ஈழ உணர்வாளரும் பெரியார் தி.கழக முன்னாள் நிர்வாகியுமான இராசேந்திரன் மறைவு.

ஈழ உணர்வாளரும் பெரியார் திராவிடர் கழகத்து முன்னாள் நிர்வாகியுமான செ.த.இராசேந்திரன் அவர்கள் நேற்றுக் காலை மரணமடைந்துள்ளார். அவரது விருப்பின்படி அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த காலங்களில் முன்னெடுத்து வரப்பட்ட ஈழத்திமிழர் ஆதரவு போராட்டங்களில் முனைப்புடன் ஈடுபட்டடதுடன் தனித்துவமான பங்களிப்பினையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கியுள்ளார்.

கொலை பாதகன் மகிந்த ராசப்கசே இந்தியா வருகைதருவதை கண்டித்து திருச்சி விமான நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

விமானநிலையத்திற்குள் கறுப்புச் சட்டையுடன் சென்றவர்களை பிடித்து துருவித்துருவி சோதனை செய்தகாவல்துறையினரை ஏமாற்றி தனி ஒருவராக கறுப்புக் கொடியுடன் விமானநிலைய வளாகத்திற்குள் செல்ல முற்பட்டடு கைதாகி பின்னர் விடுதலையாகியிருந்தார்.

இவ்வாறு யார் வருகிறார்களோ இல்லையோ எதிர்ப்பையும் ஆதரவையும் அர்ப்பணிப்புடன்வெளிப்படுத்தி வந்திருந்தார் இராசேந்திரன் அவர்கள். திருச்சி மாவட்டத்தில் எந்தக் கட்சியோ இயக்கமோ அமைப்போ ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களை முன்னெடுத்தால் எவ்வித வேறுபாடும் இன்றி முதல் ஆளாக பங்கேற்பது இவரது சிறப்பாகும்.

இவர் கல்லீரல் புற்றுநோயால் அவதிப் பட்டுவந்தநிலையில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று முள்ளிவாய்கால் துயரம் இடம்பெற்று இரண்டாம் ஆண்டு நிணைவு அஞ்சலியை செலுத்த உலகத் தமிழினம் தயாராக இருந்த நேரத்தில் நேற்று அதிகாலை 4மணியளவில் காலமானார்.

சிறந்த பற்றுதலுடன் ஈழத்தமிழர்களிற்காக குரல் கொடுத்து போராடிவந்த ஒரு உறுதிமிக்க மனிதரை தமிழகம் மட்டுமல்ல உலககத் தமிழினமும் இழந்துவிட்டது.

Comments