சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் அறிக்கையில் நம்பியாரின் பங்கென்ன? - இன்னர் சிற்றி பிறஸ் கேள்வி

ஏப்பிரல் 21ம் நாளன்று காலை 10 மணிக்கு இன்னர் சிற்றி பிறஸ் ஐ.நாவின் பேச்சாளருக்கும் பேச்சாளர்களான பர்கான் ஹக் மற்றும் மாட்டின் ஆகியோருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தது.


அந்த மின்னஞ்சலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

சிறிலங்கா தொடர்பான ஐ.நா வல்லுநர்கள் குழுவினது அறிக்கையினை ஐ.நா வெளியிட்ட பின்னர் எங்களுக்கும் அறியத்தருமாறு கோரி இந்த வேண்டுகை அனுப்பப்படுகிறது.

"இந்த அறிக்கையினைப் பெறுவது தொடர்பில் நம்பியாரின் பங்கு என்ன என்பதையும், இந்த அறிக்கையினைத் தயாரிப்பதற்கு ஐ.நா எவ்வளவு நிதியினைச் செலவழித்தது என்பதையும், இந்த அறிக்கையினைத் தயாரிப்பதற்காக வல்லுநர்கள் குழுவின் உறுப்பினர்கள் சிறிலங்காவிற்குப் பயணம் செய்திருந்தார்களா என்பதையும் பயணம் செய்யவில்லையாயின் அதற்காக காரணம் என்ன என்பதையும் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது முதல் அது சிறிலங்காவினது அதிகாரிகளை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்களா அல்லது இல்லையா என்பதையும் எங்களுக்கு உறுதிப்படுத்துமாறு கோருகிறோம். எங்களது இந்த வேண்டுகை கிடைக்கப்பெற்றதைத் தயவுசெய்து உறுதிப்படுத்துங்கள்"

ஆனால் இனர் சிற்றி பிறஸ் இந்த வேண்டுகையினை அனுப்பிய ஒன்றரை மணி நேரங்கள் கடந்த பின்னரும் மின்னஞ்சல் கிடைத்தமைக்கான உறுதிப்பாடுகூட ஐ.நாவின் இந்தப் பேச்சாளர்களிடமிருந்து கிடைக்கவில்லை.

இது இவ்வாறிருக்க, ஐ.நா பாதுகாப்புச் சபையில் கடந்த 18ம் நாளன்று சிறிலங்கா தொடர்பாகக் குறிப்பிடப்பட்டதை போர்த்துக்கல் எதிர்த்திருந்தது என வெளிவந்த செய்திகளுக்கு முரணான வகையில், இனர் சிற்றி பிறசுக்குக் கருத்துத் தெரிவித்த ஐ.நாவின் போத்துக்கலுக்கான பிரதிநிதி, குறிப்பிட்டதொரு 'தொண்டு நிறுவனம்' போத்துக்கீசின் துதுவருக்கு அறிக்கையின் சில பகுதிகளை வழங்கியமை தொடர்பாகத் தாங்கள் கேள்வியெழுப்பியிருந்ததாகக் குறிப்பிட்டார்.

குறிப்பிட்டதொரு அரச சார்பற்ற நிறுவனமொன்று போத்துக்கீசின் தூதுவருக்கு வல்லுநர்கள் குழுவின் அறிக்கையினைக் கையளித்திருந்ததாக சிறிலங்காவின் ஐ.நாவின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கோகன்ன ஏப்ரல் 20ம் நாளன்று மாலையில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட அறிக்கையானது அரச ஆதரவு வெளியீடு போலவே தென்படுகிறது.

ஐ.நாவினது வல்லுநர்கள் குழுவின் அறிக்கையின் பிரதியினை ஐ.நாவிற்கான சிறிலங்காவின் துணை நிரந்தரப் பிரதிநிதி சவேந்திர டீ சில்வாவிடம் விஜய் நம்பியார் கையளித்திருந்தாராம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வெள்ளைக்கொடிப் படுகொலைச் சம்பவம் என்ற சம்பவத்துடன் நம்பியாரும் தொடர்புபட்டிருந்தார் எனக்கூறி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவின் அறிக்கை ஊடகங்கள் வாயிலாகக் கசிந்தது தொடர்பகவே போர்த்துக்கல் குற்றம்சுமத்தியதே தவிர அறிக்கை பற்றியோ அல்லது அதனது உத்தியோகபூர்வ வெளியீடு பற்றியோ போத்துக்கல் எதுவும் குறிப்பிடவில்லை.

http://www.innercitypress.com/sripan3lanka041911.html

Comments