Skip to main content

முபாராக் மிக நல்லவராம்..! ஒபாமா, கார்டன் ப்ரௌன் நற்சான்றிதழ்..!

இவர்களின் பங்காளி இஸ்ரேல் ஒரு படி மேலே போய் விட்டது... எகிப்தியர்களுக்கு ஜனநாயகம் தேவை இல்லை என்று...!

news


பற்றி எறிந்து கொண்டிருக்கும் எகிப்து. ஹோசினி முபாராக் என்ற மிக நல்ல மனிதரை எகிப்து மக்கள் தேவை இல்லாமால் பதவி நீக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள் என்று கூறுகிறார்கள். கிட்டத்தட்ட அணைத்து மீடியாக்களும்..! அணைத்து அரசுகளும். ! இந்திய அரசு கடப்பாறையை முழுங்கியவன் போல இருக்கிறது. இலங்கை அரசாவது பரவாயில்லை என்று சொல்லலாம். மகிந்தா கும்பல் இந்த எகிப்து சம்மந்தமாக உள்ள செய்திகள் அனைத்தையும் நிறுத்தி விடுங்கள் இந்த சிங்கள மக்களுக்கு என்று சொல்லிவிட்டார். ஒருவேளை சிங்கள மக்கள் பெரிய வாத்துக் கூட்டம் என்று கருதி இருப்பார். அவருக்கு தெரியாதா..? என்ன. என்றாலும் ரணில் மிரட்டிக் கொண்டு வருகிறார். எப்படி என்றால் எகிப்தைப் போல இலங்கையிலும் மக்கள் போராட்டம் வரும் என்று காட்டிக் கொடுக்கும் வேலையை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்.

இங்கிலாந்து பிரதமரும் மிக முக்கிய கார்ப்பரேட் ஆன கார்டன் ப்ரௌன் இன்று கூறியுள்ள செய்தியில், இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய உலகம் மேற்குலக ஐரோப்பியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அது என்ன..? மேற்குலக ஐரோப்பியர்களின் உணர்வுக்களுக்கு மதிப்பளிப்பது..? அதாவது அமெரிக்கா ஐரோப்பிய அரசுகளுக்கு சொரிந்து விட வேண்டும் என்று சொல்கிறாரா..? எகிப்திய மக்களை...! ஒபாமா ஒரு படி மேலே போய், கொசினி முபாராக் பதவி விலக தேவை இல்லை என்றும், மேலும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியதோடு மட்டும் நிற்காமல், முபராக் அவரது பதவிக் காலம் முழுதும் நீடிக்கலாம் என்று கூறியுள்ளது. என்னவாக இருக்கும்..? இப்படி சொல்வதற்கு. சுமார் ஒரு மூன்று லட்சம் கோடி டாலர் இருக்குமாம் இந்த எகிப்திய மாபெரும் கொள்ளைக்காரனுக்கு.

இல்லை இல்லை எகிப்து நாட்டின் அணைத்து செல்வங்களையும் இந்த கொசினி முபாராக் கொள்ளை அடித்து விட்டார் என்றும் சொல்கிறார்கள். அதாவது சுமார் ஒரு 100 லட்சம் கோடியாவது இருக்கும் என்று சொல்கிறார்கள். சமீபகாலமாக நமக்கு கணக்கு சரியாக வர மறுக்கிறது. ஆமாம், முன்பெல்லாம் சொல்வார்கள் இப்படி. ஐயா அந்த காங்கிரஸ் பெருச்சாளி சுமார் ஒரு 50 கோடி அடித்து விட்டதாமே என்று. பிறகு இப்படியும் சொன்னார்கள். இந்த தி.மு.க. வின் மு.க., திராவிடன் தமிழன் என்று பேசி சுமார் ஒரு 90 லட்சம் ரூபாயை பொதுப் பணித்துறையில் இருக்கும் பொழுது அடித்து விட்டாராமே..என்று. இப்படி கேள்விப்பட்ட தமிழக மக்கள், இன்று சுமார் ஒரு இரண்டு லட்சம் கோடிகளை சுருட்டி விட்டார்களாமே இந்த கருணாநிதி கும்பல் என்று சொல்லும் போது என்ன செய்ய முடியும்..? சொல்கிறார்கள். சொல்வது வேறு விசயம் என்றாலும்..நெட் ரிசல்ட் என்ன வென்றால் வந்தவன் போனவன் எல்லாம் கிடைத்த மட்டும் அல்ல, முழு தொகையையும் அடித்துக் கொண்டு ஓடி விட வேண்டும் வெளிநாட்டிற்கு என்று கிளம்பி விட்டார்கள். நிலைமை இன்று இவ்வாறாக உள்ளது.

இந்தியாவின் நிலைமையே இப்படி என்றால், மகிந்தாவை ஏன் என்று கேட்க எந்த நாதியும் கிடையாது. அது போலவே இந்த முபாராக், மற்றும் எமன் அதிபர் சளாகி, அல்பைடான், சுவூதி கொள்ளைக் கூட்ட ஷேக் அப்துல்லா, பக்ரைன் என்று இருக்கும் மாபெரும் கொள்ளைக்கூட்ட, நாட்டின் அணைத்து வளங்களையும் கொள்ளையடித்து அமெரிக்காவில் மற்றும் இங்கிலாந்தில் முதலீடு செய்துள்ளனர் அரபியர்களின் அரசுகளின் மன்னர்கள். எங்கே இவர்களின் முதலீடுகளை உடனே கேட்டு விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறார்களோ அமெரிக்கா இங்கிலாந்து அதிபர்கள். இருக்கலாம். யார் கண்டது..?

இந்த லட்சணத்தில் உள்ள கும்பல்களைப் பற்றி மிகவும் கவலை கொள்ளும் அமெரிக்கா மீடியாக்கள் அலறுகின்றன. தேவை இல்லாமல் எகிப்து பிரச்சனையை பூதாகரமாக வெளியிடுகிறது அல்ஜசீரா மற்றும் அராபிய ஊடகங்கள் என்று. சமீபத்திய எகிப்திய போராட்டங்களை அல்ஜசீரா வழியே அமெரிக்கா மக்கள் கண்டு கழித்துள்ளனர். முன்பு இந்த அல்ஜசீரா தொலைக்காட்சியை, இணைய தளத்தை அமெரிக்கா உளவு நிறுவனங்கள் அல் கொய்தாவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது என்று நல்ல பிரச்சாரம் செய்து வைத்து உள்ளனர். அந்தப் பிரச்சாரம் இருந்தாலும், இந்த எகிப்து மக்களின் தொடர் போராட்டங்களை பெருமளவில் அமெரிக்கர்கள் பார்த்தவுடன் கதி கலங்கி போய் உள்ளது அமெரிக்கா பகாசுர புலனாய்வு கும்பல்கள். அமெரிக்கர்கள் எப்படி போராடுவது என்று மறந்து விட்ட நிலையில் இருக்கும் பொழுது, இது போன்ற போராட்டங்களை பார்க்க ஆர்வமாகத் தானே இருப்பார்கள். இதில் ஒன்றும் வியப்பு கிடையாது என்று இருக்க மறுக்கிறது அமெரிக்கா உளவு கும்பல்கள்.

அமெரிக்க மக்களும், இங்கிலாந்து மக்களும் இது மாதிரி அதாவது எகிப்திய மக்களைப் போன்றெல்லாம் போராட மாட்டார்கள். ஒரு ஒருவாரத்தில் போராட்டத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றி விடுவார்கள். நீண்ட அனுபவம் உள்ளவர்கள். என்ன ஒரு ஐம்பது அறுபது வருடங்களாக போராடவில்லை. அவ்வளவுதான். நாம் என்ன இவர்கள் போராட்டத்தை பார்க்காமலா போய் விடப் போகிறோம்..? அப்படி பார்க்கும் பொழுது நாம் சொன்ன கருத்து பொய் என்றால் ஏற்றுக் கொள்வோம்..!

இந்நிலையில், இஸ்ரேலின் நண்பர்கள் என்ற நிறுவனம்...? ( அது என்ன இஸ்ரேலின் நண்பர்கள் என்ற அமைப்பு..? இஸ்ரேல் உளவு கும்பலாக இருக்கும்..? பெயர் எல்லாம் என்ன பெரிய விசயமா..? ) நடத்திய நிகழ்ச்சியில் பேசியதாக ஒரு தகவலும் உள்ளது. இந்த சைமன் பெரோஸ் பேசுகையில், முபாரக் மிக நல்லவர் என்றும், இந்தப் போராட்டத்தில் ஏராளமான உயிர் சேதங்களை அதிபர் முபாரக் தடுத்து விட்டார் என்று கூறி உள்ளார். மிக நல்ல எண்ணத்தில் சொல்லவில்லை இந்த சாத்தான். சுமார் ஒரு லட்சம் மக்களையாவது கொன்று இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொல்ல முடியாததின் மெல் வருத்தம் தான் இது.

மேலும் இந்த இஸ்ரேல் சாத்தான் கூறுகையில், எகிப்தில் ஜனநாயகம் என்பது மிகவும் ஆபத்தானது என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அதெப்படி எகிப்திய மக்கள் ஜனநாயகப்படி வாழ்ந்தால் மிக ஆபத்தாக இருக்க முடியும்..? யாருக்கு ஆபத்தாக இருப்பார்கள்..? 'உள் ஒன்று வைத்து புறம் ஒன்று' என்று பேசுகிறார்களா..? இவர்கள் எல்லாம் இலங்கையுடன் கூட்டு..? பின் எப்படி இருப்பார்கள். எகிப்திய மக்கள் ஜனநாயக முறையில் வாழ்ந்தால் மிக ஆபத்தாக இருக்கும்..? என்ன புதிராக இருக்கிறதே..? ஏதோ மிக பயங்கர திட்டங்களை வைத்துள்ளார்கள் மனித குல சமூகத்திற்கு..என்று கருதலாமா..!

சங்கிலிக்கருப்பு.

Comments