புதிய போர் குற்ற ஆதார புகைப்படங்கள்



இறுதிப் போரில் கொல்லப்பட்ட அல்லது படுகொலைசெய்யப்பட்ட சுமார் 134 பேரின் புகைப்படங்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. அப்புகைப்படங்களில் உள்ளவர்கள் யார் யார் என அவர்களின் உறவுகள் அடையாளம் காணலாம் என்ற நோக்கத்துக்காக அவை அனைத்தையும் அதிர்வு இணையம் வெளியிட்டுள்ளது.

இப் புகைப்படங்களில் சிலர் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டது தெள்ளத் தெளிவாகக் காட்சியாக்கப்பட்டுள்ளது. மேலும் சில புகைப்படங்களில் எரிகுண்டுகள் பாவித்ததற்கான அடையாளங்களும் காணப்படுகிறது.

பெண் போராளிகளை, மானபங்கப்படுத்தியுள்ள இலங்கை இராணுவம் அவற்றைக் காணொளியாகவும் எடுத்துள்ளது. போனில் எடுக்கப்பட்ட இக் காணொளியில் இலங்கை இராணுவம் சுடும் துப்பாக்கிச் சூட்டுச் சந்தங்களும் கேட்பதோடு, பெண்கள் உடைகளைக் களைந்து அவர்களை நிர்வாணமாக்கி இராணுவம் இழுத்துச்செல்கின்றமையும் பதிவாகியுள்ளது.














உயிருடன் சரணடைந்த ரமேஷ் படுகொலை: புதிய ஆதாரம் !


தமிழீழவிடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாக, தமிழ்நெட் இணையம் சற்றுமுன்னர் செய்தி வெளியிட்டுள்ளது. நிழற்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில், குறிப்பிட்ட படத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் அடையாளம் காட்டி உறுதிசெய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரின் இறுதிக் காலப்பகுதியில் மக்களுடன் மக்களாக, அல்லது சரணடையச் சென்ற பா.நடேசன் ஆகியோருடன் இலங்கைப் படையினரது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சென்றதாக நம்பப்படும் கேணல் ரமேசை படையினர் தடுத்து வைத்திருக்கும், மற்றும் கடும் தொனியில் விசாரணை செய்யும் காணொளிகள் முன்னர் வெளிவந்திருந்தன.

இராணுவத்தினர் அவரிடம் விசாரணை நடத்தும் காணொளிகள் வெளியாகியுள்ள நிலையில், இப் புகைப்படமானது வெளியாகியுள்ளது. கேணல் ரமேஸ் உயிருடன் இருக்கின்றரா இல்லையா என்ற சர்ச்சை நீடித்துவந்த பின்புலத்தில் வெளியாகியுள்ள இந்த நிழற்படம் மற்றொரு முக்கிய போர்க்குற்ற ஆதாரமாகும். தற்போது மீண்டும் ஒருமுறை சர்வதேசத்துக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது இலங்கை இராணுவத்தின் அகோரமான போர் குற்றங்கள். இப் புகைப்படமானது இலங்கை இராணுவத்தின் கொடூரங்களைக் கோடிட்டுக்காட்டுகிறது.

(2ம் இணைப்பு)

கேணல் ரமேஷ் அவர்களை இலங்கை இராணுவம் மே மாதம் 22ம் தேதி விசாரணைக்கு உட்படுத்தியது. அப்போது எடுக்கப்பட்ட காணொளிகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதில் ரமேஷ் அவர்கள் சாதாரன உடையில் இருந்தார். ஆனால் விசாரணை நடைபெறும் வேளை அவரை இலங்கை இராணுவம் இராணுவ உடையை போடச் சொல்கிறது. அதனை அடுத்து அவர் இராணுவத்தின் சீருடையை அணிகிறார். அக் காட்சிகள் தெள்ளத் தெளிவாக பதிவாகியுள்ளது. இராணுவத்தின் சீருடையை அவர் அணியும்போது அவரை "டேய்" என்று இராணுவம் கூறி அழைத்து அவமானப்படுத்துகிறதும் பதிவாகியுள்ளது. அப்போது அவர் அணிந்த இராணுவ உடையில் தான் அவர் இறந்து கிடக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

தாம் அவரைக் கொல்ல இருக்கிறோம் என்பது இராணுவத்துக்கு நன்கு தெரியும். ஏதோ அவரிடம் முழுப்பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதனை எழுதி விசாரணை நடத்துவது போல நாடகமாடியுள்ளது இலங்கை இராணுவம். சரணடைந்த தன்னை இராணுவம் கொல்லாது என நினைத்த தளபதி ரமேஷ் அவர்களை இலங்கை இராணுவம் கடுமையாக தாக்கி கொலைசெய்துள்ளது. இது ஒரு அப்பட்டமான போர்குற்றமாகும்.

ப.நடேசனோடு மற்றுமொரு ரமேஷ் (இளங்கே) இலங்கை இராணுவத்திடம் சரணடைந்துள்ளார். இவர் தமிழீழ காவல்துறையின் பொறுப்பாளார் ஆவார். அவரின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் செய்திகள் வெளியாகவில்லை. ப.நடேசன் உட்பட தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் ரமேஷ் அவர்களும் இலங்கை இராணுவத்திடம் மே 18 காலை சரணடைந்ததாக பாலித கோஹன முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் அதனை அவர் மறுத்துவிட்டார். ஐ.நா அதிகாரி விஜய் நம்பியாரின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த, சரணடைவு நிகழ்வுகள் கொடூரமான வகையில் முடிவுக்கு வந்துள்ளது. சரணடைந்த பலர் தற்போது உயிரோடு இல்லை. இதற்கு விஜய் நம்பியார் என்ன பதில் சொல்லப்போகிறார் ?



கேணல் பானுவும் சிறீலங்கா இராணுவத்தால் படுகொலை?

புலம்பெயர் நாட்டு ஆங்கில ஊடகங்களில் இன்று (29) வெளியான போர்குற்ற ஒளிப்படங்களில் விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கேணல் பானு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறீலங்கா அரசாங்கத்தின் படைகளுக்கு எதிரான பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய கேணல் பானு சிறீலங்கா படையினரால் சித்திரைவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

எனினும் எம்மால் இதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.



ஊடறுப்பு தாக்குதல் மேற்கொண்ட தளபதி கேணல் கஜன் அவர்கள் இனம் காண பட்டுள்ளார்


கட்டளை தளபதிகளில் ஒருவரான கேணல் கஜன் அவர்கள் இனம் காண பட்டுள்ளார் .வன்னியில் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மற்றும் சிறீலங்கா படையினரால் கைதாகிப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளின் நிழற்படங்கள் வெளியிட்டு இருந்தோம் பின்புலத்தில், போராளிகளையும், பொதுமக்களையும் அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டி வருகின்றனர்.

கேணல் கஜன் என அழைக்கப்படும் சோதிராஜ் விமலவர்ணன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் 1989 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைத்து முன்னால் யாழ் மாவட்ட தாக்குதல் படை பிரிவு தளபதியாகவும் , கிட்டு பிரங்கி படை அணி துணை தளபதியாகவும், மட்டகளப்பு துணை கட்டளை தளபதியாகவும் அதன் பின்பு இறுதி நேரத்தில் தாக்குதல் தளபதியாகவும் விசேட தளபதியாகவும் பணியாற்றி. முள்ளிவாய்க்கல் முள்ளியவளை பகுதியில் தாக்குதல் தளபததியாக பணியாற்றி சிங்கள முற்றுகையை உடைத்து வெளியேறும் போது 17 .05 .2009 ம் ஆண்டு வீரகாவியம் ஆனார் .

கட்டளை தளபதி கஜன் அவர்களின் சகோதரர் வண்ணன் அவர்கள் தமிழ்த்தாய் இணையத்துக்கு வழங்கிய செவ்வி

Comments