சாமத்தியச் சடங்கு அல்லது பூப்புனித நீராட்டு விழா என்ற இந்த நிகழ்வானது இடைக் காலத்திலே தோன்றிய ஒன்றாகும். சங்க கால இலக்கியங்களிலோ அல்லது அதற்குப் பிந்திய கால இலக்கியங்களிலோ இதற்கான ஆதாரங்களை காண முடியவில்லை
ஆயினும் எமது தமிழர்கள் இந்த விழாவை தமிழர் கலாச்சார விழா என்று அறியாமையால் நம்பி கொண்டாடி வருகிறார்கள். இது தற்போது கொடுத்த பணத்தை மீளப் பெறும் ஒரு விழாவாகவும் தங்களது பண பலத்தை பறை சாற்றம் ஒரு நிகழ்வாகவும் வளர்ந்து நிற்கிறது.
இதன் எல்லை உச்சத்திற்குப் போய் பாலியல் ரீதியாக பெண்ணை காட்சிப் படுத்தும் ஒரு நிகழ்வாக பார்க்கிறார்கள் திரைப் படங்களிலே வருவது போல பூப்பெய்திய பெண்ணை நீச்சல் உடையிலே வருவது போல காட்டுவதுடன் குளியலறையிலே அவளை குளிக்கும் போது படம் பிடித்தும் காட்டுகின்றனர்.
அண்மையிலே எனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டுக்குப்போயிருந்தேன் அவர் வீட்டு தெலைக்கட்சியிலே கனடா நாட்டிலே நடைபெற்ற சாமத்தியசடங்கு நிகழ்வொன்றை தொலைக்காட்சிப் பெட்டியிலே பார்த்துக் கொண்டிருந்தார்கள் விதம் விதமான கேணங்களிலே கிரபிக் முறையின் முலம் பெண்ணை படம் பிடிக்கிறார்கள் பின் அந்தப் பெண் கேக் வெட்டுகிறார் அதன் பின்னால் ஒரு பக்கத்திலே உணவு பரிமாறப் படுகிறது.
இதிலே வேடிக்கை யாதெனில் சோறும் கறியும் சாப்பிடுவதற்க்கு அந்தத் தமிழர்களுக்கு முள்ளுக்கரண்டியும் கத்தியும் தேவைப்படுகிறது.
உண்மையிலே இந்த சடங்கானது இடைக்காலத்திலேயே தமிழர்களுக்கு அறிமுகம் ஆனபோதிலும் ஏற்கனவே சொன்னது போன்று ஒவ்வொருவரும் தத்தமது பண வலிமையினை காட்டும் நிகழ்வாகவே இதை தற்போது பார்க்கிறார்கள். அத்துடன் கொடுத்த பணத்தை அறவிட்டுக் கொள்ளும் பணச் சடங்காகவே இது இடம் பெறுகிறது.
சங்க காலத்திலே எங்கு தேடியும் இது சம்மந்தமான எந்த ஒரு ஆதாரத்தையும் காணமுடியவில்லை. தமது வருவாயை அதிகரிக்கும் ஒரு வழியாக ஆரியர்கள் அல்லது பார்ப்பனர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு விழாவாகவே இது இருக்க முடியும்.
பாரதியின் கூற்றும் அதையே சாற்றுகிறது
இன்நாளிலே பொய்மைப் பார்பான்
அவன் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்
பேராசைக்காரனடா பார்ப்பான்
ஆனால் பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
பிள்ளைக்குப் பூநூலாம் என்பான்
நம்மைப் பிச்சுப் பணம் கொடெனத் தின்பான்
என்ற கூற்றின் மூலம் பாரதியும் இந்த பித்தலாட்டங்களை எதிர்த்திருக்கிறான் .
ஆனால் பகுத்தறிவாளர் என்று தங்களைக் கூறுபவர்களில் பலர் கூட இந்த விடயத்திலே கண்மூடிக்கொண்டிருக்கின்றார்கள். காரணம் இதை எதிர்த்தால் தங்கள் வீட்டிலே கூட இவற்றை நடாத்த முடியாது போய் அதன் காரணத்தால் வருகின்ற பண வருவாய் இழக்கப்படும் என்று அச்சப்படுகிறார்கள் போலும்.
மனிதர்களுக்கு பூப்புனித நீராட்டு விழா முடிந்து இப்போது சாமிக்கும் கொண்டாட ஆரம்பித்ததன் மூலம் அறிவியல் ரீதியாக புதிய சாதனை ஒன்றை இந்தத் தமிழன் நிலை நாட்டி இருக்கிறான்.
அண்மையிலே யேர்மனியிலே இருக்கும் ஒரு நண்பருக்குத் தொலை பேசி எடுத்திருந்தேன் அவர் கோவிலுக்கு சென்று விட்டாராம் இரவுக்கு எடுக்கும் படி தகவல் சொன்னார்கள் கோவிலிலே என்ன விசேடம் என அறிந்தபோது எனக்கோ தலை சுற்றியது. அது வேறு ஒன்றுமல்ல கோவிலிலே துர்க்கை அம்மாளுக்கு சாமத்தியச் சடங்காம்.
எத்தனை முதிர் கன்னிகள் சீதன அரக்கனாலும் தோசங்கள் என்று சொல்லப்படுகின்ற மூடநம்பிக்கைகளாலும் திருமணம் நடைபெறாது இருக்கும் போது நீங்கள் ஏராளமாக செலவளித்து சாமிக்கும் சாமத்திய வீடு கொண்டாடுவது நியாயமாகவா படுகிறது?
சந்தனம் மிஞ்சினா தடவெடா …………..என்ற மாதிரித்தான் இந் நிகழ்வு எனக்குப் படுகிறது. இவர்களை யார் தான் திருத்துவது?
தமிழன் செம்மறி ஆட்டு மந்தையைப் போன்றவன் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. ஓன்றை ஒருவர் செய்தால் காரணம் கேட்காது பின்பற்றிவிடுவார்கள். செம்மறிகளும் இப்படித்தான் ஒன்று பாய்ந்து போனால் பின்னாலே வருவதும் என்ன ஏது எனப் பார்க்காது அதையே தானும் பிற்பற்றும்.
இப்பொழுது கனடா நாட்டிலே பெயர்சூட்டும் விழா, வளைகாப்பு விழா, தொட்டிலிடும் விழா என்றெல்லாம் அறிமுகமாகி உள்ளதையும் இங்கு கவனிக்க வேண்டுகிறேன்.
இந்தப் பூப்புனித நீராட்டு விழா வந்தது பற்றி இன்னோர் தகவலும் உண்டு
போர்க் காலத்திலே பெருமளவான போர் வீரர்களும் மக்களும் சாவடையும் காரணத்தினாலே இந்த மக்கள் இழப்பை ஈடுகட்டுவதற்கு இந்த பூப்புனித நீராட்டுவிழா கொண்டாடப்பட்டது. அதாவது திருமணத்திற்கு ஒரு பெண் தயாராகி விட்டாரென்று தெரியப் படுத்தி அதன் மூலம் தனது பெண்ணை திருமண பந்தத்திற்கு உட்படுத்தி இன விருத்தியை அதிகரிக்கின்ற ஒரு வழியாக இதை பார்த்தனர்.
ஆனால் இன்றைய உலகில் இந்த விழா தேவையான ஒன்றா? என்னுடைய மகள் திருமணத்திற்கு தயாராகிவிட்டாள் என்று அறிவிக்க வேண்டிய கட்டாயம் இப்பொழுதும் உள்ளதா?
10, 12 வயதிலேயே இன்றைக்கு சிறுமிகள் பூப்பெய்தி விடுகின்ற பொழுது, பல வருடங்கள் கழித்து நடக்க இருக்கின்று திருமணத்திற்கு எதற்கு முன்னறிவிப்பு? பால்ய விவாகங்கள் இல்லாமல் போய் பல ஆண்டுகள் ஆகி விட்டது என்பது எமது தமிழர்களுக்கு தெரியவில்லையா?
பராயம் அடையாத ஒரு சிறு பெண்ணை சபை நடுவே நிறுத்தி உனக்கு மாதவிடாய் வரும் காலம் தொடங்கியது என்று விழா எடுப்பதும், நீச்சலுடையிலே படம் எடுப்பதும் முற்று முழுதான பெண் அடிமைத் தனத்தின் குறியீடே அன்றி வேறில்லை
பெண் அடிமைத் தனத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்ற அம்மணிகள் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை? அவர்கள் தங்களுக்கு வாய்ப்பானதும் வசதியானதுமான தலைப்புகளை மட்டுமே அவர்கள் தெரிவு செய்து போராடுகிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் பெண்ணுக்கு உடலியல் ரீதியாக நிகழும் ஒரு மாற்றம தான் இது. ஆணுக்கும் இது நிகழ்கின்ற போதிலும் அதனை இப்போது வரை யாரும் கொண்டாடவில்லை பணம் வரும் என்றால் யாராவது அதையும் கொண்டாட முனையலாம்
- சுப்பு தாசன் (யேர்மனி)

Comments
மந்தைகளாகவே தமிழர்கள்.
இப்படி இருக்கையில் எப்படி நம் இனம் உருப்படும்?