்..? திருவாளர் பி.பி.யின் தகிடு வித்தைகள், மற்றும் பல ஜபர்ஜஸ்து வேலைகளை கண்டு ஏமாந்து விட்டன கோத்தபாய கும்பல்..அதுபோலவே காங்கிரஸ் பெருச்சாளிகளின் தீய சக்தியின் அரசியல் புள்ளிகள் என்று கருதலாம்...

டெய்லி மிர்ரர் : இதனால் தலைவரின் உடலை யாரும் உரிமை கோர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதையடுத்து ராணுவமே உடலை எரித்து சாம்பலை கடலில் வீசி விட்டது என்று...

ஈழதேசம் : உடலை வாங்குவதற்கு, வாங்குவது குறித்து என்னையா..இவ்வளவு கவலை...உடலை வாங்குவது...இறந்த உடலுக்கு பொறுப்பேற்றுக் கொள்வது என்பதெல்லாம் இந்திய உளவு அமைப்பின் செயல் தந்திரம்..ஐயா..திருவாளர் பி.பி. இனிமேல் பேட்டி கொடுப்பது என்றால் ஓரளவாவது புத்திசாலித்தனமாக கொடுங்கள்.. சும்மா ஒரு டூபாக்கூர் பேட்டி கொடுப்பதைப் போல் இல்லாமல்...நிறைய சிந்தித்து பேட்டி கொடுங்கள்...

கே.பி அவர்கள் தற்போது இனவெறிபிடித்த இலங்கையின் கைதி எனவே அவர் சொல்லும் விடயங்கள் இலங்கை அரசு சொல்லும் "பொய்" செய்தியாகவே மக்களாகிய நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்


ஈழதேசம் செய்திக்குழு

Comments

தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பற்றிய தமிழ்நாட்டு கிராம மக்களின் கருத்துக்கள்.

http://www.youtube.com/watch?v=luhuglahioQ