நியூசிலாந்தின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே போதும் ஈழப்போராட்டத்தை முன்னெடுக்க!

உலக நாடுகள் ஈழப்போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் போராகத்தான் இன்றுவரை கூறிவருகின்றார்கள். அதற்காக போராடிய புலிகளை பயங்கரவாதிகளாக பல நாடுகள் பிரகடனப்படுத்தி அவர்களுக்கு எதிராக பல கொடிய சூழ்ச்சிகளை செய்துகொண்டு வந்தார்கள். அகதி அந்தஸ்து கோரியவரை நியூசிலாந்து அரசு அவரின் கோரிக்கையை நிராகரித்து அவரை நாடுகடத்த உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இவரோ மேல் முறையீட்டை செய்து,அதில் வெற்றிகண்டார்.
Coat of Arms of New Zealand.svg
ஆனால், நியூசிலாந்து அரசோ எப்படியேனும் அவரை நாட்டை விட்டு அனுப்பிவிட வேண்டும் என்று கங்கணம் போட்டு உச்சநீதிமன்றத்தில் இவருக்கு எதிராக மனுவை முன்வைத்து வழக்கை தொடங்கினார்கள். உச்சநீதிமன்றமோ இவரின் அகதிக் கோரிக்கையை மீள் பருசீலீக்குமாறு நியூசிலாந்து அரசை வேண்டியது மட்டுமன்றி புலிகள் நடாத்தும் ஈழப் போராட்டம் ஒன்றும் பயங்கரவாத யுத்தமில்லை என்றும், தமிழர்கள் சுயநிர்ணய உருமைகளுக்கு உரித்துடையவர்கள் என்றும் தீர்ப்பளித்துள்ளது.


ஜூன் 2010 – இல் நியூ சிலாந்து அரசு உச்சநீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்து ஏற்கனவே குறித்த ஈழத்தமிழருக்கு ஆதரவான தீர்ப்பை அளித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துச் செய்ய வேண்டியது. தொடர்ச்சியாக இரு மாதங்கள் இடம்பெற்ற நேரடி மற்றும் குறுக்கு விசாரணைகளின் பின்னர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்த அகதி கோரிக்கைக்கு விண்ணப்பித்திருந்த ஈழத்தமிழருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளதானது அகதிகளின் விடயங்களில் அக்கறை செலுத்தும் அனைவருக்கும் ஆறுதல் அளிப்பதாகவுள்ளது.

நியூசிலாந்தின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெறுமனே நியூசிலாந்து நாட்டுக்கு மட்டுமே பொருந்தும் என்று நாம் கருதிவிடக்கூடாது. குறிப்பாக, அனைத்து‘காமன் லா’சட்டத்தை பின்பற்றும் நாடுகளுக்கும் இந்த தீர்ப்பை எடுத்துச்சென்று இப்படியான அகதிநிலை கோரிக்கையை விசாரிக்கும் நீதிமன்றத்தின் முன்னாள் கொண்டுசெல்வது மட்டுமன்றி விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகவும் ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நாடுகளில் வழக்குகளை நடாத்தி, ஈழத் தமிழரின் போராட்டத்தின் நியாயத்தை உலகறிய செய்யலாம்.

உலக நாடுகளினால் விதிக்கப்பட்டிருக்கும் புலிகளுக்கு எதிரான தடையைக் கூட வழக்காடுமன்றத்தின் மூலமாக தமிழர்கள் நடாத்தலாம். முன்னுதாரணமாக, நியூசிலாந்து நாட்டின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காண்பித்து விடுதலைப் புலிகள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்லர் மற்றும் அவர்கள் சிந்திய ரத்தம் தமது இனத்தை காப்பாற்றுவதற்காகவே தான் என்பதை எடுத்துயம்பி தமிழரின் நியாயத்தை பறைசாற்றலாம்.


குறித்த ஈழத்தமிழர் யார்?

நியூசிலாந்து உச்சநீதிமன்றம் குறித்த நபரின் பெயரை வெளியிடவில்லை காரணம் அவரின் அகதி மனு இன்னும் நிலுவையிலேயே உள்ளது. அத்துடன் குறித்த நீதிமன்றம் நியூசிலாந்து அரசிடம் பரிந்துரை செய்துள்ளது இவரின் அகதி மனுவை ஏற்று மீண்டும் பரிசீலிக்க. ஆகவே, இவரின் அடையாளத்தை பாதுகாப்பதே சட்ட மரபு. இருந்தாலும், இவரை பற்றிய தகவல்களை நீதிமன்றம் வெளியுட்டுள்ளது.

குறித்த நபர் வடமராட்சிப் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் எனவும் இவர் 1958-ஆம் ஆண்டு பிறந்தவர் எனவும் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு 1981-ஆம் ஆண்டு சென்று கப்பலில் பணியாற்றியதுடன், பின்னர் 1989-ஆம் ஆண்டு நாடு திரும்பி திருமணம் செய்துகொண்டு ஆறு மாதங்கள் வல்வெட்டிதுறையிலையே தங்கியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மத்திய கிழக்குக்கு சென்ற இவர், 1990-ஆம் ஆண்டு மீண்டும் வல்வெட்டித்துறை திரும்பி இரண்டு வருடங்கள் யாழ் பிரதேசத்திலேயே தங்கியிருந்தார்.

ஜூலை 1992, தாய்லாந்த் சென்ற இந்த நபர் தாய்லாந்த் நாட்டை சேர்ந்த கப்பலில் பிரதான தொழில் நுட்பவியலாளராக இணைந்துகொண்டார். இவரின் கூற்றுப்படி, குறித்த கப்பலின் பெயரையோ அல்லது அந்த கப்பலின் உருமையாளரின் விபரங்களையோ தான் அறிந்து இருக்கவில்லை என்று கூறினார். இருப்பினும், குறித்த கப்பலில் தொடந்து பணிபுரிந்த இவர், சிங்கபூர் மற்றும் தாய்லாந்த் இடையில் பொருட்களை ஏற்றியிறக்கும் குறித்த சரக்கு கப்பலில் பணிபுரிந்தார்.

ஜனவரி 4, 1993-அன்றுஇ குறித்த யஹாட் என்ற கப்பல், புக்கேட் என்ற தாய்லாந்த் பிரதேசத்தில் இருந்து புறப்பட தயாராகியது. சிறிய மீன்பிடிப்படகுகளில் வந்து பொருட்களை ஏற்றியதுடன், ஏற்கனவே இருந்த கப்பல் ஊழியர்களுடன் (ஒன்பது) சேர்ந்து, மேலும் 10 நபர்கள் ஏறிக்கொண்டார்கள். குறித்த பத்து நபர்களில், விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கிட்டு எனப்படும் கிருஷ்ணகுமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கப்பல் பயணத்தை தொடங்கியது குறித்த சரக்கு கப்பல் 19 நபர்களுடன்;. தளபதி கிட்டுவை எப்படியேனும் கொன்றுவிடவேண்டும் அல்லது அவரை இந்திய சர்வாதிகார அரசிடம் பிடித்துக்கொடுத்துவிட வேண்டும் என கங்கணம் கட்டி செயல்பட்ட நபர்களினூடாக இந்திய அரசுக்கு தகவல் போனது. இந்திய அரசு தனது கடற்படையிடம் கப்பலை எப்படியேனும் மடக்கிப்பிடித்துவிட வேண்டும் என்று. அதன் அடிப்பைடயில், இந்திய விமானப்படையின் ஒத்துழைப்புடன் குறித்த கப்பலின் நகர்வுகளை மோப்பமிட்ட இந்திய கடற்படையினர்,

நடுக்கடலுக்குள் வைத்து குறித்த கப்பலை வழிமறித்து, கப்பலின் மாலுமியை இந்திய கடற்பிரதேசத்திற்குள் பயணிக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இந்தியப் பிடியில் சிக்கி ஈழப் போராட்டத்திற்கு பின்னடவை உண்டுபண்ண கூடாதென்ற முடிவுக்கு வந்த கிட்டு உட்பட 10 விடுதலைப் புலி போராளிகள் கப்பலை வெடிவைத்து வங்காள விரிகுடா கடலில் பிணமாக, கப்பல் ஊழியர்கள் ஒன்பது பேரும் பெரும் கடலில் விழ இந்தியக் கடற்படை கைது செய்து தொடர்ந்து விழக்கமறியலில் விசாகப்பட்டினத்தில் வைத்து விசாரித்தார்கள். தொடந்து ஏறத்தாள நான்கு வருடங்களாக சட்டவிரோதமாக தடா சட்டத்தில் பிடித்து வைத்து விசாரித்த இந்திய அரசு, பின்னர் மாபெரும் தலைகுனிவை சந்திக்க வேண்டிவந்தது.

இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் தலைகுனிவு

இந்திய அரசு 34 சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது குறிப்பாக அனைத்து இந்திய சாட்சிகளும் இந்திய கடற்படையினரே என்பது குறிப்பிடத்தக்கது. அரச சட்;டத்தரணிகளின் வாதங்களின்படி, குறித்த கப்பல் இந்தியாவிற்குள் ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் கொண்டுவந்து நாசகார வேலைகளை செய்ய எத்தனித்ததாகவும் அத்துடன் குறித்த கப்பலில் பயணித்த நபர்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் விடுதலைப்புலிகள் முக்கிய உறுப்பினர்கள் என்றும் இவர்களினால் இந்திய பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் எனவும் வாதாடினார்கள்.

குற்றவாளிகளின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் குறித்த கப்பலை இந்திய கடற்படை சட்டவிரோதமாக 440 நாட்டிகள் மைல் தொலைவில் பிரயோகிக்கும்போது இந்தியக் கடற்படை மடக்கி வலுக்கட்டாயமாக இந்திய கடற்பிராந்தியத்திற்குள் கொண்டுவர முயற்சித்ததாகவும் வாதாடினார்கள். ஆனால், அரச வழக்கறிஞர்கள் பின்னர் கூறும்பொழுது தாம் நடுக்கடலுக்குள்ளேயே குறித்த கப்பலை மறித்ததாகவும்,

தமக்கு அந்த உரிமை உண்டு என்றும் வாதாடினார்கள். குறிப்பாக, கடற்கொள்ளையர்களின் ஆபத்துக்கள் குறித்து நடுக்கடலுக்குள் இருப்பதனால் தமக்கு அனைத்து உரிமையும் குறித்த கப்பலை தடுத்து விசாரிக்க உரிமையுண்டு என்றும் ஆனால் குறித்த கப்பலோ தமது வேண்டுதலுக்கு இணங்க மறுத்து வெடிகுண்டு வைத்து கப்பலை வெடிக்கவைத்ததாகவும் வாதாடினார்கள்.
குறித்த விசாரணையை மேற்கொண்ட தடா நீதிமன்றத்தின் நீதிபதி, ப. லக்ஷ்மன் ரெட்டி, இந்திய கடற்படையையும், இந்தியாவின் சிறப்பு புலனாய்வு துறையினரையும் வன்மையாக கண்டித்தது மட்டுமன்றி பொய்யான தகவல்களை குறித்த கப்பல் மீதும் அதன் ஊழியர்கள் மீதும் தொடுத்தது குற்றம் என்றும், கப்பலை நடுக்கடலில் வைத்து மறித்தது உலக சட்டத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தீர்ப்பளித்தார்.

மேலும், குறித்த கப்பல் சிங்கப்பூரில் பதியப்பட்டு ஹோண்ட்ருஸ் நாட்டு கொடியுடன் பயணித்த காரணத்தினால், குறித்த ஒன்பது ஊழியர்களையும் சிங்கப்பூருக்கே இந்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்று ரெட்டி தனது தீர்ப்பில் கூறினார்.

குறித்த அனைத்து ஊழியர்களும், 2001-ஆம் ஆண்டளவில் இந்திய அரசினால் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் மூவர் நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுலா செல்லுவதாக கூறி உல்லாச விசா எடுத்து அதே ஆண்டு நியூசிலாந்து சென்றார்கள். குறிப்பாக, குறிப்பிட்ட நபரின் மனைவி பிள்ளைகளும் அதே ஆண்டு உல்லாச விசா எடுத்து நியூசிலாந்து சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், குறிப்பிட்ட நபர் அகதி கோரிக்கையை முன்வைத்து தான் திரும்பி சிறிலங்கா செல்லமுடியாது என்று விண்ணப்பித்தார்.

ஆனால், நியூசிலாந்து குடிவரவு அதிகாரிகள் இவர் மற்றும் இரு கப்பல் ஊழியர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று நியூசிலாந்து அரசு கட்டளை பிறப்பித்தது. இரு நபர்கள் நாட்டை விட்டு வெளியேற, குறிப்பிட்ட ஒரு நபரோ குடிவரவு அதிகாரிகளின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீட்டின் நீதிபதோ, குறித்த நபரை நாட்டை விட்டு வெளியேற்றக்கூடாதென்றும் அவரின் மனுவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. ஆனால், நியூசிலாந்து அரசோ உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டின் நிராகரிப்பை ரத்துச்செய்யவேண்டும் என்று வழக்கை தொடந்தது.

தர்மம் பக்கமே நியாயம்

தர்மம் பக்கமே நியாயமென்ற பழமொழிக்கேற்ப நியூசிலாந்தின் உச்சநீதிமன்றமும் நியாயம் பக்கமே நின்று தர்மத்தை நிலைநாட்டியுள்ளது. மேலும் ஒரு படிமேல் சென்று, குறித்த விசாரணையை நடாத்திய நீதிபதிகள் ஈழப்போராட்டத்தின் நியாயத்தை வெளிக்கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு தேசமும் தமது இருப்பை நிலைநாட்டவும், தம்மை பாதுகாக்கவும் சுதந்திர தனிநாட்டை நிலைநாட்டவும் அத்துடன் சுய நிர்ணய கோரிக்கையை முன்வைத்து போராட தகுதியுள்ளதாகவும், ஈழத்தமிழ் தேசமும் அதனடிப்படையிலேயே போராடியதாகவும் கூறி தீர்ப்பளித்துள்ளனர்.

குறித்த அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலின் பிரதான பொறியியளாளர் எனவும், அவரே அதை ஒத்துக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் சிறிலங்கா அரசு இன சுத்திகரிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள் என்று கூறியுள்ளனர்.

இறைமை உள்ள இனம் என்ற அடிப்படையில் அவர்கள் தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும், அதற்காகவே விடுதலைப் புலிகள் போராடியதாகவும் அவர்கள் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்கள். அத்தோடு, நின்றுவிடாது தமிழ்ப்புலிகள் ஒரு போராட்ட அமைப்பு என்றும் அது அரசியல் ரீதியாக தற்போது இயங்கிவருவதாகவும் கூறியுள்ளார். அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அந்த தமிழருக்கு நியூசிலாந்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று குறித்த உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தற்போது நியூசிலாந்தில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை முன் உதாரணமாகக் கொண்டு, புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள நாடுகளில் அத்தடையை நீக்க தமிழர்கள் தாம் வாழும் நாடுகளை வேண்டலாம். தேவைப்பட்டால், அவ் நாடுகளின் நீதிமன்றங்களை நாடி வழக்கு தாக்கல் செய்து தமிழரின் போராட்டத்தை உலகறியச் செய்வதுடன் தமிழரின் அரசியல் விருப்பத்தை உலக நீதிமன்றங்கள் ஊடாக செய்வோமேயானால்,

நிச்சயமாக அரசியல்வாதிகளும் தமிழரின் பக்கம் நின்று அவர்களின் போராட்டத்;திற்கு ஆதரவளிப்பார்கள் என்பது மட்டும் உண்மை. நியூசிலாந்தின் பத்தாயிரத்திற்கும் குறைவாக இருக்கும் தமிழரால் அந்நாட்டின் அரசியல்வாதிகளையும், நீதிபதிகளையும் கவர்ந்து ஈழத்தமிழரின் போராட்டத்தின் நியாயத்தன்மையை எடுத்துரைக்க முடியுமென்றால் பல ஆயிரம் தமிழர்கள் வாழும் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்த் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வதியும் தமிழர்களால் ஏன் இதனை செய்ய முடியாமல் இருக்கின்றது என்பது தான் கவலைக்கிடமானது.

புலம்பெயர் தமிழர் செய்யவேண்டியது என்னவென்றால் புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை அகற்றி அவர்களின் போராட்டத்தை அங்கீகரிப்பதன் மூலமாகத் தான் ஈழத் தமிழரின் விடியல் தங்கியுள்ளது. சிறிலங்கா தனது அகங்காரங்களை காட்டிக்கொண்டிருப்பது விடுதலைப்புலிகளை உலகநாடுகளில் அவர்களை தடைசெய்து இருப்பதுதான்.

காரணம் சிறிலங்கா ஏதோ தான் மிகப்பெரிய இராஜதந்திரம் ஊடாக புலிகளை தடைசெய்துவிட்டதாக இருப்பதன் காரணமாகத்தான் மகிந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அகங்காரத்துடன் தமிழர் நிலங்களை சுபீகரிக்க படையை ஏவிவிட்டு தமிழரின் தாயக பூமியில் கால்பதித்து அட்டூழியங்களை செய்துகொண்டிருக்கின்றார்கள். ஏன், ஐக்கிய நாடுகள் சபையையே சீண்டுமளவு தைரியம் சிறிலங்காவுக்கு வந்ததென்றால் நிச்சயம் அது சிறிலங்காவின் அகங்;காரம் எல்லை கடந்து விட்டது என்பதைத் தான் காட்டிநிற்கின்;றது. இதனை சமன்பாட்டிற்குள் கொண்டுவர புலம்பெயர் தமிழர் அத்துடன் இந்தியாவில் வதியும் தமிழர்கள் தவறவிட்டார்கள் என்பது தான் உண்மை.

நியூசிலாந்தின் உச்சநீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு தனி ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்று சொல்லிவிட்டு இருந்துவிட முடியாது. இத்தீர்ப்பானது, விடுதலைப்புலிகளை தடைசெய்திருக்கும் நாடுகளுக்கும் மற்றும் தமிழீழ தாயகத்திற்கான போராட்டத்திற்கும் வழங்கப்பட்டுள்ள சான்றிதலாகவேதான் பார்க்கவேண்டும்.

அத்துடன், உலகில் ஒவ்வொரு மூலையில் வாழும் தமிழரும் குறிப்பாக தாம் வாழும் நாடுகள் விடுதலைப்புலிகளை தடைசெய்து இருந்தால் நிச்சயம் நீதிமன்றங்களை நாடி தமது ஆதங்கங்களை தெரிவிப்பதுடன், ஈழத்தமிழர் படும் இன்னல்களை உலகறியச் செய்வதன் மூலமாக தமிழர் பட்ட துன்பங்களுக்கு விமோசனத்தை கொண்டுவர முடியும். எது என்னவென்றாலும்,

நிச்சயம் நியூசிலாந்தின் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை முன் நிறுத்தி மாண்ட வேங்கைகளின் தமிழீழக் கனவை நனவாக்க போராட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Comments

Mohanraj said…
புலிகளின் வெற்றிக்கு யாராலும் முட்டுக்கட்டை போட முடியாது என்பதற்கு இத்தீர்ப்பு ஒன்றே போதுமானது உலக நாடுகளுக்கு...