விடுதலைப்புலிகள் - இஸ்லாமிய தீவிரவாதம் - பயங்கரவாத சந்தை

தெற்கு ஆசியாவில் நீண்டகாலமாக தம் உரிமைக்காக ஆயுதம் ஏந்திய போராட்டம் பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் மிகவும் கீழ்த்தரமாக சர்வதேசத்தின் முழு ஒத்துக்ஷைப்புடன் ஒடுக்கப்பட்டு ஓராண்டிற்கு மேல் ஆகின்றது.மழை நின்றாலும் தூறல் நிற்காது என கூறுவார்கள் அதுபோலவே போர் முடிந்துவிட்டது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது என மஹிந்த அரசும் அதற்கு ஆதரவு வழங்கும் நாடுகளும் கூறிவருகின்றனர். என்றாலும் விடுதலைப்போராட்டத்தினை நடாத்தி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளை வைத்து வியாபாரம் செய்யும் பயங்கரவாத வியாபாரம் இன்னமும் நிற்கவில்லை. மழையினை விட தூறலே நீண்டகாலம் நிலைக்கும் போல இருக்கின்றது இன்றைய நிலை.

விடுதலைப்புலிகள் என்பது பயங்கரவாதம் எனும் வியாபாரிகளுக்கு ஓர் பெரும் முதலீடாக இருக்கின்றதோ என்னமோ அந்த புலிகள் என்ற சொல் இல்லாமல் தெற்கு ஆசியாவில் அரசியல் இல்லை என்றளவிற்கு வந்துவிட்டது.

கூடவே இப்போ பயங்கரவாதம் என்ற பொருளின் வியாபாரிகள் இப்போ விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற எடுகோளில் விடுதலைப்புலிகளை பயங்கரவாதம் என்ற வியாபாரத்தின் இருப்பாகவும் புதிய சரக்காக இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பொருளையும் கலந்து எப்படி வியாபாரம் செய்யலாம் என்பதே இப்போது நடந்து வருகின்றது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இந்த வியாபாரத்தில் முன்னணியில் இருந்தாலும் அதற்கு அப்பால் பெரு வியாபாரிகளின் முதலீடுகளே அதிகமாக இருக்கின்றன என்றே கூறலாம்.

இந்தியா பாகிஸ்தான் தம்மிடையே உள்ள போட்டிகளிற்கும் தமது பயங்கரவாத நடவடிகைகளிற்கும் அவர்களால் உருவாக்கப்பட்ட , தமது உள்ளூர் அமைப்புக்களை பயன்படுத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே.
ஆனால் இடையிடையே இதற்குள் புலிச்சாயங்களையும் பூசி வந்துள்ளனர்.

மாவோயிஸ்டுக்கள், லக்சர் ஈ தொய்பா, காஸ்மீர் விடுதலை அமைப்பு, அல்கைடா என பல்வேறு அமைப்புக்களின் பெயர்களை இந்தியா பாகிஸ்தான் ஆகியோர் பாவித்து வந்துள்ளனர். சில சமையங்களில் விடுதலைப்புலிகள் இவர்களுக்கு பயிற்சி கொடுத்ததாகவும் அல்லது இவர்களிடம் புலிகள் ஆயுதம் பெற்றதாகவும் அறிக்கைகளை விட்டுக்கொள்வர்.

ஆனால் விடுதலைப்புலிகளை மையமாக வைத்து இந்தியாக் பாகிஸ்தான் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரில் பேசியதன் நோக்கம் என்ன?

பயங்கரவாதத்தின் அடிக்கல் அல்லது தோற்றுவாய் தெற்கு ஆசியாவில் யார்? என்று கண்டுபிடித்து அதன் மூலம் ஒருவருக்கொருவர் சேறு பூச நினத்தார்களா?
அல்லது புதிதாக ஏதேனும் நிகழ்ச்சி நிரல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றதா? என்பதே ஆகும்.

இதற்கு பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன விடுதலைப்புலிகளை வளர்த்து தற்கொலை தாக்குதல் மூலம் பயங்கரவாதத்தை ஊக்குவித்தது இந்தியாதான் என்று பாகிஸ்தான் வெளியுறவு செயலர் இந்தியாவை சாடினார்.

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றது. அதற்கு புலிகள் காரணமாக இருக்கலாம் என நம்ப வைக்க சதி செய்யப்பட்டது ஆனால் பெரிதாக எடுபடவில்லை. இதே நேரம் பாகிஸ்தானும் இலங்கைக்கு விசாரணைகான ஒத்துழைப்பினை இன்றுவரை பெரிதாக வழங்கவில்லை. அது கிடப்பில் போடப்பட்டதொன்றாக இருக்கின்றது.

போர் ஓய்ந்த பின்னர் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கள் காலூன்ற முயல்கின்றன என்றும் அதற்கான சமிக்ஞைகளையும் வெளியிட்டு வருகின்றது.

லக்சர் ஏ தொய்பாஉறுப்பினர்கள் இலங்கையில் பயிற்சி பெற்றுள்ளனர் என உறுதிப்படுத்தி அறிக்கைகளும் வந்துள்ளன. இலங்கையில் லக்சர் ஈ தொய்பா அமைப்பினர் 200 பேர் வரையில் உள்ளதாகவும் அமெரிக்கா அண்மையில் கூறியுள்ளது.

இதுவே முள்ளிவாய்க்காலிற்கு முந்திய காஅலம் என்றால் புலிகள்தான் இவகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்கள் என்று இந்தியா அமெரிக்கா கூறி இருப்பார்கள். அப்படி சந்தேக்கப்பட அறிக்கைகளும் வெளியிடுள்ளனர்.

ஆனால் சிறிலங்கா அரசு இந்த அறிக்கைகளை முற்றாக புறம்தள்ளியுள்ளனர். இந்த புறம்தள்ளல் ஏன்? சிறிலங்கா உண்மையில் பெரும் யாக்கிரதையுடன் இந்த அறிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

உண்மையில் இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் உள்ளது. அது பாகிஸ்தான், இந்தியா, இலங்கை மற்றும் சில முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்று வந்துள்ளன.

பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இன் பயிற்சி பெற்ற உள்ளூர் முஸ்லிம் தீவிரவாதிகள் ஒருபுறமும், இந்திய ரோ அமைப்பினால் உருவாக்கபப்ட்ட முஸ்லிம் குழுக்களும் இன்னமும் கிழக்கில் நிலைகொண்டு இருக்கின்றன.

இவர்களுக்கு பயிற்சி வழங்கவென வந்தவர்கள் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களைச்சேர்ந்தவர்களிவர்கள் நீண்டகாலமாக இலங்கையில் நிலைகொண்டுள்ளனர் மட்டுமன்றி இலங்கை பிரஜையாகவும் மாறியுள்ளனர்.

ஆனால் சிங்கள அரசு இந்த நடவடிக்கைகளை விடுதலைப்புலிகளுக்கு எதிரான செயற்பாடாகவும் கூடவே தமிழ் - முஸ்லிம்களை பிரிக்கும் திட்டங்களில் ஓர் அங்கமாகவுமே அணுகினார்கள், வரவேற்றார்கள் ஒத்துழைப்பும் வழங்கினார்கள் எனலாம்.

ஆனால் இந்தியா , பாகிஸ்தான் நாடுகள் உண்மையில் தமக்கு எதிரான சக்திகளுடன் மோதும் ஓர் நீண்டகால இரகசிய திட்டமாக இஸ்லாமிய குழுக்களை பயிற்றுவித்து இயங்க விட்டிருக்கலாம் . விடுதலைப்புலிகளுக்கு எதிரான திட்டமாக பொதி செய்து கொடுத்தால் தான் சிறிலங்கா நன்றாக உமிழ்ந்து உண்ணும் என்று இந்த நாடுகளுக்கு புரியாத புதிர் அல்ல.

ஆனால் சிறிலங்காவும் இவர்களின் நோக்கங்களை புரிந்து கொண்டு தமிழர்க்கு எதிராக மிகவும் மோசமாக இந்த முஸ்லிம் குழுக்களை பாவித்து வெற்றியும் கண்டது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம் குழுக்களிற்கு வழங்கபப்ட்ட ஆயுதங்களை மீழப்பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கிட்டத்தட்ட 3600 சுடுகலன்கள் இந்த குழ்க்களிடம் உள்ளதாஅக சிறிலங்கா பொலிஸ் கூறியுள்ளது.

கடந்த மாதம் 30 ஆம் திகதியினை ஆயுதங்களை ஒப்படைக்கும் கடைசி நாளாக பொலிஸ் அறிவித்து இருந்தும் அது வெற்றியளிக்கவில்லை. ஆகவே முஸ்லிம் குழுக்களின் இந்த அலட்சியப்போக்கிற்கு யார் காரணம்? ஏதாவது வெளி நாடுகளின் ஆதரவு இருக்குமா என்பது இலங்கை அரசின் கேள்வியாக உள்ளது. ஆயுதம் வைத்திருந்தால் 20 வருட கடூளிய சிறை என்று வெருட்டி பார்த்தும் சரிவரவில்லை.

இங்கு இரண்டு விடயம் ஒன்றில் அரசாங்கம் முஸ்லிம்களிடம் ஆயுதங்களை களைய விடும்பவில்லை அல்லது முஸ்லிம் குழுக்களிற்கு வெளி நாடுகளின் ஆதரவு தளம் ஒன்று உள்ளது.

அமெரிக்கா இந்தியா ஆகியன இலங்கை இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஓர் தளமாக இருக்கின்றது என இப்போ அடிக்கடி அறிக்கை விடுவதற்கான காரணம்

ஒன்றில் புலிவியாபாரம் முடிந்துவிட்டது இனிமேல் யாரைவைத்து வியாபாரம் செய்யலாம் என்ற கேள்விக்கான பதிலாக அமையலாம். அல்லது இவர்களால் உருவாக்கி வளர்த்து வரப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத கட்டமைப்புக்களை இலங்கை அரசு அலட்சியம் செய்ய முனையும் போது அதற்கான எதிர்ப்பு நடவடிக்கையாகவும் இருக்கலாம்.

இந்தியா, அமெரிக்க மற்றும் மேற்கத்தைய நாடுகளின் தலையீடு தொடர்ந்து இருக்க வேண்டுமாயின் இத்தகைய தோர் ( இஸ்லாமிய தீவிரவாதம்) நடவடிக்கை அவசியம் என மேற்குலகம்மற்றும் இந்தியா திட்டமிட்டு செயற்படுத்துவதாகவும் அமையலாம்.

எது எவ்வாறு இருப்பினும் இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் இருக்கின்றது என்பதும் அதனை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இலாவகமாக வளர்ஹ்த்டு கையாண்டு வருகின்றமையும் தெட்ட தெளிவு.

இப்போ இந்த விடயங்களை வெளியில் கொண்டுவருவதற்கும் இலங்கை அரசு அதனை மறுப்பதற்கும் காரணம் இந்த நாடுகளிற்கு இடையே யார் இஸ்லாமிய தீவிரவாதத்தை கையாழ்வது யார் பயன்பெறுவது என்ற போட்டியும் ஓர் காரணமாக அமையலாம்.

போட்டியின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என கூறமுடியாது. இந்த விடயத்தில் இலங்கை தனது விசுவாசத்தை யாருக்காவது காட்டியே தீரவேண்டும்.

உண்மையில் கூறப்போனால் விடுதலைப்புலிகள் வெளி நாடுகளின் இந்த பயங்கரவாத சிக்கல்களுக்கும் சந்தைகளுக்கும் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை.

நியாயமான போராட்டத்திற்காக உரிமைக்காக வெளினாடுகளின் இரகசிய நடவடிக்கைகளுக்குள் சிக்குப்பட விரும்பவில்லை. விடுதலைப்புலிகள் தமது விடுதலைப்போராட்டத்தை நேர்மையாக நாடுகளிடம் கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் சில நாடுகள் தம் தேவைக்காக விடுதலைப்புலிகளை பயன்படுத்த முனைந்தனர்.

இது ஆரம்பத்தில் மட்டுமல்ல 2002 இன் பின்னர் சமாதான காலப்பகுதியிலும் நடந்தது. பாகிஸ்தான் உளவு அமைப்பு, இந்திய உளவு அமைப்பு, சீன உளவு அமைப்பு மற்றும் மேற்கத்தைய நாடுகளின் வலைப்பின்னல்கள் விடுதலைப்புலிகளுக்கு உதவுவதன் மூலம் பேரம் பேச வந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் ஒன்றைமட்டும் தெளிவாக சொன்னார்கள். மக்களுக்கு உதவ வேண்டும் எனின் அதனை நாம் வரவேற்கின்றோம். அதே வேளை உத்தியோகபற்றற்ற நடவடிக்கைகளுக்குள் இப்போ நாம் சிக்குப்பட விரும்பவில்லை என வன்னியில் வைத்துகூறினர்.

இது பல நாடுகளுக்கு தெரியும் குறிப்பாக நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

இதனை புலிகளுக்கு இராஜதந்திரம் தெரியாது என்று பலர் கூறலாம். ஆனால் புலிகள் நேர்மையாக அனைத்துலக பயங்கரவாத வியாபார சிக்கலிற்குள் நுழையாமல் தம்மை பார்த்துக்கொண்டதே அவர்கள் மீது அனைவரும் தாக்குவதற்கு காரணமாக இருந்தது எனலாம்.

Comments