மகிந்தா அரசுக்கு எதிராக பிப் 9 - ம் திகதி கொழும்பில் மாபெரும் பேரணி...!

இலங்கை அரசின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்தும் , சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் எதிர்வரும் 9 - ம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தவுள்ளதாக ஐ.தே.க. அறிவித்து உள்ளது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அக்கட்சி அழைப்பு விடுத்தது. கொழும்புவில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஐ.தே.க. கட்சியின் எம்.பி. மங்கள சமரவீர இதனை தெரிவித்தார். வரும் 9 - ம் தேதி புதன் கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு லிப்ரன் சுற்று வட்டத்தில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் சரத் பொன்சேகாவை பலாத்காரமாக கடத்திய நாளாம். ஊடக அடக்குமுறை, சர்வாதிகார ஆட்சி, வடக்கு கிழக்கில் மக்கள் கடத்தப்படுதல், காணமால் போதல், கொலைகள் மற்றும் கொழும்பில் வீடுகள் நிர்மூலமாக்கப்படுத்தல் உட்பட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சரத் பொன்சேகாவின் விடுதலை போன்ற காரணங்களுக்காக இந்த பேரணி நடைபெறும் என்று மங்கள சமரவீர கூறியுள்ளார்.
user posted image
உலகம் முழுதும் மக்கள் தங்களது ஜனநாயக சுதந்திர உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஐரோப்பாவில் தொடங்கப் போகின்றன இந்த உரிமை மீட்பு போராட்டங்கள் என்று நினைத்திருந்த வேளையில், கிரீஸ் நாட்டில் துவங்கியது இந்த போராட்டம். எதை சொல்லி மூடி மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிரீஸ் என்று தொடங்கி போர்ச்சுக்கல் என்று நீண்டு பிரான்ஸ் தொழிலாளர்கள் போராட்டம், பிரிட்டன் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமாக பயணித்து ஸ்பெயின் என்று போவதை என்னென்னமோ செய்து தள்ளி போட்டிருக்கிறார்கள். ஐரோப்பிய கார்பரேட்களின் அரசுகள். எவ்வளவு நாள்தான் தள்ளிப் போட முடியும்..ஒரு பத்து ஆண்டுகளாக பயங்கரவாதம் தீவிரவாதம் என்று தள்ளிப் போட்டதைப் போல இப்பொழுது தள்ளிப் போட முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது கார்பரேட்களின் அரசுகள். கொஞ்சம் தான் அசந்தார்கள் ஐரோப்பிய மக்கள். இந்த பயங்கரவாத பூச்சாண்டியை காட்டி காட்டியே இருக்கும் உரிமைகள் அனைத்தும் பறித்துக் கொண்டார்கள். பறித்து கொண்டு வருகிறது கார்ப்பரேட்களின் அரசுகள்.

நாம் எதிர்பார்ப்பில் இருக்கும் நாடுகளின் திசையில் வீசிய உரிமை மீட்பு புயல் துனிசியா நாட்டில் வீசிக் கொண்டிருக்கிறது. நேற்று வரை அமைதியாக இருந்த எகிப்து இன்று பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நெருப்பு சவூதி அரபியாவை நோக்கி வளர வேண்டும். ஒரு நீண்ட காலமாக பெரும் பெருச்சாளிக் கூட்டம் சவூதி அரபியா மக்களை சூறையாடி வருகிறது. கேட்டால் மன்னர் குடும்பம் என்பது. அனைவரையும் கண்காணிக்க நவீன வசதி கொண்ட கண்காணிப்பு கேமராக்களை நாடு முழுதும், தெருக்கள் முழுதும் நிறுவி வீரத்திற்கு பேர் போன அராபிய மக்களை அவர்களின் கழுதை நெரித்துக் கொண்டு உள்ளது இந்த ஷேக் பெருச்சாளிகள். எந்த யுகத்தில் இருக்கிறோம்...? மன்னர் ஆட்சி என்று கூறி முழு சர்வாதிகார நாடாக மாற்றி உள்ளார்கள். இந்த பழம் பெரும் பெருச்சாளிகள். அராபிய பெருச்சாளிகள் இருக்கும் அணைத்து வித விஷ ஜந்துக்களை விட கொடுமையானவர்கள்.

எனவே, வருங்காலங்களில் அரேபியாவில் உரிமை மீட்பு போராட்டங்கள் நடைபெறும். பிறகு மெல்ல ஆசியாவை நோக்கி நகரும். ஐரோப்பியாவை நோக்கி நகரும். இறுதியில் அமெரிக்காவை நோக்கி நகரத்தான் போகிறது. நிலைமை இவ்வாறு உலகம் எங்கும் இருக்க, இந்த நிலைமைகளை பற்றி கொஞ்சமும் அறிந்து கொள்ளாத மகிந்தா ராஜபக்சே கும்பல், பேயாட்டம் போடுகிறது. முள்வேலிகளும் இருக்கும். அதற்குள் தமிழ் மக்களை போட்டு அடைத்தும் வைப்பார்கள். பாதுகாப்பு சட்டம் என்ற கொடுமையும் இருக்கும். போலி ஊடகங்கள் இருக்கும். ஓட்டுப் போடும் உரிமையும் இருக்கும். போதாக்குறைக்கு ராணுவம் வெளிப்படையாக செய்ய முடியாததை, செய்வதற்கு அரசு சார்பில் ஆயுதக் குழுக்களும் இருக்கும். வாய் கிழிய பேசுகிறார்கள். இது தான் ஜனநாயகம் என்று. இந்த உரிமை மீட்பு போராட்டத்தை இலங்கை மக்கள் நடத்தப் போகிறார்கள் என்று நாம் முன்பே சொன்னோம்.

எனவே, இவ்வாறு மக்கள் போராட்டம் நடந்து விடக் கூடாது என்பதற்காக, மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்க, இலங்கை மக்களின் போராட்டங்களை திசை திருப்ப இந்த ஐ.தே.க. கட்சியினர் முயன்று வருகின்றனரோ..? என்ற பலமான ஐயம் எழுகிறது. அணைத்து கட்சிகளையும் எதிர்த்த போராட்டமாக மாறி விடக்கூடாது என்று ரணில் கட்சியினர் முந்திக் கொள்கின்றனரா..? என்றாலும் மூச்சு விட முடியாமல் இலங்கை மக்கள் திணறி வருகின்றனர். என்ன செய்து திசை திருப்பினாலும் விரைவில் இலங்கையின் அணைத்து கட்சிகளையும் தூக்கி எறியும் போராட்டத்தை மக்கள் நடத்தத்தான் போகிறார்கள். மகிந்தா கும்பலும், ரணிலும் புத்த பிக்குகளும் நினைப்பதெல்லாம் நடைபெறுவதற்கு இவர்கள் என்ன கடவுள்களா...? பாசிஸ்ட்களும் இனவெறியும் கொண்டவர்கள் நீண்ட நாள் ஆட்சி செய்ய முடியாது என்பதும், இவர்களின் எண்ணப்படி மக்களை ஆட்டி வைக்க முடியாது என்பதுவே இதுகாறும் வரலாறாகவே உள்ளன.

சங்கிலிக்கருப்பு

Comments