உயிரோடு இருக்கிறாரா க.வே.பாலகுமாரன்?


இன்று Sri Lanka Guardian பத்திரிகை திரு.க.வே.பாலகுமாரன் அவர்கள் 17 மே 2009 அன்று இராணுவத்திடம் வெள்ளைக் கொடியுடனும் மேலும் சில உயர்நிலைத் தலைவர்களுடனும் சரணடைந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.

இராணுவத்தினரின் பகுதிக்குள் தனது மகனுடன் சரணடைந்த நிலையில் எடுக்கப்பட்ட பிரத்தியேகப் புகைப்படத்தினை வெளியிட்டள்ளது. இராணுவத்திற்குள் இருக்கும் தங்களது தகவல் பிரிவிடமிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படம் இதுவெனத் தெரிவித்துள்ளனர்.

படம்:Sri Lanka Guardian

இப்புகைப்படத்தின் பின்புலத்தில் இராணுவத்தினரின் நடமாட்டம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டதாக அமைச்சர் ஒருவரால் தெரிவிக்கப்பட்ட செய்தி இதன்மூலம் பொய்யென நிரூபிக்கப்பட்டடுள்ளது.

புனர்வாழ்வு அமைச்சகத்தின் அறிக்கையிலே திரு.க.வே.பாலகுமாரன் அவர்களினதும் திரு.யோகி அவர்களினதும் துணைவியார்கள் விதவைகளிற்கான நிவாரணம் பெறுவதாகக் கூறியிருந்ததை அடுத்து புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க அவர்களை வினவியபோது சரணடைந்த 11,686 போராளிகளிற்குள் 737 போராளிகள் தீவிர போரளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பட்டியலுக்குள் இவர்கள் பெயர்கள் வரவில்லையெனவும் அறிவித்திருந்தார்.

ஆனாலும் இந்தப்புகைப்படம் திரு.க.வே.பாலகுமாரன் அவர்களும் அவரது மகனும் இராணுவத்தின் பிடிக்குள் இருந்ததை நிரூபித்துள்ளது. இவர்கள் கொல்லப்பட்டது நிரூபிக்கப்பட்டால் சிறீலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்த்திற்கு இந்தப் புகைப்படமும் பெரிய சான்றாக அமையும்.

Comments