புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன? பாகம்– 06

தன்னை நல்லவனாக காட்டிக் கொண்டு அவர்களுக் ஊடாக திட்டமிட்ட பல நடவடிக்கைகளைச் செய்யத் தொடங்கினான். அதன் விளைவுகள்தான் மறைவாக இருந்த பலர் கா ட்டிக் கொடுக்கப் பட்டனர்.

காட்டிக் கொடுத்து பிரிக்கப்பட்டவர்கள் உடன் பெயர் விபரம் எடுக்கப் பட்டார்கள். பின் இரவு 10 மணிக்குப் பிறகு தனியாக இராணுவப் புலனாய்வாளர்களால் அவர்கள் எம்மைச் சித்திரவதை செய்யவென போடப்பட்ட கொட்டிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தரப்பாழ்களை முளமையாக இலுத்து மூடிய பின் நான்கு மூலையிலும் நான்கு பேர் எஸ்லோன் பைப்புகளாலும், தரப்பாள் போடவந்த அரை இஞ்சி கல்வனைஸ் பைப்பாலும், கால்களாலும், கைகளாலும் எதிர்பாரத நேரத்தில், எதிர் பாராத இடத்தில் எந்தவித விசாரனையோ, கேள்விகளோ இன்றி தாக்கப்பட்டார்கள்.

நீங்கள் ஒளிந்திருக்கவா பார்க்கிறீர்கள். இனி ஒளிக்கேலாது எல்லாம் முடிந்து போய்விட்டது இனி எதுவும் தேவைப்படாது ஆனால் நீங்கள் தாட்டு வைத்ததுதான் இப்ப பிரச்சனை எங்கடா தாட்டு வைத்திருக்கிறீர்கள் அந்த வெடிபொருட்களை எல்லாம் தந்திடுங்கோ நீங்கள்தான் வைத்திருப்பீர்கள் என கேட்டுக் கேட்டு மீண்டும் மீண்டும் தாக்கப் பட்டார்கள். இதனால் அவர்களின் உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இரத்தம் பெருக் கேடுத்து ஓடியது. அவ்வாறான அடிகளின் தாக்கத்தால் இன்றும் நோய்வாய்ப் பட்டு துன்பப்படுபவர்கள் பலர்.

தாக்கப் பட்டு உடல்நிலை ஏலாது வந்தவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்குப் பின் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் ஆனால் அங்கு உண்மை சொல்லக்கூடாது என மிரட்டப் பட்டார்கள். விளையாடும் போது அல்லது வேலை செய்யும் போது தவறுதலாக ஏற்பட்ட காயம் என சொல்ல நிற்பந்திக்கப்பட்டு அவ்வாறே சொன்னார்கள். அப்போழுது அவனுக்குச் சார்பான கைக் கூலிகள் அருகில் நிற்பார்கள்.

இவ்வாறு இரவில் கூட்டிச் சென்று தாக்குவதன் நோக்கம். இது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அதே போல் இதையாரிடமும் சொல்லக் கூடது எனவும் மிரட்டப் பட்டோம். அப்படிச் சொன்னால் எதாவது சொல்லி பூசாவிற்கு அனுப்புவோம் என மிரட்டப் பட்டோம். ஆகவே நாம் இதையாரிடம் சொல்லவும் இல்லை, இது தொடர்பாக கதைக்கவும் இல்லை. காரணம் அவனிடம் அடிவேண்டிய தன்மானப் பிரச்சனை ஒன்று இரண்டு இங்கிருந்து வெளியேறுவதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது.

இதனால் தான் அவன் அங்கு போடும் அடக்குமுறைகளுக்கு அடிபணிந்தோம். எந்தப் பிரச்சனைகளையும் நாம் நியாயம் கேட்க நினைப்பதில்லை ஏனெனில் முப்பது வருடங்களா அடித்துக் கேட்டு எமக்கான எந்த வோரு உரிமையையும் தராதவன் .அவனின் கம்கி வேலிக்குள் இருக்கும் நாங்கள் கேட்கும் நியாயங்களுக்கா பதில் தரப்போகிறான். அல்லது எமக்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை நாம் தட்டிக் கேட்டால் எமக்கு நியாயம் கிடைக்குமா?அந்தளவுக்கு சட்டத்டதை மதிக்கும் நேர்மையான அரசாங்கமா?அல்லது நாம் சொல்வதை உலகமாவது கேட்டு அரசாங்கத்தை தட்டிக் கேட்கின்றதா? இன்று இவ்வளவு பெரிய மக்கள் அவலம் ஏன் உலகுக்கு தெரியாதா என்ன? எனவேதான் இலங்கையில் இருந்து கூட எம்மால் கதைக்க முடியாதுள்ளது. இதனால் எமது சொந்த உறவுகளிடமே எமக்குநடக்கும் துன்புறுத்தல்களை இன்று வரை சொல்லாது இருக்கிறோம்.

எந்தவித அன்றாட வாழ்கைக்கு தேவையான வசதிகளும் இன்றி உடல் துன்புறுத்தல்களுடன் நாட்கள் நகர்ந்து கொண்டுருந்தது. இதற்கிடையில் அவன் என்ன செய்தாலும் பிரச்சனை இல்லை என்று எமது குடும்ப உறவுகளைத் தெடர்பு கொள்ளும் முயற்சியை விடவில்லை. அதற்கும் எமக்கோர் வழிகிடைத்தது.

எமக்கான சிறு சிறு வருத்தங்களுக்கான மருந்துகளைத் தருவதுக்கென ஓமந்தைப் பாடசாலைக்கருகில் மக்களுக்கென மருத்துவ சேவையில் ஈடுபட்ட வைத்திய அம்மா கிழமையில் இரண்டு நாட்கள் வந்து போவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தா அவர் தழிழ் பெண் என்ற படியால் அவவப் பயன்படுத்த முனைந்தோம். ஆனால் அவவின் கடுஞ்சொல் வார்த்தைளும், தனக்கு இதால் பிரச்சனை வரும் என்பதாலும் அவர் மறுத்து விடவே அதுசரிவராமல் போனது. ஆனால் மருத்துவருக்கு உதவியாக வந்த ஊழியரை நாடினோம். அதனால் வெற்றியும் கிட்டியது. இதில் என்ன வேடிக்கை என்றால் நாம் ஒழித்து வேலை செய்ய வேண்டியவர்களில் மருத்துவ அம்மாவும் சேர்க்கப்பட்டு விட்டா என்பதுதான்.

ஆனாலும் எமக்குப் பயம் ஏனெனில் உள்ளே யாரையும் விடாத போது இவர்கள் மட்டும் வந்து போவது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் எல்லோருக்கும் வீண் பிரச்சனை வரும் என்பதால் நாம் இங்குநிற்கும் செய்தி மட்டும் உறவுகளுக்கு சென்றால் சரி என்பதோடு நிறுத்திக் கொண்டோம். அவ்வாறு இருந்தும் இதைக் கண்டுபிடித்த இராணுவக் கைக்கூலிகளால் பிரச்சனை ஏற்பட்டு ஊழியர்கள் மாற்றப் பட்டார்கள்.

ஏற்கனவே மருத்துவ அம்மா கடும் சொல்களால் திட்டுபவ இப்போ தன்பார்வைக்குள் மருந்து கொடுக்கும் இடம் எல்லாவற்றையும் கொண்டுவந்து சில நடைமுறைகளைத் திணித்தா. என்றாலும் மாற்றப்பட்ட ஊழியர்களுக்கு எமது உறவுகள் படும் கஸ்ரங்களைச் சொல்லி மாற்றினோம். மருந்துச் சிட்டையிலேயே தகவல் பரிமாறப்பட்டது.

மூன்று கிழமைகளின் பின்னர் எமக்கான இராணுவப் புலனாய்வாளர்களின் பதிவுகள் ஆரம்ப மானது. அதே நேரம் பாடசாலைப் பதிவில் இருந்த ஒலிபெருக்கியும் எமக்காக கட்டப்பட்டது. எமக்கான அறிவித்தல்கள் ஆரம்பமானது.

முதலாவது அறிவிப்பே நாங்கள் உங்கள் பதிவுகளை விரைவாக முடித்து உங்களை உங்கள் வீடுகளுக்கு அனுப்ப விருக்கிறோம். அதற்கு உங்கள் ஒத்துளைப்பு தேவை. ஆகவே நீங்கள் தாட்டு வைத்திருக்கும் வெடிபொருட்களை ஒப்படையுங்கள். அப்படி ஒப்படைப்பவர்களுக்கு முன்னுரிமை வளங்கப்பட்டு மிக விரைவாக வீட்டை விடுவோம். அத்துடன் யாராவது தாட்டதை கண்டவர்கள் இருந்தால் அவர்கள் சொன்னாலும் உங்களுக்கும் சலுகைகள் உண்டு என ஒலிபெருக்கி அதிர்ந்த வண்ணம் இருந்தது. இதைக் கேட்ட அற்ப ஆசை படைத்த சிலர் அவன் விரித்த வலையில்…

தொடரும்….

சோபி, ஆசிரியர் குழு,
www.eelampress.com

Comments