ஐ.நா நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவு – நெல்சன் மண்டேலாவின் தென்னாபிரிக்க ஆளும் கட்சி

இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கி-மூன் நியமித்துள்ள நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு விடுதலைப் போராட்ட வீரரும், தென்னாபிரிக்காவின் முன்னாள் அரச அதிபருமான நெல்சன் மண்டேலாவின் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் (ஏ.என்.சி) இன்று (06-05-2011) ஆதரவு தெரிவித்துள்ளது.

நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு ஆதரவு வழங்குவதாக தென்னாபிரிக்க ஆளும் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள போதிலும், அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. முன்னர் போராட்ட விடுதலை இயக்கமாக இருந்த ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் ஆட்சியமைத்த பின்னர் ஏனைய அரசாங்கங்கள் போன்ற நழுவல் போக்கைக் கடைப்பிடிப்பதாக தமிழ் மக்கள் தரப்பில் முன்னரும் மனக்குறை முன்வைக்கப்பட்டிருந்தது.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னாபிரிக்காவின் பொதுத் தேர்தலைக் கண்காணிக்கவென பல நாடுகளில் இருந்து தமிழ் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த ஊடகவியலாளர்கள் தேர்தல் முடிவடைந்த பின்னர் தென்னபிரிக்க அரசாங்க மட்டத்திலுள்ள பலருடன் பேச்சு நடத்தியிருந்தனர். இதில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ள கட்சியின் அனைத்துலக தொடர்பாளர் கலாநிதி இப்ராஹிம் இபராஹிமும் உள்ளடங்குவார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், வன்னியில் இடம்பெற்ற பேரவலத்தைத் தடுத்து நிறுத்தவும் ஐ.நாவில் தென்னாபிரிக்க வெளிப்படையான ஆதரவு வழங்க வேண்டும் என தமிழ் ஊடகர்கள் விடுத்த கோரிக்கை அந்த நேரத்தில் மறுக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் சரியாக ஒரு மாதத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன், நிபுணர் குழு கூறியிருப்பது போன்ற சுயாதீன விசாரணை, அதாவது சிறீலங்காவில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே முன்னர் விடுதலை இயக்கமாக இருந்த ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் கேட்டிருக்கின்றதே தவிர, புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கேட்பது போன்று அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாணைக்கு அது வலியுறுத்தவில்லை.

ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் (ஏ.என்.சி) இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை இனப்பிரச்சினையில் இடம்பெற்ந சம்பவற்கள் பற்றி ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான் கி-மூன் நிபுணர் குழுவொன்றை நியமித்திருந்தார். இந்தக் குழுவில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஜஸ்மின் சூகா என்ற சட்டவாளரும் உள்ளடங்குகின்றார். இந்தக் குழு சமர்பித்துள்ள அறிக்கையில் இறுதிப் போரில் சிறீலங்கா படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், மனித குலத்திற்கான அனைத்துலக சட்ட விதிகளை மீறியதாகவும், இவ்வாறான உரிமை மீறல்களில் சில போர்க்குற்ற விசாரணைக்கு இட்டுச் செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றாலும் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் அதனைக் கண்டித்து வந்திருக்கின்றது. எனவே சர்சையில் ஈடுபடும் தரப்பினர் அமைதியான, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என நாம் கேட்டுக்கொள்ளுகின்றோம். சிறீலங்கா அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவடைந்தமையே படைத்துறைத் தீர்வுக்கு இட்டுச் சென்றது என நாம் எண்ணி கவலை கொள்ளுகின்றோம்.

இனப்பிரச்சினையில் அனைத்துலக சட்ட விதிகளுக்கு முரணாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிபுணர் குழுவின் பரிந்துரையை ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் ஆதரிக்கின்றது.

அத்துடன், இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீதியான முறையில் தீர்க்கப்பட்டு, இன நல்லிணக்கம் ஏற்பட இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் என நாம் சிறீலங்கா அரசாங்கத்தைக் கோருகின்றோம்.

அனைத்துலக தொடர்பாடல் தலமைச்செயலகம்

கலாநிதி இப்ராஹிம் இப்ராஹிம்

ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ்

* இது தொடர்பாக தென்னாபிரிக்காவின் முன்னாள் அரச அதிபருமான நெல்சன் மண்டேலாவின் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் (ஏ.என்.சி) வெளியிட்டுள்ள ஆங்கில அறிக்கை வருமாறு.

PR-ANC-UN-PANEL
SAPA PR--ANC STATEMENT ON THE UN PANEL OF EXPERTS RECOMMENDATIONS ON SRI LANKA
May 06, 2011 at 01:29 PM
ISSUED BY: ANC

ATTENTION: NEWS EDITORS

FOR IMMEDIATE RELEASE:

06 MAY 2011


ANC STATEMENT ON THE UN PANEL OF EXPERTS RECOMMENDATIONS ON SRI LANKA

The United Nations Secretary General, Ban Ki-moon, had appointed a Panel of Experts to advise him on accountability in the Sri Lankan conflict. Amongst those who served on the panel is Yasmin Sooka, a prominent South African jurist.

The Panel of Experts concluded that there were serious violations of international humanitarian and human rights law committed by both the Sri Lankan government and the Liberation Tigers Tamil Eelam (LTTE), some of which would amount to war crimes and crimes against humanity.

The African National Congress has consistently condemned any act of violation of human rights in all conflict areas. We therefore urge all conflicting parties to resolve problems through peaceful dialogue and negotiation.

We have noted, with regret, that breakdown of the ceasefire and the negotiations between the Government of Sri Lanka and the LTTE led to a military solution of resolving the problems.

The ANC supports the recommendations of the Secretary General Ban Ki-moon's Panel of Experts that called for the establishment of an independent body to investigate all violations of international humanitarian and human rights laws committed in the conflict.

We also call on the government of Sri Lanka to take immediate steps to address the core grievances of the Tamil population and engage in a genuine reconciliation process.

ISSUED BY: Head of International Relations
Dr Ebrahim Ebrahim
African National Congress
Chief Albert Luthuli House
54 Sauer Street
Johannesburg 2001

ENQUIRIES: Moloto Mothapo 082 370 6930

Comments