விடுதலைப்புலிகளின் தடைக்கு எதிராக வழக்கு சுவிஸ் ஈழத்தமிழர் அவை

ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப்புலிகள் மீதான தடைக்கெதிரான சட்ட நகர்வு சட்டவல்லுனர் விக்ரர் கொபே ஊடாக முன்னெடுப்பு: சுவிஸ் ஈழத்தமிழர் அவை


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடைக்கு எதிராகா லக்சம்பேர்க்கில் அமைந்திருக்கும் ஐரோப்பிய நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்க்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருப்பதாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரான விக்ரர் கொப் தமிழ்நெற் செய்திதளத்திற்கு செவ்வாயன்று வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விக்ரர் கொபேயை இந்த வழக்கிற்கான சட்ட ஆய்வில் ஈடுபடுத்தியிருக்கும் சுவிஸ் ஈழத் தமிழர் அவையின் பேச்சாளர்களில் ஒருவரான அருள்நிதிலா தெய்வேந்திரன் இந்த சட்ட நகர்வு பற்றி தெரிவிக்கையில், “ஈழத்தமிழர்களின் தனித்துவமான தேசியத்தை அங்கீகரிக்கக் கோருவோரையும் ஈழத்தமிழர்களின் இறைமை பற்றி குரல் எழுப்புவோரையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சட்டத்தை மீறும் குற்றவாளிகள் போல அணுகப்படும் நிலைமை தொடர்வதனால், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை சட்ட ரீதியாக முகங்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

பிரபல சட்ட வல்லுநர்களை மாத்திரம் வேலைக்கு அமர்த்தி சவால்களை எதிர்கொள்ளும் சட்ட அணுகு முறையை விடவும் தமிழர்களான நாமே குறித்த சட்டச் சவால்களை ஆராய்ந்து அணுகும் ஒரு முறையை வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் படி, சட்ட விவகாரங்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி, அவற்றின் நுட்பங்களை அலசி ஆராய்ந்து, ஸ்ரீலங்கா அரசின் இன அழிப்புக்கெதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஆற்றல் கொண்ட இரண்டாம் தலைமுறையின் ஒரு சர்வதேச முன்னெடுப்பு கருக்கொண்டுள்ளாது என்றார்.

தம்மிடம் சர்வதேசரீதியான தெளிவான சட்ட நடவடிக்கைகளுக்கான தெரு வரைபு (ரோட் மப்) உருவாக்கம் பெற்றுள்ளதாகவும் கருத்து வெளியிட்டார். “சவால்களை முகம் கொடுக்கும்போது தான் எமது திறமையும் கூர்ப்படைகிறது” என்று தெரிவித்த அவர், புலம்பெயர் சூழலில் தமிழீழ வாக்கெடுப்பிற்குப் பின்னர் அனைவரும் ஒன்றாய் நின்று செயற்படுவதற்கு இரண்டாம் தலைமுறையின் அறிவு-ரீதியான முன்னெடுப்பாக இந்த முன்னெடுப்பு அமைவதாகவும் கூறினார்.

போர்க்குற்றம், இன-அழிப்பு, சமாதானத்துக்கெதிரான குற்றங்கள், ஈழத் தமிழரின் இறைமையை நிறுவுவதற்கான நகர்வுகள், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிரான தடை என்ற போர்வையில் தொடர்ந்தும் மறுக்கப்படும் ஜனநாயக உரிமைகளை எதிர்கொண்டேயாகவேண்டியதன் அவசியம் போன்ற அனைத்து சட்ட விடயங்களும் எழுந்தமானமான முறையில் அன்றி தெளிவாக வகுக்கப் படுகிண்ற வேலைத்திட்டமாக ஒருங்கிணைக்கப்பட்டு பரிணமித்துள்ளதாக சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோர் மேலும் தெரிவித்தனர்.

ஐ. சி. சி எனப்படும் சர்வதேச குற்றவிசாரனை நீதிமன்றுக்கு இவ்வாரம் முன்வைக்கப்படும் வழக்குக்கான ஆவணத்தயாரிப்பு அமெரிக்க, சுவிஸ் கூட்டு முயற்சியால் முற்றுப் பெற்றிருப்பதாகவும் இந்த நகர்வுகளின் முன்னெடுக்கும் சட்ட விவகாரக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

போர்க்குற்றம், இன-அழிப்பு, சமாதானத்துக்கெதிரான குற்றங்கள், ஈழத் தமிழரின் இறைமையை நிறுவுவதற்கான நகர்வுகள், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிரான தடை என்ற போர்வையில் தொடர்ந்தும் மறுக்கப்படும் ஜனநாயக உரிமைகளை எதிர்கொண்டேயாகவேண்டியதன் அவசியம் போன்ற அனைத்து சட்ட விடயங்களும் எழுந்தமானமான முறையில் அன்றி தெளிவாக வகுக்கப் படுகிண்ற வேலைத்திட்டமாக ஒருங்கிணைக்கப்பட்டு பரிணமித்துள்ளதாக சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோர் மேலும் தெரிவித்தனர்.

சட்டத்துறை சார்ந்தோ, அல்லது நிதி தேவை சார்ந்தோ, ஐரோப்பிய ஒன்றிய தடை குறித்த முன்னெடுப்புகளுக்கான ஒழுங்குகளை பகிரங்கமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் ஐரோப்பா தழுவிய ரீதியில் தாமே நேரில் தேவையேற்படும்போது மக்களுக்குத் தெரியத்தருவோம் என்றும் அருள்நிதிலா மேலும் தெரிவித்தார்.

Comments