கனடா தேசியப் பிரச்சனைகளிலும் மிகுந்த கரிசனை கொண்டவர் என்.டி.பி. வேட்பாளர் ராதிகா சிற்சபேசன்

கனடாவின் ஸ்காபுறோ ரூஜ் ரிவர் தொகுதியில் என்டிபி கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ராதிகா சிற்பசபேசன் ஈழத்தமிழர் பிரச்சனைகள் தொடர்பாக மட்டுமல்ல கனடாவின் தேசியப் பிரச்சனைகள் தொடர்பாகவும் மிகவும் கரிசனை கொண்டு செயற்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

கடந்த புதன் கிழமையன்று மாலை அவரது தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ் மொழி மூலமான ஊடகங்களின் பிரதிநிதிகளை சந்தித்த கூட்டத்தில் உரையாடியபோதே இதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

என்டிபி கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராகவும் ஈழத்தமிழர்களின் விடயங்கள் தொடர்பான என்டிபி கட்சியின்; பேச்சாளராகவும் விளங்குகின்ற ராதிகா சிற்சபேசன் ஈழத்தமிழர் பிரச்சனைக்ள தொடர்பாகவும் இலங்கையில் அரசாங்கத்தின் கெடுபிடிகளால் கஸ்டமான வாழ்வையும் உயிராபத்துக்களையும் எதிர்கொண்டு வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் உறவுகளின் விடிவிற்காக எதிர்காலத்தில் என்டிபி கட்சி உரத்துக் குரல் கொடுக்கும் வகையில் தான் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தபோது, ஏனைய கட்சிகளின்; பிரதிநிதிகள் நமக்கு அளித்த வாக்குறுதிகளிலும் பார்க்க இந்த செய்தி நமக்கு ஆறுதல் தருவதாக இருந்தது.

அத்துடன் கனடாவின் பல தேசியப் பிரச்சனைகள் தொடர்பாகவும் நமது என்டிபி வேட்பாளர் ராதிகா மிகுந்த தெளிவு கொண்டவராக காணப்படுகின்றார். கனடாவின் அனைத்து பிரஜைகளும் அனுபவிக்கும் வேலையில்லாப் பிரச்சனைகள் மற்றும் ஓய்வூதியப் பிரச்சனைகள், வீடில்லாப் பிரச்சனைகள், கனடாவிற்கு புதிதாகக் குடியேறும் குடிவரவாளர்களின் பிரச்சனைகள் ஆகியவற்றையும் நன்கு தெளிந்து விளங்கியபடி ராதிகா அன்றை பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவாக உரையாற்றினார்.

தமது தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ் வாக்காளர்களை சந்திக்கும் போது அவர் தெரிவிக்கும் கருத்துக்களும் அதே வேளையில் வேற்று இன மக்களை சந்திக்கும் போது அவர்களை கவரும் வகையில் அவர் தெரிவிக்கும் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களும் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் காணப்படுகின்றன. இது ராதிகாவின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும் என்று கட்டியம் கூறுகின்றது.

அவரது என்டிபி கட்சியின் தலைவர் ஒருவர் தான் கடந்த 2009 ம் ஆண்டு நமது தமிழ் மக்கள் வன்னியில் நமது மக்கள் இலங்கை அரசாலும் ஏனைய நாடுகளின் படைகளினாலும் கொல்லப்பட்டபோது ஒட்டாவா மாநகரில் நமது மக்கள் நடத்திய கவனயீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ராதிகா அவர்களோடு அடிக்கடி தொடர்பு கொண்டு நமது ஈழத்தமிழ் மக்களின் சிரமங்கள் தொடர்பாக தமது கட்சித் தலைவர் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். புதன்கிழமையன்று ராதிகா நடத்திய தமிழ் மொழி சார்ந்த ஊடகங்களுடனான பத்திரிகையாளர் மாநாடு மிகுந்த பலனுள்ளதாக அமைந்தது.

Comments