உலகக் கோப்பை - இந்திய பார்ப்பனியமும் கிரிக்கெட் விளையாட்டும்

- ஆனால் உலகெங்கும் பரவ முடியவில்லை என்ற மீளாத்துயர்...?!
[India+Bermuda.jpg]
20 + 20..கிரிக்கெட்டும், உலக கோப்பை கிரிகெட் போட்டியும்..! தமிழக - இந்திய - மலைவாழ் இளைஞர்களின் மூளையை சூறையாடும் பகாசுர - பார்ப்பனிய அரசுகள்..! 'கிரிக்கெட்' இது பற்றி ஈழதேசம் வாசகர்கள் நன்கு அறிவார்கள். என்றாலும் இது குறித்து நீண்ட நாளாக எழுத வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது. வரிசையாக பல அரசியல் நிகழ்வு போக்குகள். என்றாலும் ஏப்ரல் வரை நடைபெறும் இந்த மட்டை பந்து பற்றி நமது பார்வையில் பார்ப்போமே..! தொடர்ந்து மற்றவர்களையும் எழுத வைப்போம்...!

" RAIN RAIN GO AWAY, COME AGAIN ANOTHER DAY " என்று ஒரு ரைம்ஸ் அனைவரும் அறிந்ததே. அவர்கள் நாடுகளில் ஒரு சில மாதங்களே நிலவும் சுமார் 20 டிகிரி வெப்பத்தில், அந்த இதமான சூரிய குளியலை குளிக்க கண்டு பிடிக்க, ஒரு கோமான் கண்டு பிடித்த விளையாட்டு. அப்பொழுது அவர்களின் அதாவது பிரிட்டனின் அரசுகள் உலகம் முழுதும் இருந்தது. காலை சூரியன் உதிப்பதும் எங்கள் நாட்டில்., மாலை அந்த சூரியன் மறைவதும் எங்கள் நாட்டில் என்று, கட்டபொம்மன் படத்தில் பேசுவார்கள் இந்த வசனத்தை. அதுபோல இருந்த காலம் அது.


இப்பொழுதும் பிரிட்டன் நாட்டில் உள்ள பெருசுகளிடம் கேட்டுப் பாருங்கள். நிச்சயம் எங்காவது ஒரு நாட்டில் கிரிக்கெட் விளையாடி இருப்பார் அந்த பெருசு. யார் கண்டது..? இருண்ட ஐரோப்பியாவை கண்டு பிடித்த ஆப்பிரிக்கர்கள் கூட இதற்கு மூல காரணமாக இருந்திருக்கலாம். என்றாலும், சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்ததாக ஒரு குறிப்பு ஒன்று உள்ளது. 1844 - ஆம் ஆண்டு யூ.எஸ்.எ., கனடா நாட்டிற்கு இடையில் நியூயார்க் நகரில் நடந்ததாக சொல்லப்படுகிறது. 16 - 17 ம் நூற்றாண்டுகளில் துவங்கிய இந்த பெரும் சைத்தான் அல்லது பில்லி சூனியம் அல்லது பெரு நோய் அல்லது வி.டி. அல்லது எய்ட்ஸ் அல்லது டெங்கு அல்லது என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். எப்படிஎனில் ஆகப்பெரும் அழிவாக அந்த சொல் இருக்க வேண்டும். அந்த சொல்லின் குறியீடு அப்படிப்பட்டது.

இந்த கிரிக்கெட் அப்படிப்பட்ட விசயமாக தமிழக இந்திய இளைஞர்களுக்கு ஆகிப்போய் விட்டன. ( பெரிய தொடரே எழுதலாம் இந்த கிரிக்கெட் பற்றி..என்றாலும் மிக நீண்ட கட்டுரையாக வருகிறது பொறுத்துக் கொள்ள வேண்டும் வாசகர்கள்.) சுமார் ஒரு 28 வருடங்களாக இந்த உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது. தற்பொழுது நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் 14 அணிகள் விளையாடுகின்றன. நாம் மேற்சொன்ன ரைம்ஸ் பற்றி பிரித்து மேய்ந்து விட்டார்கள் பத்து வருடங்களுக்கு முன் தமிழ் நவீன இலக்கியவாதிகள். பிறகு இதைப் பார்த்து தொலைக் காட்சிகளில் பட்டி மன்றத்தில் பேசினார்கள். ஏயா...! தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஜூன் மாதமும் விவசாயிகள் காவிரி நீர் வேண்டுவதும், பிறகு அது திராவிட அரசியல் ஆகுவதும் அனைவரும் அறிந்ததே...! இப்பொழுது போய் மழையே மழையே வராதே..என்று பாடும் தன் குழந்தை ஆனாலும் அந்த விவசாயிக்கு கோபம் வராதா..வருமா..?

அதுபோல, இந்திய இறையாண்மையில் உள்ள ஒரே விளையாட்டு கிரிக்கெட் மட்டுமே. அதற்கும் இந்த கல்மாடி மற்றும் சரத் பவார் மற்றும் ஷாருக்கான், அந்த லிரில் சோப்பு அம்மையார், நம்ம சசி தரூர்., இவர் பான் கீ மூன் அவர்களுக்கு போட்டியாளர்..நினைத்து பாருங்கள் இந்த சசி தரூரை...இவர் மட்டும் ஐ.நா. பொதுச் செயலராக வந்திருந்தால்..! இப்பொழுது மட்டும் என்னவாம் என்று கேட்கலாம்...ஆனால் மொழி பிரச்சனை இருக்கிறதே..நமது பார்ப்பனிய வெளியுறவு, உள்துறை பார்ப்பனியர்களுக்கு கொரிய மொழி தெரியாதே..அப்படியே சிலருக்கு தெரிந்திருந்தாலும் தங்களது உள்குத்து அரசியலில் ஓரம் கட்டி விட மாட்டார்களா என்ன..? யாரவது ஒரு சிறந்த புரோக்கர் வேண்டும் அல்லவா..? சசி தரூரை ஓரம் கட்டி விட்டார்கள்...யார் ஓரம் கட்டியது..அவரது மூன்றாவது மனைவி..? போகட்டும் இவையெல்லாம்..!

சீமான் கேட்டார் ஏது உங்கள் இறையாண்மை என்று..? இதோ கடந்த இருபது வருடங்களாக இருக்கிறதே..! கிரிக்கெட் என்ற விளையாட்டு..! முன்பு ஒரு காலத்தில், அதாவது பார்ப்பனியர்கள் மட்டும் விளையாடிய, அவர்களின் சிறப்பை, வானொலியில் கேட்டு மகிழ்ந்த, அதற்கு அப்பவே விமர்சனம் எழுதிய அதி புத்திசாலிகள் தவிர, யாராவது கையில் ரேடியோ ( அது அந்தக் காலத்தில் ஜப்பான்காரன் கொண்டு வந்தான் அந்த கைபேசி ரேடியோவை..! ) வைத்திருந்தால், சார்.. ஸ்கோர் என்ன, என்று கேட்பதும் அதற்கு பல எள்ளி நகையாடல்களும் ....என்ன என்று சொல்வது..?

இன்று என்ன நிலைமை..? எவ்வளவு இணைய தளம்..? இணைய தளத்தை விட்டு விடுவோம்..? என்னங்கப்பா..? அணைத்து விளையாட்டு தொலைக்காட்சிகளும் நேரடி ஒளிபரப்பு..? மேட்டுக்குடி அல்ல, கிராமப்புறத்தில் தன்னுடைய நிலத்தை இழந்த குடியானவனின் பிள்ளைகள் தங்களது காய்ந்து போன வறண்ட நிலத்தில் பெருமளவில் விளையாட்டுப் போட்டி..அதுவும் பரிசு 10,001 - 5001, 3001, 2001 அப்புறம் போனாப் போகுதென்று ஆறுதல் பரிசாக ரூபாய் 1001....! இதில் எவ்வளவு கட்டப் பஞ்சாயத்து, எவ்வளவு கலவரம், எவ்வளவு வழக்குகள், இதையும் மீறி கொலைகள் வேறு ..!

எனவே, சுருக்கமாக சொல்லலாம், நாம் தமிழர் சீமான் அவர்களுக்கு, ஏது இறையாண்மை என்று கேட்டார் அல்லவா..? யாரிடம் கேட்டார் என்றெல்லாம் கேள்விகள் யாரும் கேட்கக் கூடாது..? யார் பதில் சொல்வது என்றும் கேட்கக் கூடாது..? நமது வழக்கம் போல சில கருத்துக்களை சொல்லுவோம்..சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு. அவ்வளவுதான். இந்திய இறையாண்மை என்பது, இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஏராளமான ரசிகர்கள் மத வேறுபாடின்றி பூசைகள், புனஸ்காரங்கள், தொழுகைகள், சிறப்பு பாதிரியார்களின் பாவ மன்னிப்புகள், சிறப்பு வேண்டுதல்கள் எல்லாம் நடைபெற்றன.

இந்த கால கட்டத்தில் போய், தமிழக இளைஞர்களிடம் ஏதாவது இதில் ஒன்றை - புலம் பெயர் தமிழன், ஈழத் தமிழன், இலங்கை அகதிகள் முகாம் தமிழ்நாட்டில், தமிழ், தமிழக மீனவன், அரபு நாடுகளில் ஏற்படும் மாற்றம் என்று கூறிப் பாருங்கள் பார்ப்போம்..! விலைவாசி, பெட்ரோல் விலை, மற்றும் விலைவாசி, கிராமப்புற அடக்கு முறை என்று ஏதுவும் சொல்ல முடியாது. அணைத்து கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு இலவச டி.வி. கொடுத்து விட்டு மறக்காமல் சுமங்கலி அல்லது சன் க்ரூப் கேபிள் தொடர்பு கொடுத்து விட்டோம். தமிழக இளைஞர்கள் இந்த உலகக் கோப்பை விளையாட்டை பார்க்கும் லட்சணமே தனி. இவன் சொல்லும் யோசனைகள், எதிர்பார்ப்புகள், ஆரவாரம் என்று கொதித்துத்தான் ஆக வேண்டும். அதுவும் இந்தியா பாகிஸ்தான் என்றால் இவனே கத்தியை எடுத்துக் கொண்டு போய் சண்டை போடுவதைப் போல எண்ணம்.. பாகிஸ்தானில் இருந்து ஏன் வெங்காயம் இறக்குமதி என்றால் அதுவேறு, இதுவேறு என்று சொல்லும் கிரிக்கெட் ரசிகன் நிலையை என்ன என்று சொல்வது..? சீமான் அவர்கள் இந்த கிரிக்கெட் குறித்து பேச வேண்டும்..! எவ்வளவு பித்ததலாட்டம் நிரம்பிய மூளை சலவை செய்யும் விளையாட்டு என்று.

சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு இந்த உலகக் கோப்பை கடைசி என்று சொல்லுகிறார்கள். இந்திய டீமில் உள்ள தற்போதைய, மற்றும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் சொன்னார்கள், இந்த உலகக் கோப்பை சச்சினுக்கு உரித்தானவை என்று. எனவே, இப்படி கருதலாமா..? ஒன்று, இந்த உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்ற வேண்டும் அல்லது இலங்கை கைப்பற்ற வேண்டும்..? எல்லாமே முன்பே தீர்மானிக்கப்படுவது தானே..? மிகப்பெரும் ஊழல்களில் எப்படி காணமால் போனது இந்த ஐ.பி.எல்.ஊழல்..? வரும் ஏப்ரல் மாதம் வரை இந்திய அரசு தப்பித்துக் கொள்ளும். மிகப்பெரிய ஊழல் விசயங்களில். ! கூட்டுக் குழு பாராளுமன்ற கமிட்டியில், ரயில்வே பட்ஜெட்டில் பிறகு பொது பட்ஜெட்டில், பிறகு ஏதாவது ஒரு அரை இறுதிக்கு கொண்டு சென்று விடுவார்கள் இந்திய பார்ப்பனிய கூட்டம்..பின்பு கப்பை வாங்க வைத்து விட்டு அனைவருக்கும் அல்வா கொடுத்து விடலாம் என்று நினைக்கிறது இந்திய பார்ப்பனிய அரசு.

ஒன்றை மட்டும் நாம் சொல்லிக் கொள்வோம். இலங்கை யுத்தத்திற்குப் பிறகு நீங்கள் நினைத்தது போல ஏதுவும் நடந்ததா..? உலக நிகழ்ச்சி நிரல் என்பது வேறு..? லோக்கல் நிகழ்ச்சி நிரல் என்பது வேறு. ஈழ விசயங்களில் மூக்கை மட்டும் அல்ல, எப்படியும் ஈழ மக்களை அழிக்க வேண்டும் என்று, எந்த வித தார்மீகமும் இல்லாமால் வெறி ஆட்டம் ஆடினீர்கள்.

அதாவது பாவம் பங்களாதேஷ்காரன்..! என்னமோ, ஒரு சிறு எலியை அடித்தவுடன் பெரும் சிங்கத்தை அடித்து நொறுக்கியது போல காட்டினீர்களே இந்த வெற்றியில்...! என்ன நியாயம் இருக்கிறது..! எவ்வளவு பணம் கொடுத்துக் கொண்டு வருகிறீர்கள் இந்த உலகக் கோப்பை கப்பை கைப்பற்றுவதற்கு...! பணம் நிறைய இருக்கிறது இந்திய அரசிடம்..! திறமை மற்றும் அறிவு உள்ளவன் சூறையாடலாம்..அதுவும் பார்ப்பனியர்கள் மட்டும்..! சூறையாடட்டும்...! இந்திய பார்ப்பனியர்களின் ஒரே விளையாட்டு கிரிக்கெட் மட்டுமே. எனவே எப்படி யோசனை செய்தாலும் எல்லாவற்றிலும் எப்படி கொள்ளை அடிப்பது என்பதுவே முதலும் முதல். இதில் கூடுதலாக தேசப்பற்று வேறு. கேட்கவா வேண்டும்..!

மக்கள், பொது நீதி, தர்மம், நல்ல அரசாட்சி இவை எல்லாம் தேவையில்லை. கிரிக்கெட் ஒன்று போதும் இந்த சாமானிய பொது சனங்களை ஏமாற்றுவதற்கு...! என்று கருதலாமா..! என்று இருக்கிறது இந்திய அரசை நடத்தி வரும் பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ். கும்பல்கள். கடாபி, முபாரக், சேலா, அல்பைடான், மற்றும் ஓடி ஒளியப் போகும் சவூதி அபுதுல்லா என்று மட்டும் கருதி விட முடியாது. இந்திய அரசியல்வாதிகள் ஆன சோனியா, பிரணாப், பா.சி. மற்றும் அம்பானி, டாடா, மற்றும் சன் குழுமம் இவர்கள் இந்திய நாட்டை விட்டு தப்பி ஓடி விடும் சூழல் ஒன்று வந்தாலும் வரலாம் என்று கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு.
ஈழதேசம் பார்வையில்...!

Comments