தமிழர் புனர்வாழ்வுக்கழகம் கே.பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது: ஐ.தே.க

KumaranPathmanathanTalkதமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை கே.பி என்ற குமரன் பதமநாதனிடம் சிறீலங்கா அரசு ஒப்படைத்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பத்தமநாதனிடம் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை ஒப்படைத்த சிறீலங்கா அரசு, அவருக்கு வடபகுதியில் 100 ஏக்கர் நிலத்தையும் வழங்கியுள்ளது.

ஆனால் தங்க ஆபரணங்களை அணிந்து யாழ்ப்பாண நகருக்கு செல்ல வேண்டாம் என மக்களிடம் கே.பி கோரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தங்க ஆபரணங்களை வங்கிகளில் வைப்பிலிடுமாறு கே.பி கோரியுள்ளார். இதன் மூலம் தேவையான தகவல்களை அறிந்துக் கொண்டு தங்க ஆபரணங்களை கொள்ளையிடவும் அவர்கள் முயற்சிக்கலாம்.

2011 ஆம் ஆண்டு சர்வாதிகாரத்திற்கு அனுகூலமற்ற வருடமாகும். ஆரசாங்கத்தை அதிகாரத்தில் அமர்த்திய மக்களே இன்று அரசாங்கத்திற்கு எதிராக மாறியுள்ளனர் எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்

Comments