ஈழம் ஈ நியூஸ் மீது விஷமிகள் சைபர் தாக்குதல் !

சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களின் தாக்குதலில் ஈழம் ஈ நியூஸ் இணையத்தளம் நேற்று (06) செயலிழந்துள்ளதாக ஈழம் ஈ நியூஸ் நிர்வாகத்தினர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) காலை பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஈழம் ஈ நியூஸ் தளக்கட்டுப்பாட்டாளருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் நபர்கள் கொலை அச்சுறுத்தலை விடுத்திருந்த நிலையில் ஈழம் ஈ நியூஸ் இணையத்தளமும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. அற்ப சலுகைகளுக்காக சிறீலங்கா அரசின் கைக்கூலிகளாக மாறியுள்ள சிலரின் நடவடிக்கை காரணமாக எமது தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் இணையத்தளத்தின் கட்டுப்பாட்டு நிறுவனமான 1 & 1 என்ற நிறுவனத்திடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானியா காவல்துறையினரிடம் முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறு 1 & 1 நிறுவனம் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து பிரித்தானியா காவல்துறையினரிடமும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இக்கட்டான காலத்தின் எமக்கு உதவிகளை வழங்கியவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், தேசியத்தின் தகவல்களை தாங்கி ஈழம் ஈ நியூஸ் இணையத்தளம் மீண்டும் மக்கள் முன் புதுப்பொலிவுடன் வரும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

நேற்றைய தினம் அதிர்வு இணையத்தின் மீதும் சைபர் தாக்குதலை நடாத்தா சிலர் முற்பட்டுள்ளனர். எனினும் கடந்த காலங்களில் நாம் பெற்ற அனுபவத்தால் அது தவிர்க்கப்பட்டுள்ளது. அத்தோடு அமெரிக்காவில் இருந்து இத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை அதிர்வு இணையம் பெற்றுள்ளது. இத் தாக்குதலை நடத்திய நபர்களின் IP முகவரி 74.125.114.81 , 74.125.114.82 என்பதாகும் என்பதனையும் நாம் இங்கே வெளியிடுகிறோம்.

Comments