யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம்

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் அமைப்பதற்கு இந்திய மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது இந்தச் செய்தி ஈழத்தமிழர்கள் மத்தியில் அச்சத்தைஏற்படுத்தியுள்ளது இன்று வரை ஈழத்தமிழர்களுக்கு எதிரான அரசு அதே மக்கள் மத்தியில்துணைத் தூதரகம் திறக்கிறதென்றால் அச்சம் வராமல் வேறு என்ன வரும்.இந்திய-சிங்களக் கூட்டணி உருவான நாட்தொட்டு ஈழத்தமிழர்கள் பாரிய உயிர் மற்றும்சொத்திழப்புக்களை அனுபவிக்கின்றனர் துணைத் தூதரகத்தின் வருகையால் இழப்புக்கள் கூடுமேஒழியக் குறையாது என்பது தெரிந்த விடயம் பனையால் வீழ்ந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாக இந்திய தூதரகத்தின் வருகை அமையும்.

ஈழத்தமிழர்களுடைய இருப்பை மேலும் சிதைப்பது இந்திய மத்திய அரசின் உள்நோக்கமாக இருக்கிறது குடிமக்களை கூடார மக்களாக்கிய பெருமை யாரைச் சேரும் என்று கேட்டால் அதற்குவிடை இந்தியா தான் வரும்.இந்திய மத்திய அரசை மிகவும் பணிவாக கேட்கிறோம் எம்மை நிர்க்கதியாக்கியது போதும்ஈழத்தமிழர்களைச் சின்னா பின்னாமாக்கிய நீங்கள் எமக்கு உதவா விட்டாலும் உபத்திரவம்கொடுக்காதீர்கள். எனது எதிரிகளை நான் கவனித்து கொள்கிறேன் இறiவா எனது நண்பர்களிடம் இருந்து என்னைநீகாத்தருள் வாயாக என்று முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் சேர்சிசில் கூறியிருக்கிறார்.

இந்தியா எமக்குஎதிராக எடுத்த முடிவுகளையும் செயற்பாடுகளையும் எம்மால் தாங்கிக் கொள்ள முடியும் நண்பன்என்ற போர்வையில் இந்தியா துனைத் தூதரகம் திறக்கப் போகிறது என்ற செய்தி எம்மை நடுங்கிச்சாக வைக்கிறது.கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும் போது அவதானமாக இருங்கள் என்ற ஆங்கிலப் பழமொழிநினைவுக்கு வருகிறது 1987ல் நீங்கள் அரிசியும் பருப்பும் தந்தீர்கள் பின்பு சிங்களவனோடு ஒப்பந்தம்செய்தபடி ஈழத்தமிழர்களை இளிச்சவாயர்களாக ஆக்கினீர்கள். அந்தளவும் போதாதென்று அமைதிப் படை என்ற பெயரில் ஒரு கொலைவெறியும் காமவெறியும்பிடித்த ஆக்கிரமிப்பு படையை அனுப்பினீர்கள் 6000 வரையலான பொது மக்களைக் கொன்றுகுவித்தீர்கள்.

2008-2009 காலப்பகுதியில் சிங்களவனுக்குப் பக்கபலமாக நின்று ஈழத்தமிழினப் படுகொலையை அரங்கேற்றியுள்ளீர்கள் இப்போது துனைத் தூதரகம் திறக்க திட்டமிட்டுள்ளீர்கள் உங்கள் இரத்தப் பசிஇன்னும் அடங்கவில்லையா? இருபக்க வர்த்தகத்தை பெருக்குதல் கலாச்சாரப் பரிமாற்றங்களைச் செய்தல் நற்பணிகளைநடைமுறைப் படுத்தல் நட்புறவுகளை ஏற்படுத்தல் பாதுகாப்பு விவகாரங்களைக் கவனித்தல் என்பனஒரு தூதரகத்தின் வெளிப்படையான பணிகளாகும். ஆனால் மறைமுகப் பணிகள் இருக்கவே இருக்கின்றன சாணாக்கியரின் அர்த்த சாத்திரம் இந்தியஇராசதந்திரிகளின் வேத நுலாகும் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துதல், நோய்களைபரவச் செய்தல், சதி வேலைகளில் ஈடுபடுதல் என்பன அர்த்தசாத்திர நூலில் சிபாரிசு செய்யப்பட்டசில விடையங்களாகும்.

இந்தியத் துணைத் தூதரகத்தின் வருகையால் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலையும்இந்திய இராணுவம் தமிழ்க் குழுக்களோடு இணைந்து நடத்திய அராஜகங்களை எத்தனை தலைமுறைசென்றாலும் ஈழத்தமிழர்கள் மறக்கப் போவதில்லை. மீண்டும் அந்த நிலை தோன்றும்.உங்கள் வரவு நிட்சயம் ஏதோ சதி வேலைக்குத் தான் என்று உறுதியாக நம்புகிறோம் உங்கள்போக்கு வரவுக்குத் தடையாக இருந்தவர்கள் விடுதலைப் புலிகள் மாத்திரமே தடையைசிங்களவனோடு சேர்ந்து நீக்கி விட்டிர்கள் உள்ளுக்கு வந்து குந்தியிருக்க ஆசைப் படுகிறீர்கள்.இனி விட்ட இடத்தில் இருந்து தொடங்கலாம் தானே? 1987ல் அழைக்கப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களாகநுளைந்தீர்கள். இப்போது நீங்கள் சிங்களவனின் நட்பு நாடல்ல உறவு நாடு இதை அதிபர் ராஜபக்சசொல்லிவிட்டார் ஈழத்தமிழனுக்கு நீங்கள் என்ன தீங்கு செய்தாலும் தட்டிக் கேட்க ஆளில்லை.

இந்தியத் தூதரங்கள் செய்யும் சதி வேலைகளையும் தூண்டும் படுகொலைகளையும் நன்கு அறிவோம்நேபாளத்தில் கோட்டை போன்ற தூதரகக் கட்டிடத்தை அமைத்தவாறு அந்த நாட்டை இந்தியா சீரழித்து வருகிறது.ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் துணைத் தூதரகங்களை பாக்கிஸ்தான் ஆதரவு பெற்றதீவிரவாதிகள் ஏன் தாக்கி அழிக்கிறார்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் உள்ளங்கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவை தானா?பாக்கிஸ்தானின் நான்கு மாநிலங்களில் ஒன்றான பலுச்சிஸ்தானில் பிரிவினையைத் தூண்டுவது இந்தியா தான்.

இதற்குப் பதிலடியாக பாக்கிஸ்தான் காஷ்மீர் பிரிவினை வாதிகளுக்கு ஆதரவுவழங்குகிறது பலுச்சிஸ்தான் பிரிவினையை ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் துணைத்தூதரகங்கள் ஊக்குவிக்கின்றன.ஆப்கானிஸ்தானின் கந்தகார் பெருநகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளின்வழிகாட்டலில் பலுச்சிஸ்தான் விடுதலை இயக்கத்தினர் பயங்கரவாதவச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை இராசதந்திர ரீதியில் இந்தியாவின் கவனத்திற்கு பாக்கிஸ்தான் பலமுறை கொண்டுவந்திருக்கிறது. தம்மை புனிதர்களாகக் காட்டிக் கொள்ளும் இந்திய ஆளும் வர்க்கம் தனது சதி வேலைகளைத்தொடர்ந்து செய்கின்றனர் இந்திய இராசதந்திரத்தின் இன்னுமொரு பண்பையும் சுட்டிக் காட்டவேண்டும்.பாக்கிஸ்தான் பதிலடி கொடுத்தால் பெருங் குரல் எடுத்து அலறுவார்கள்.

ஆனால் இந்தியா செய்யும்சதி பற்றிய பாக்கிஸ்தான் முறைப்பாடு செய்தால் எமக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதுரியமாக வாதிடுவார்கள்.பாக்கிஸ்தான-; ஈரான் எல்லையில் இந்தியா தேவைக்கு அதிகமான துணைத் தூதரகங்களைத்திறந்துள்ளது இவை பாக்கிஸ்தான், அப்கானிஸ்தான் நாடுகளுக்குள் குழப்பங்களையும் சதிகளையும்தூண்டுகினற் ன இதன் காரணமாக அவை தாக்குதல் இலக்குகளாக அமைகின்றன.பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு அடிப்படைக் காரணமாக அப்கானிஸ்தானில் இயங்கும் இந்தியத் துணைத் தூதரகங்களின் செயற்பாடுகள் அமைகின்றன.சீனாவும் பாக்கிஸ்தானும் கூட்டாக குவதார் துறைமுக திட்டத்தையும் இரு நாடுகளையும் தரைமார்க்கமாக இணைக்கும் கரக்கோரம் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தையும் செயற்படுத்தியுள்ளன.

மேற்கு சீனாவினன் வளங்கள் அரேபியன் கடல் ஊடாக ஏற்றுமதியாகும் வாய்ப்பு மேற்கூறியதிட்டங்கள் மூலம் சாத்தியமாகியுள்ளது சீனாவும் பாக்கிஸ்தானும் கூட்டாகப் பெறும் பொருளாதாரமற்றும் இராணுவ வலு அளப்பரியதாகும். பாக்கிஸ்தானின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு இந்தியா தனது தூதரகங்களையும் துணைத்தூதரகங்களையும் பயன்படுத்துகிறது. குவதார் துறைமுகத்தில் பணியாற்றும் சீனப் பொறியியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குபலுச்சிஸ்தான் பிரிவினை வாதிகளுக்கு இந்தியா ஆயுத உதவி நிதி உதவி செய்கின்றது.கனிந்து வரும் ஈழத்தமிழர்-சீனா நட்புறவைச் சிதைப்பதற்கும் அம்பாந்தோட்டையில் சீனா அமைக்கும்துறைமுகப் பணிகளைக் குழப்புவதற்கும் இந்தியாவின் யாழ்ப்பாணத் துணைத் தூதரகம் களமாகஅமையலாம் என்ற நியாயமான அச்சம் எமக்கு உண்டுஏற்கனவே துன்பப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு இந்திய துணைத் தூதரக வருகை மேலதிகதுன்பச் சுமையைச் சுமத்தலாம் என்பது திண்ணம்.

ஈழத்தமிழர்களுக்கு நன்மை பயக்கும் எந்தவொரு உதவியையும் இந்தியாவால் செய்ய முடியாதென்றுகூட்டணியினருக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரமும் நிதி அமைச்சர் பிரணாப் முக்கர்ஜியும்புதுடில்லியில் வைத்துக் கூயியுள்ளனர்தமது சொந்த நலனுக்காக இந்தியாவை வாயாரப் புகழும் சம்பந்தனும், செல்வம் அடைக்கலநாதனும்உண்மை பேசத் தவறியுள்ளனர் பொது மக்கள் நிலத்தை இராணுவத் தேவைக்காக எடுப்பதைதவிர்க்க வேண்டும் என்று கூட்டணியினர் கேட்டபோது இதற்கான உத்தரவாதத்தை தம்மால் வழங்கமுடியாது என்று இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு ஒரு இலட்சம் இராணுவத்தினரும் அவர்கள் குடும்பத்தினரும் வடக்கில் குடியேறும் போதுஇன விகிதாசாரம் பாதிப்படையும் என்று கூட்டணியினர் சுட்டிக் காட்டிய போது இந்தியாவால் ஒன்றும்செய்ய முடியாதென்று பதில் கூறப்பட்டது.இப்படி ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் இந்தியாவின் துணைத் தூதரக வருகையால் என்ன நன்மை வரப்போகிறது? தீமைதான் வந்து சேரும். யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் நாட்டுக் கோயில்களுக்கு வழிபடச் செல்வோர் எளிதாக வீசா உள்நுளைவைப் பெற்று விடலாம் என்று சிலர் மனப் பால் குடிக்கின்றனர்.

ஈழத்தமிழர்களின் உள்நுளைவு விண்ணப்பங்கள் புது டில்லிக்கு அனுப்பப்பட்டு அவ்விடத்தின் அனுமதி பெற்ற பின்பே வீசாவழங்கப்படுகிறது.இது ஈழத்தமிழர்களுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் நடைமுறை அப்படி வீசா உள்நுளைவு அனுமதிகிடைத்தாலும் சென்னை விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பப்படும் சாத்தியம் நிறையஇருக்கிறது பர்வதியம்மாவுக்கு நடந்ததை மறவாதீர்கள்.இந்திய துணைத் தூதரக வருகையை ஈழத்தமிழர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் வரவிடுவோமானால் எமது எதிர்காலம் படுமோசமாக அமையும்

நன்றி:ஈழமுரசு

Comments