ஈழ ஏதிலிகள் வதை முகாம்களை மூடக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்ட​ம்.

செங்கல்பட்டு, பூந்தமல்லி ஈழ ஏதிலிகள் முகாம்களை மூடக்கோரி, தமிழக மக்கள் உரிமை கழகம்சார்பில்,சென்னை மருத்துவமனை எதிரில் உள்ள நினைவரங்கம் அருகே இன்று ஆர்ப்பாட்டம், நடைபெற்றது.

இதில்,நெடுமாறன்,மல்லை சத்யா, உட்பட பல்வேறு இயக்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பான முறையில், தமிழக மக்கள் உரிமை கழகம் ஒருங் கிணைப்பு செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.


இவர் ஈழத் தமிழர் சார்ந்த வழக்குகளை, தமிழ் இனபற்றாளர் என்ற வகையில் இலவசமாக வாதாடி ஏராளமான ஈழத் தமிழர்களுக்கு மறு வாழ்வு பெற்று தந்தவர். ஏதிலிகள் முகாமில் அடைபட்டு கிடந்த ஈழத் தமிழர்களை விடுவிக்க தொடர்ந்து போராடி வருபவர்.விடுதலை புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று சென்னை முதன்மை வழக்காடு மன்றத்தில் வழக்கு தொடுத்தவர். இவர் உரையாற்றும் போழ்து ராசீவ் காந்தி கொலை வழக்கின் போது,செங்கல்பட்டு சிறப்பு சிறையாக செயல்பட்டு வந்த இதை,1993ல் சிறப்பு முகாமாக பெயர் மாற்றினர். பெயர் மாற்றப்பட்டதே தவிர மற்றபடி அதே சிறை தான்.அதுபோலவே பூந்தமல்லி சிறையும்.

0" height="390">பூந்தமல்லி சிறைபோல்,நீங்கள் வேறு எங்கும் பார்க்க முடியாது.அண்ணாந்து பார்த்தாலும் சிறை கம்பிதான் இருக்கும். வானத்தை பார்க்க முடியாது.உறுதியான கம்பிகளை கொண்ட சிறிய அறையில் ஆடு மாடுகளை போல, ஈழத் தமிழர்களை இங்கு அடைத்து வைத்திருக்கிறார்கள்.இவர்கள் வெறும் சந்தேகத்தின் பெயரில் கைது
செய்யப்பட்டு ஆண்டுகணக்கில் இருப்பவர்கள்.

கடந்த இரு மாதங்களுக்கு முன் 13 நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களை உரிய கடவு சீட்டு இல்லை என்பதற்காக காவல்துறை கைதுசெய்து இங்கே அடைத்திருந்தது. அவர்களுக்கு ஈழத் தமிழர்களுக்கு கொடுக்கும் அதே உணவை கொடுக்கும் போழ்து அவர்கள் அதை காவல் துறை அதிகாரிகள் முகத்தில் வீசியெறிந்து,தங்களுக்கு கோழி கறி, ஆட்டு கறி பிரியாணி வேண்டும் என்று கேட்டனர்.

அதை தமிழக காவல் துறை உடனே வாங்கி கொடுத்து உபசரித்தனர்.அவர்கள் விடுபட்டு அவர்கள் நாடு செல்லும் வரை இது தொடர்ந்தது.வெளி நாட்டைசேர்ந்தவர்களுக்கு கொடுக்கும் உணவில் ஒரு சிறிய அளவு கூட கருணாநிதி அரசு ஈழத் தமிழர்களுக்கு கொடுப்பதில்லை.இந்த நிலையில் தான் இங்குள்ள ஏதிலிகள் முகாம் செயல் பட்டு
கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

ம.தி.மு.க துணை பொது செயலலாளர் மல்லை சத்யா பேசும் போழ்து,விடுதலை புலிகளின் மீதான தடையை நீக்க கோரி புகழ்ந்தி தொடர்ந்த வழக்கை போல,ஐயா வை.கோ அவர்கள் வழக்கு தொடர வரும் போழ்து,பெருந்தனமையுடன் புகழேந்தி அவர்கள்,வை.கோ அவர்களுக்கு வழிவிட்டு,வழக்கை சிறப்பான முறையில் நடத்த
வழிக்காட்டியாக இருந்து செயல்பட்டார்.

அதன் விளைவாக இன்று சென்னை வழக்காடு மன்றம் அந்த வழக்கை ஏற்று கொண்டு ள்ளது என்பது நமக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி ஆகும். இலங்கையில் முள்வேலி முகாம் என்ற பெயரில் இயங்கும் வதை முகாம் போலவே இங்கு சிறப்பு முகாம் என்ற பெயரில் இங்குள்ள முகாம்கள் இயங்குகின்றன.மற்றபடி இரண்டும் ஒன்றுதான் என்று கூறினார்.

ஐயா நெடுமாறன் உரையாற்றும் போழ்து, ஈழத் தமிழர்கள் இலங்கையிலும் முள்வேலி முகாமில் அடைத்து துன்புறுத்துகிறார்கள் என்று இங்கு வந்தால்,இங்கேயும் அதை விட கொடுமையான முகாமில் அடைத்தால் அவர்கள் எங்குதான் போவார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

உலகம் முழுவது பரவி வாழும் ஈழத் தமிழர்கள் அங்கே எல்லாம் விடுதலையுடன் இருக்க முடிகிறது. ஆனால் சொந்த தமிழ்நாட்டில் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள். இதை உடைத்தெறிய இது போன்ற போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறவேண்டும் என்று கூறினார்.இறுதியாக முகாம்களை மூடக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Comments