'இனவாதம்' கொண்ட அவுஸ்திரேலியா: ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் சாடல்

"தென்னாபிரிக்காவில் நான் பிறந்து வளர்ந்ததால் இனப்பகுபாடு தொடர்பாக எனக்கு நன்றாகத் தெரியும். நான் அதனை நேரடியாக அனுபவித்துள்ளேன்" என தென்னாபிரிக்காவின் நிறவெறி கொள்கைக்கு எதிராகப் பரப்புரை செய்தவரும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் நீதிபதியாகவும் கடமையாற்றிய நவநீதம்பிள்ளை தனது ஆறு நாள் சுற்றுப் பயணத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவுஸ்ரேலியாவினை தளமாகக் கொண்ட Sydney Morning Herald எழுதியுள்ளது. அதன் முழுவிபரமாவது,

அவுஸ்திரேலியாவின் அகதிகள் தொடர்பான கொள்கைப்பாடுகள் மிகவும் இறுக்கமாக உள்ளதாகவும், இந்நாட்டின் அபோரிஜின் Aborigines என அழைக்கப்படும் பழங்குடி இனத்தவர்கள் நடாத்தப்படுகின்ற விதமானது இனவாத மேலாண்மையைக் காட்டுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அவுஸ்திரேலியாவைச் சாடியுள்ளது.
அடைக்கலம் கோரி அவுஸ்திரேலியாவிற்குச் சென்றுள்ளவர்கள் தொடர்பாக நீண்டகாலமாகப் பின்பற்றப்படுகின்ற அரசாங்கத்தின் கொள்கையானது, அதன் மனித உரிமைகள் விடயத்தில் திரை ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது தர்க்க ரீதியற்றதாக உள்ளதாகவும் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

"தென்னாபிரிக்காவில் நான் பிறந்து வளர்ந்ததால் இனப்பகுபாடு தொடர்பாக எனக்கு நன்றாகத் தெரியும். நான் அதனை நேரடியாக அனுபவித்துள்ளேன்" என தென்னாபிரிக்காவின் நிறவெறி கொள்கைக்கு எதிராகப் பரப்புரை செய்தவரும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் நீதிபதியாகவும் கடமையாற்றிய நவநீதம்பிள்ளை தனது ஆறு நாள் சுற்றுப் பயணத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.

"தென்னாபிரிக்காவில் நிற வேவறுபாட்டுக்கான அடிப்படைக் காரணி ஒன்றிருந்தது. ஆனால் அவுஸ்திரேலியாவில். இந்த மக்களின் இனம், நிறம் மற்றும் மதம் ஆகிய இந்த மூன்றில் எதை அடிப்படையாக வைத்து இனப்பகுபாடு காட்டப்படுகின்றது?" எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குள் அடைக்கலம் தேடி புகுந்து கொண்ட நூற்றுக்கணக்கானவர்களின் அகதி நிலை வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு அவர்களை மலேசியாவிற்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலியாவின் ஆளும் தொழிற்கட்சி திட்டமிட்டுள்ளது தொடர்பான தனது ஆழந்த கவலையை நவநீதம்பிள்ளை, அவுஸ்திரேலிய பிரதமரான யூலியா கிலாட்டுடன் நேற்றைய தினம் மேற்கொண்ட சந்திப்பில் எடுத்துக் கூறியுள்ளார்.

சட்ட ரீதியற்ற வகையில் அவுஸ்திரேலியாவிற்குள் நுழையும் அகதிகளை மலேசியாவிடம் கையளிக்கப்படுவது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் உடன்படிக்கை ஒன்றை அவுஸ்திரேலியா மேற்கொண்டமையானது ஐக்கியநாடுகள் சபையின் அகதிகள் சாசனத்திற்கு முரண்பாடான விடயமாகும்.

இந்த ஆண்டு மட்டும் பெருமளவில் ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சிறிலங்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த 900 வரையிலானோர் சட்ட ரீதியற்ற வகையில் அவுஸ்திரேலியாவிற்குள் உள்நுழைந்துள்ளனர். கடந்த ஆண்டு 134 படகுகளில் 6535 பேர் வரையானோர் அத்துமீறி நாட்டிற்குள் உள்நுழைய முற்பட்ட போது அவர்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இறுக்கமான குடிவரவுக் கொள்கையின் கீழ் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இது தொடர்பான நவநீதம்பிள்ளையின் விமர்சனமானது அனைத்துலக ரீதியில் சில அசௌகரியங்களுக்கு உட்படலாம் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, பரந்துபட்டுக் காணப்படும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய அவுஸ்திரேலியப் பிரதமரின் ஆளுங்கட்சி மற்றும் அதன் எதிர்க்கட்சியான பழமைபேண் கட்சியின் நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியப் பழங்குடியினர் மத்தியில் நிலவும் மதுப் பாவனை மற்றும் சிறுவர் பாலியல் முறைகேடு போன்றவற்றைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அவர்களின் நலன் பேண் இடங்கள் மீதான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைத் திணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் ஆளுங்கட்சியாகச் செயற்பட்ட பழமைபேண் கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது தொடர்ந்தும் அமுலில் உள்ள 'தலையீட்டுக் கொள்கை' தொடர்பாகவும் நவநீதம்பிள்ளை தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

"அவுஸ்திரேலியப் பழங்குடி மக்கள் மீது அந்நாட்டு அரசாங்கத்தால் சுமத்தப்பட்டுள்ள கொள்கை தொடர்பாக அந்த மக்கள் மிகவும் ஆழமான வடுவையும் வலியையும் கொண்டுள்ளனர் என்பதை அவர்களுடன் நான் மேற்கொண்ட சந்திப்புக்கள் மூலம் தெரிந்துகொண்டேன்" என நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவின் மொத்த சனத்தொகையில் இரண்டு வீதத்தைக் கொண்ட 460,000 வரையான பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் ஏனைய அவுஸ்திரெலிய வாழ் மக்களை விட வேலையில்லாப் பிரச்சினை, துன்புறுத்தல்கள், வீட்டு வன்முறைகள் போன்ற பலவற்றுக்கு அதிகம் முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். அத்துடன் அவுஸ்திரெலியர்களின் சாதாரண ஆயுட்காலத்திற்கும் இவர்களது ஆயுட் கால்ததிற்கும் 17 ஆண்டுகள் வித்தியாசம் காணப்படுகின்றது.

நித்தியபாரதி

Comments