டேவிட் கேமரூன் எதற்காக எகிப்து சென்றுள்ளார்....? ஜனநாயகம் வழங்குவதற்கு...? அதெல்லாம் ஒன்றும் இல்லை..!

http://tamilnews.jupiterwebsoft.com/wp-content/uploads/2010/07/Zardai-cancels-UK-visit-after-camerons-hostile-remards.jpgநடந்து கொண்டிருக்கும், பரவிக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சி முதலில் வெற்றியை கண்டது. சூடானில், பிறகு துனிசியாவில், தற்பொழுது எகிப்தில். சூடான் ஆப்பிரிக்கா நாடு ஒன்றும் பிரச்சனை இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்ளலாம். அதுவும் புதிய நாடாக தென் சூடான் மலரப் போகிறது. துனிசியாவில் புதிய ஆட்சி அமைக்கும் வேலைகளில் இருப்பார்கள். எனவே இந்த நாட்டையும் சாவகாசமாக போய் பார்த்துக் கொள்ளலாம். திடுதிடுப்பென்று பதறிப் போய் இங்கிலாந்து பிரதமர் எகிப்து நாட்டில் நேற்றைய தினத்தில் வந்து இறங்கி உள்ளார். எகிப்து நாட்டில் மக்கள் எழுச்சி என்றவுடன் முதலில் காய்ச்சல் கண்டது இஸ்ரேல் நாடு தான். எகிப்தின் அருகாமை நாடு என்ற காரணம் மட்டும் கிடையாது. பல சிறப்புக் காரணங்கள் உண்டு.

இந்த எகிப்தின் மக்கள் எழுச்சிக்குப் பின் ஹமாஸ் என்ற இயக்கம் உறுதுணையாக நின்றன என்று இப்பொழுதும் போராட்டம் நடக்கும் பொழுதும் சொன்னாகள். ஹமாஸ் நின்றால் என்ன..? உட்கார்ந்தால் என்ன..? ஹோசினி முபாரக் நிரம்ப புத்தி உள்ளவராம் இப்படி திருவாய் மலர்ந்தருளியுள்ளார் புர்லோஸ்கோணி. இப்பொழுது தெரியுமே எப்படி எல்லாம் முக்கி முனகிக் கொண்டிருந்தார்கள் இந்த பழம்பெரும் ஐரோப்பிய பெருச்சாளிகள் என்று. மக்கள் எழுச்சி அதுவும் ஆப்பிரிக்கா நாடுகளில், மத்திய கிழக்கு நாடுகளில் என்றவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறது, உலகில் ஜனநாயகத்தை சுதந்திரத்தை குத்தகைக்கு எடுத்த ஒபமாவும் அமெரிக்க அரசும்..! டேவிட் கேமரூன் எகிப்து வந்ததன் நோக்கத்தை இவ்வாறு தெரிவிக்கிறார். உண்மையான மாற்றம் நடக்கிறதா என்பதை கவனிக்கவே வந்துள்ளேன் என்றும், ஹோசினி முபாரக் அரசுக்கு மாற்று இந்த இஸ்லாமிய கட்சியினர் கிடையாது என்று.

எகிப்து நாட்டில் பெரிய கொள்ளைக்காரனும் மாபெரும் திருடனுமான, ஏன் சொல்லுகிறோம் என்றால், இப்பொழுது தான் புதிய புதிய
செய்திகளை சொல்லிக் கொண்டே வருகிறார்கள். கிட்டத்தட்ட எகிப்து நாட்டில் உள்ள அணைத்து சொத்துக்களையும் சுருட்டி வாரிக் கொண்டு போய் பிரிட்டன் அமெரிக்கா கனடா என்று முதலீடு செய்து உள்ளது முபாரக் குடும்பம். எகிப்து மக்கள் தூக்கி எறிந்து விட்டனர் இந்த கொள்ளைக்கார முபாரக் குடும்பத்தை. நாட்டைவிட்டு ஓடி ஒளிந்துள்ள முபாரக் அரசுக்கு, மாற்று இவர் இல்லை அவர் இல்லை... என்று ஏன் பஞ்சாயத்து செய்ய வேண்டும் டேவிட் கேமரூன்...? விசயம் உள்ளது. பிரிட்டன் பெட்ரோலியம்
( BP) த்தில் பெருமளவு எகிப்தின் சொத்துக்களை முதலீடு செய்து உள்ளது முபாராக்கின் குடும்பமும் முபாரக்கும். நிலைமை இப்படி இருக்கையில்,

ஆட்சியை கைப்பற்றிய எகிப்து ராணுவம் சொல்கிறது இவ்வாறு. புதிய ஆட்சியை தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கும் வரை இடைக்கால நிர்வாகத்தை நாங்களே கவனிப்போம் என்று சொல்கிறார்கள். அதாவது புதிய மொந்தையை ஏற்படுத்துவார்களாம். இது என்ன பழைய மாதிரியான மக்கள் எழுச்சி என்று நினைத்து விட்டார்கள். இந்த ராணுவ தளபதிகள் அனைவரும் மூட்டை பூச்சிகளைப் போல ரத்தம் குடிக்க வைத்து வளர்த்து வந்தார் கிழட்டு முபாரக். புதிய ஆட்சியிலும் இவர்கள் ரத்தம் குடிப்பார்களாம். இருக்கும் அதி பயங்கர சலுகைகளை அனுபவித்து விட்டு இப்பொழுது இடத்தை காலி செய்ய முடியவில்லை. இந்த ராணுவ தளபதிகள் கூட்டத்திற்கு. எனவே ஒரு டம்மி பீசான ஒரு முன்னாள் தளபதி ஒருவரை தேடிக் கண்டு பிடித்து அவரை இடைக்கால அதிபராக அமர்த்தி உள்ளனர் இந்த எகிப்து ராணுவ தளபதிகள் கும்பல்.

இந்த கும்பலையும், அதாவது தற்போதைய அதிபர் ஹுசைன் தண்டாவி மற்றும் தற்காலிக பிரதம மந்திரியாக உள்ள அகமத் ஷாபிக் இவர்களுடன் பேச்சு நடத்தி உண்மையான சுதந்திரத்தை அமைக்க பாடுபடும் என்று கூறுகிறார். இது காறும் முபாரக் அவர்களுக்கு வெண் சாமரம் வீசிய பிரிட்டன். டேவிட் கமரூன் அவரைத் தொடர்ந்து ஹில்லாரி கிளிண்டன் வருவார், பிரான்ஸ் அதிபர் சர்கோசி, இப்படியே எகிப்து மக்கள் விட்டுக் கொண்டே இருந்தால் புதின் அப்புரம் அந்த ஜேர்மன் அம்மையார், ஹு ஜிண்டாவோ, ஜப்பான் சிங்கு, நம்ம சிங்கு என்று படை எடுத்து ஒரு நயா பைசாவுக்கு பிரோயோசனம் இல்லாமல் செய்து விடுவார்கள் என்று பேராசிரியர் முகமது பவுட் கடல்லா ( அப்படியே மொழி பெயர்த்தலை இனிமேல் தவிர்க்க வேண்டும்... பெயர்கள் சகிக்கவில்லை. ) அவர்களுக்கு யாராவது சொல்ல வேண்டும். அவருக்கு தெரியாத என்ன..? பெரிய கொட்டை உருட்டிய கும்பலை துரத்தி அடித்திருக்கிறார்...?

அவ்வளவு லேசில் விட்டு விட மாட்டார்கள் எகிப்தியர்கள். நைல்நதி கலாசாரத்தை கொண்டவர்கள். என்ன சொத்தை தமிழர்களா..! அப்படியே வேடிக்கைப் பார்ப்பதற்கு.

இப்படி...இந்த எகிப்து ராணுவ அதிகாரிகள் உள்ளடி வேலையை துவங்கியதும் போராட்டக்காரர்கள் ராணுவத்துடன் மோத ஆரம்பித்து விட்டார்கள். வெற்றி விழாவில் நடந்த பேரணியில் பேசிய பலர் ராணுவ தளபதிகளை நேரடியாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். இதில் பேசிய பேராசிரியர் முகமது பவுட், " புரட்சி முடிந்து விடவில்லை. ஆட்சியை ராணுவ தளபதிகள் கைப்பற்றுவதை நாங்கள் விரும்பவில்லை. " என்றவுடன் எகிப்தியர்களின் கைதட்டல் ஒலி, நைல் நதி ஆற்றுக் கரையோரங்களில், பிரமீடுகளில் இன்னும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. மேலும், நம்ம முகம்மது பவுல் சொன்னார் இவ்வாறு. முபாரக் கும்பலிடம் உள்ள எல்லா மந்திரிகளும் உடனடியாக ஆட்சியை விட்டு விலக வேண்டும் என்றும், உடனடியாக நெருக்கடி நிலை அதாவது அவசரகால சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று. முபாரக்கின் ராணுவம் சீர்திருத்தங்களை செய்யும் என்று நாங்கள் நம்பத் தயாரில்லை என்று இரத்தின சுருக்கமாக சொல்லி விட்டார். இதையும் மீறி டேவிட் கமரூன் சென்றிருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்..?

பொறுத்திருக்க வேண்டும் இன்னும் சில வருடங்களுக்கு..? எங்கே போகப் போகிறார்கள் ஐரோப்பியர்கள்..? அமெரிக்கர்கள்..! அவர்களும் போராடும் செய்திகளை நாம் என்ன எழுதாமலா போகப் போகிறோம்...! ஜனநாயகம் சுதந்திரம் என்றவுடன் பெரிய கடப்பாறையை முழுங்குவது போல் உள்ளது கார்ப்பரேட் அரசுகளுக்கு..!

சங்கிலிக்கருப்பு
ஈழதேசம் பார்வையில்...!

Comments