தெற்கு சூடான் விடுதலைக்கு இறுதி முடிவுகள் வெளிவந்தன

கடந்த சனவரியில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் தெற்கு சூடான் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 98.83% தெற்கு சூடானியர் ஆப்பிரிக்காவின் மிகப்பெரும் நாட்டில் இருந்து பிரிவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFiwE2H-tRADwFyr-PsUY-wM-T_rq_dyu7LdvpeRbe0F-aKx_jxOUAy4mIn56OpnHzJa0OJ2Z-NvDCuvQm3xXp_NV3FPby8esw75MWY91sTlrhS62BaXHbvgu-MyCDCJ8f2m5dG4lCLoY/s1600/ss.JPG
முன்னதாக சூடானின் அரசுத்தலைவர் ஒமார் அல்-பஷீர் தேர்தல் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அறிவித்திருந்தார். இருபதாண்டு கால உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த 2005 ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தின் படி இவ்வாக்கெடுப்பு தெற்கு சூடானில் இடம்பெற்றது.

அதிகாரபூர்வ இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது முன்னாள் தெற்கு சூடான் தலைவர் ஜோன் கராங் அவர்களின் கல்லறையின் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கொடிகளை அசைத்தவாறு மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். "44,888 மக்கள் (1.17%) பிரிவினைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

ஆதரவாக 3,792,518 பேர் வாக்களித்தனர்," என தேர்தல் ஆணையாளர் முகமது இப்ராகிம் கலீல் தெரிவித்தார். அமெரிக்கா, ஐரோப்ப்ய ஒன்றியம் ஆகியன தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளன. வாக்கெடுப்பு சுமூகமாக நடந்தேறினால், தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து சூடானை விலக்கி வைப்பதாக ஐக்கிய அமெரிக்கா முன்னர் அறிவித்திருந்தது.

தென் சூடானுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்தும் நல்லுறவைப் பேணிவருகிறது. தென் சூடான் ஜூலை மாதம் பிரிந்துசெல்லும் தேதியை அறிவிக்க இருக்கிறது. அந் நிகழ்வுகளில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Comments