வல்லாண்மை பயங்கரவாதி என்கிறான்
துப்பாக்கி வைத்திருப்பவனை,
அணுகுண்டு வைத்திருப்பவன்!
அன்புக்குரிய அண்ணர், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் மேற்கூறிய ~நறுக்கு|, பயங்கரவாதம் என்பதற்குரிய, தற்போதைய வரைவிலக்கணத்தை இவ்வாறு மிகச்சுருக்கமாக ஆனால் மிகத் தெளிவாக விளக்குகின்றது. இன்று ~பயங்கரவாதம்| என்ற சொல்லுக்குள், உலகிலுள்ள பல நீதியான விடுதலைப் போராட்டங்களும் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளதற்கு மேற்குலகம்தான் காரணமாக விளங்குகின்றது. குறிப்பாக அமெரிக்க வல்லரசு, தன்னுடைய பொருளாதார, கேந்திர, மேலாண்மை நலன் கருதி, மக்கள் போராட்டங்கள் பலவற்றிற்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றது. தமிழீழ மக்களின் நீதியான விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக, வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் அமெரிக்கா தொடர்ந்தும் செயல்பட்டு வருவதையும், தமிழீழ மக்களின் இன்றைய அவலங்களுக்குப் பின்னால் உள்;ள மூல காரணம் அமெரிக்காதான் என்பதையும் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்!
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெளிச்ச வீட்டுக் கோபுரத்தைக் கடந்த வாரம் அமெரிக்;கத் தூதுவர் றொபட் பிளேக் திறந்து வைத்து உரையாற்றியிருந்தார். அப்போது அவர் 'மட்டக்களப்பில் நடைபெறவுள்;ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர், சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்;தியங்கும் துணை இராணுவக் குழுவினர் தமது ஆயுதங்களைக் கைவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். 'ஆயுதக்குழுவினர், குறிப்பாக பிள்ளையான் குழுவினர் தங்கள் ஆயுதங்களைக் கீழே வைப்பதற்கு முன்வர வேண்டும். துணை ஆயுதக்குழுவினரின ஆயுதங்களைக் களைய வேண்டும் என்பதே அமெரி;க்காவின் நிலைப்பாடாகும்" என்று அமெரி;க்கத் தூதுவர் றொபட் பிளேக் மேலும் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தத் தமிழ் ஒட்டுக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி, தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளை நடாத்திக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசிற்கு உரிய அழுத்தம் எதையும் கொடுக்க முன்வராத அமெரிக்கத் தூதுவர், பிள்ளையான் குழுவினர் போன்றவர்களுக்கு 'வேண்டுகோள்" விடுத்திருப்பது ஒரு வேடிக்கையான விடயமாகும். இங்கே அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலமாவதை நாம் காண்கின்றோம். தமிழ் ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களைக் களைய வேண்டுமென்றால், ஆயுதங்களை அவர்களுக்கு வழங்கி வருகின்ற சிறிலங்கா அரசிற்குத்தான், அமெரிக்கா தன்னுடைய அழுத்தத்தைப் பிரயோகித்து இருக்;க வேண்டும். அமெரிக்கா, சிறிலங்கா அரசிற்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் வழங்கிய ஆயுதங்களின் ஒரு பகுதிதான், இந்தத் தமிழ் ஒட்டுக் குழுக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்பதும் அமெரி;க்கத் தூதுவருக்கு நன்கே தெரியும். அப்படியிருந்தும், ஒன்றும் அறியாத அப்பாவிபோல், இவர்களுக்கு றொபட் பிளேக் உபதேசம் செய்து கொண்டிருக்கின்றார்.
கடந்த ஆண்டு இறுதியில், அமெரிக்கா, சிறிலங்கா அரசிற்கு நவீன 'ராடர்" பொறி முறையையும், நவீன விசைப் படகுகளையும் வழங்கியியிருந்தது. 'இந்தப் படைக்கல உதவிகளை வழங்கியதை வைத்துக் கொண்டு, அமெரி;க்கா, சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை ஆதரிக்கின்றது என்று எண்ணக்கூடாது" என்று அமெரி;க்கா தனது ~தத்துவம்| ஒன்றையும் தெரிவித்திருந்தது. இந்தப் படைக்கலங்களை உபயோகிப்பதன் மூலம் சிறிலங்கா அரசு அப்பாவி மீனவர்கள் உட்பட, தமிழ்ப் பொதுமக்கள் மீதான தமது அரச பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்கப் போவதில்லை.
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்த்pற்கு எதிராக, சிங்களப் பௌத்தப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக, அமெரிக்கா நீண்ட காலமாகவே செயற்பட்டு வந்துள்ளது. சர்வதேச ரீதியாக, முதன் முதலாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் அமெரி;க்கா சேர்த்துக்கொண்டது. இதன் மூலம், எங்கோ தூர இருக்கும் இலங்கைத் தீவின் பிரச்சனைக்குள் அமெரிக்கா நாசூக்காக உள்நுழைந்து கொண்டது. திருகோணமலைத் துறைமுகத் தளம், எண்ணெய் வளம் என்பனவற்றோடு, தற்போது எழுச்சி பெற்ற வருகின்ற சீனாவை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய ஒரு தளமாகவும், இலங்கையை எதிர்காலத்தில் தாம் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் அமெரிக்காவுக்கு உண்டு. இதற்கு அப்பால், பிராந்திய வல்லரசான இந்தியா மீதும் ஒரு கண்காணிப்பை அமெரி;க்கா மேற்கொள்வதற்கும், இலங்கைத் தீவு ஒரு பொருத்தமான இடமாகும்.
இவற்றையெல்லாம் செய்வதற்கு, இலங்கைத் தீவில் பிரச்சனை ஒன்று இருந்தாக வேண்டும். இலங்கைத்தீவில், இனப்பிரச்சனை தொடர்;ந்து இருந்தால்தான், அமெரிக்கா இலங்கைக்குள் மெதுவாக உள் நுழைந்து காலூன்ற முடியும். இதற்கு ஏதுவாகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தனது நாட்டில் அமெரிக்கா முதலில் தடை செய்தது.
பின்னர் அமெரி;க்கா செய்த விடயங்களைச் சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்ரெட் (துநுகுகுசுநுலு டுருNளுவுநுயுனு) என்பவர்; 41 பக்;கங்களைக் கொண்ட துணை ஆய்வுக் கட்டுரையொன்றை கடந்த ஆண்டு எழுதியிருந்தார். "வுhந ருnவைநன ளுவயவநள’ சுழடந in ளுசுஐடுயுNமுயு’ளு Pநயஉந Pசழஉநளள- 2002 - 2006" என்பது இந்த துணை ஆய்வுக் கட்டுரையின் தலைப்பாகும். இந்த ஆய்வை ஆழமாகப் பார்க்;கின்றபோது, அமெரி;க்கா தமிழீழ மக்களின் நலன்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசின் பேரினவாதக் கொள்கைகளுக்கு ஆதரவாக எவ்வாறு திட்டமிட்டு;ச் செயற்பட்டு வந்திருக்கின்றது என்பது நன்கு புரியும். சுருக்கமாக சில விடயங்களை மட்டும்; கவனிப்போம்.
ஜெவ்ரி லன்ஸ்ரெட் தனது ஆய்வின் ஆரம்பத்தில் ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக் காட்டுகின்றார். அதாவது கடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் இலங்கையில் ஆரம்பமாகும் வரை, அமெரிக்கா, சிறிலங்காவிற்கு எந்தவிதமான இராணுவ நிதி உதவிகளையும் செய்;யவில்லை என்று ஜெவ்ரி குறிப்பிடுகின்றார். (குழசநபைn அடைவையசல கiயெnஉiபெ கரனெiபெ கழச ளுசi டுயமெய in 2002 யனெ 2003 றயள ணநசழ) ஆனால் 2004 ஆம் ஆண்டில் மட்டும் அமெரி;க்கா, 2.5 மில்லியன் அமெரி;க்க டொலர்களைச் சிறிலங்காவிற்கு, இராணுவ உதவிகளுக்காக வழங்கியதாகவும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த உதவிகள் வித்தியாசமான விகிதங்களில் கூடிக் குறைந்து வழங்கப்பட்டதாகவும் ஜெவ்ரி தெரிவித்துள்ளார்.
சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முதல், சிறிலங்காவிற்கு அமெரிக்காவின் உயர் இராணுவ அதிகாரிகள் விஜயம் செய்தது மிக அபூர்வமாக இருந்தது என்றும், ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தின் போதுதான், மிக உயர் இராணுவ அதிகாரிகள் சிறிலங்காவிற்கு விஜயம் செய்தார்கள் என்றும் ஜெவ்ரி லன்ஸ்ரெட் தெரிவிக்கின்றார். எடுத்துக் காட்டாக, 2004 ஆம் ஆண்டில் மட்டும், பன்னிரெண்டு தடவைகள், அமெரிக்காவின் மிக உயர் இராணுவ அதிகாரிகள் விஜயம் செய்துள்ளார்கள். இதேபோல், சமாதானக் காலத்தின்போது, சிறிலங்காவின் இராணுவ அதிகாரிகளுக்கு, அமெரிக்கா பயிற்சி வழங்கியதாகவும், இராணுவக் கல்வி வகுப்புக்களை எடுத்ததாகவும், ஜெவ்ரி லன்ஸ்ரெட் தனது துணை ஆய்வுக்; கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
இங்கே ஒரு முக்கிய கேள்வி எழுகின்றது!
முன்னர் போர்க்காலத்தில் சிறிலங்காவிற்கு இராணுவ உதவிகளை வழங்காத அமெரி;க்கா, பின்னர் சமாதானப் பேச்சு வார்த்தைக் காலத்தில் மட்டும் ஏன் இராணுவ உதவிகளை வழங்கியது?
ஏனென்றால்; சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகிய வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசும் இராணுவச் சமபல நிலையில் இருந்தார்கள். இந்தச் சமபல நிலையைக் குலைத்து, தமிழ் மக்கள் தரப்பினரைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளைத்தான் அமெரி;க்கா மேற்கொண்டது. இது தமிழீழ மக்களுக்கு அமெரி;க்கா இழைத்த அநீதியாகும்.
இந்தச் செய்கை மூலம், சமாதானப் பேச்சு வார்த்தைகளைச் சரியான பாதையில் செல்ல விடாமல் தடுத்து, பேச்சு வார்த்தைகளைச் சாமர்த்தியமாகக் குழப்புகி;ன்ற கைங்கரியத்தை அமெரி;க்கா செய்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை ஓரம் கட்டுகின்ற செயற்பாடுகளில் அமெரி;க்கா மும்முரமாக இறங்கியிருந்தது. இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச அரசியலி;ல் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கும் அமெரி;க்கா முயன்று வந்தது. எடுத்துக்காட்டாக, வொசிங்டன் மகாநாட்டைக் கூறலாம். அமெரி;க்காவின் தலைமையில் வொசிங்டனில், உதவி வழங்கும் நாடுகளின் சர்வதேச மகாநாடு ஒன்று 2003 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 14 ஆம், 15 ஆம் திகதிகளில் ஒழுங்கு செய்;யப்பட்டிருந்தது. இந்த உதவி வழங்கும் மகாநாட்டில் கலந்து கொள்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளை ஓரம் கட்ட முனைந்ததன் ஊடாகத் தமிழீழ மக்கள் ஓரம் கட்டப்பட்டார்கள். இந்தச் செய்கையைக் கண்டித்து, தமிழீழத் தேசியத் தலைமை அன்று ஓர் அறிக்iகையை வெளியிட்டது. 'சமாதானப் பாதையிலும், புனர் நிர்மாணக் குறிக்கோளிலும் எமக்குள்ள நம்பிக்கையை இது பாதிக்கும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எமக்கு கவலையையும், ஏமாற்றத்தையும் தருகின்றது" என்று அதில் குறிப்பி;டப்பட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்ய வேண்டும் என்பதற்காக அமெரிக்கா தொடர்ந்து பலவிதமான மென் அழுத்தங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது மேற்கொண்டு வந்ததமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்ரெட், இலங்கைப் பிரச்சனையில், அமெரிக்கா கொண்டுள்ள ஷஷநோக்கு" குறித்துக் கீழ் வருமாறு குறிப்பிடுக்pன்றார்.
'இலங்கைப் பிரச்சனையில், ஒரு பயங்கரவாத இயக்கம் தன்னுடைய இலட்சியத்தைப் பயங்கரவாதம் மூலமாக அடையக் கூடாது என்பதே அமெரிக்காவின் நோக்கமாகும்!"
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று இலங்கையிலேயே பயங்கரவாத இயக்கமாகக் கருதப்படவில்லை. எங்கோ தொலைவில் ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கின்ற அமெரிக்கா, ஒரு விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கம் என்று ~கற்பித்துக் கொண்டு| தன்னுடைய 'விசேடமான கறுப்புக் கண்ணாடி ஊடாக" அதனைப் பார்த்தால், அது யாருடைய பிழை?
தவிரவும், அமெரிக்கா தன்னுடைய சுதந்திரப் போராட்டத்தின்போது, பிரித்தானியாவிடம் சமாதானமாகப் பேசித் தீர்த்து, தன்னுடைய சுதந்திரத்தைப் பெற்றிருக்கலாமே? ஏன் அமெரிக்கா பிரித்தானியாவை எதிர்த்துப் போரிட்டது? ஏன் அமெரிக்கா வன்முறையைக் கையாண்டது? அன்றைய பிரித்தானியாவின் பார்வையில், அமெரிக்காவின் ஜோர்ஜ் வொசிங்டன் ஒரு பயங்கரவாதியல்லவா? பி;ன்னாளில் தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டெலா போல! இன்னாளில் எமது தமிழீழத்தின் வேலுப்பிள்ளை பிரபாகரன் போல!
இன்று நீதியான விடுதலைப் போராட்டங்களுக்குப் ~பயங்கரவாத| முத்திரை குத்துகின்ற அமெரிக்காதான், உண்மையில் உலகப் பயங்கரவாதியாக விளங்கி வருகின்றது.
கடந்த இருநூறு ஆண்டுகளில் அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்கள், போர் நடவடிக்கைகள், தேர்தல் மூலம் தெரிவு செய்;யப்பட்ட ஜனநாயக அரசுகளைக் கவிழ்த்த செயல்கள் ஆகிய அராஜகங்களோ கணக்கில் அடங்காதவை. மக்களால் தேரந்;தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு எதிராக, அமெரிக்காவினால் ஊக்குவிக்கப்பட்ட வன்முறைக் குழுக்களின் எண்;ணிக்கையும் சொல்லி மாளாது!
சர்வதேச பயங்கரவாதத்திற்காக, உலக நீதிமன்றத்தால் குற்;றம் சாட்டப்பட்ட ஒரே ஒரு நாடாக அமெரிக்கா திகழ்கின்றது.
இருபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் நிக்கராகுவாவின் மீது அமெரிக்கா தொடர்ந்த போரின் காரணமாக, பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நிக்கராகுவா திருப்பித் தாக்காமல், - அல்லது அமெரிக்கா சொல்கிற 'பயங்கரவாத நடவடிக்கைகளில்" இறங்காமல் - உலக நீதிமன்றத்தில் அமெரிக்காவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்;தது. உலக நீதிமன்றம் நிக்கராகுவாவிக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கியது. 'அமெரிக்கா ஏற்படுத்திய அழிவுகளுக்கு, அமெரிக்கா இழப்பீடுகளை வழங்க வேண்டும்" என்றும், 'அமெரிக்காவின் சட்ட விரோதமான இராணுவ நடவடிக்கைகள் உடனே நிறுத்தப் படவேண்டும்" என்றும், உலக நீதிமன்றம் ஆணையிட்டது. உலகநீதி மன்றத்தின் ஆணைக்கு, அமெரிக்கா இணங்கிச் செயல்பட்டதா? இல்லை! இல்லவே இல்லை!! உலக நீதிமன்றத்தின் தீர்ப்பை, அமெரிக்கா தூக்கி எறிந்தது. மேலும் பாரிய தாக்குதல்களைச் செய்து அழிவை அதிகரித்தது. பாவம் நிக்கராகுவா, தனது பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றது. ஐக்கிய நாடுகள் சபையும், 'சர்வதேசச் சட்டத்தை, அமெரிக்கா மதிக்க வேண்டும்|| என்றும் தீர்மானம் இட்டது. ஆனால் அமெரிக்காவோ தனது 'வீட்டோ" அதிகாரத்தின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தையே இரத்துச் செய்தது.
ஓசாமா பின்லாடனை அன்றைய ஆப்கான் அரசு தன்னிடம் ஒப்படைக்காததால்தான், அமெரி;க்கா ஆப்கானிஸ்தான் மீது யுத்தத்தை ஆரம்பித்தது. ஆனால் 1990 களில், ஹெய்ட்டியில் சுமார் ஐயாயிரம் மக்களைக் கொன்று குவித்த பயங்கரவாதியான, ~இம்மானுவேல் கொன்ஸ்டன்டைன்| என்பவன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தான். அவனைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு ஹெயிட்டி அரசு பதினேழு ஆண்டுகளாக அமெரிக்காவை கோரி வருகி;ன்றது. ஆனால் இதுவரை அமெரிக்கா அந்தப் பயங்கரவாதியை ஒப்படைக்க மறுத்து வருகின்றது. இதேபோல், பயங்கரவாதச் செயல்களைப் புரிந்த ~ஜோன் ஹோல்| என்ற அமெரிக்கன் ஒருவனைத் தங்களிடம் ஒப்;படைக்கும்படி, கடந்த இருபத்தியொரு ஆண்டுகளாக, கொஸ்டரீகா அரசு அமெரிக்காவை வேண்டி வருகின்றது. அமெரிக்கா அசைந்து கொடுப்பதாக இல்லை.
டட்ச் காடுகளில் ஒளிந்திருந்த வியட்கொங் போராளிகளைக் கண்டு பிடிப்பதற்காக, மரங்களிலிருக்கும் இலைகளை உதிர்க்கும் 'ஏஜென்ட் ஒரேஞ்ச்சை" அமெரிக்கா பயன்படுத்தியபோது, ஆயிரக்கணக்கான காட்டு மிருகங்கள் இறந்தன. புற்றுநோயை உண்டாக்கும் 'டயாக்சின்|| என்ற இரசாயனம் ஆறுகளில் கலக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் கருச்சிதைவுகள் அதிகரித்தன. உருச்சிதைந்த குழந்தைகள் பிறந்தன. அமெரிக்காவின் 'நேபாம்" குண்டுகள் ஏற்படுத்திய அழிவுகள், இன்னுமொரு பயங்கர வரலாறாகும்!
1953 இல் ஈரானில் மக்கள் ஆதரவுடன் ஆட்சியமைத்த பிரதமர் மொசெடோவை அமெரி;;க்கா கவிழ்த்தது. காரணம் ஈரானில் உள்;ள எண்ணெய் வயல்களை, பிரிட்டிஷ் நிறுவனங்களிடமிருந்து, ஈரானின் நாட்டுடைமையாகப் பிரதமர் மொசெடோ மாற்றியதுதான்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, அங்கே மன்னர்; ஆட்சியை அமெரிக்கா நிறுவியது.
இது மட்டுமல்லாது, கதேமாலா அரசு கலைப்பு, சிலியின் சல்வடோர் அலண்டே, கொங்கோவின் பட்ரீஸ் லுமும்பா என்று இந்தப் பட்டியல் இன்று வரை நீண்டு கொண்டே போகின்றது.
'ஜனநாயகம்" என்றும் 'கருத்துச் சுதந்திரம்" என்றும் சொல்லி வருகின்ற அமெரிக்காவில், கம்யூனிசச் சிந்தனைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் தடை உண்டு என்பதை நாம் அறிவோம். ஏனென்றால், அமெரிக்காவின் ஆட்சி பீடத்திற்குக் கம்யூனிஸ்ட்களையும், கம்யூனிஸ்ட் கருத்துக்களையும் பிடிக்காது. உதாரணத்திற்குக்கு கியூபா நாட்டை எடுத்துக் கொள்ளலாம். கியூபா, அமெரிக்காவை அச்சுறுத்தக் கூடிய நிலையில் உள்;ள நாடல்ல! ஆயினும் கியூபாவின் சித்தாந்தம், அமெரிக்;காவை அச்சுறுத்தக்கூடும் என்று எண்ணி, அமெரி;க்கா தானே அஞ்சுகின்றது. அதன் விளைவாக, அமெரி;க்கா கியூபாவிற்கு எதிரான செயற்பாடுகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. கியூபாவின் அதிபரான பிடல் கஸ்ரோவைக் கொலை செய்வதற்கு, அமெரி;க்கா உளவு ஸ்தாபனம் மேற்கொண்ட தொடர் கொலை முயற்சிகள், இன்று உலகறிந்த விடயங்களாகும்!
'விஞ்ஞான ஆராய்ச்சிக்காக" என்று கூறிக்கொண்டு அரிய திமிங்கிலங்களை யப்பான் இன்று கடல் வேட்டையாடிக் கொன்று வருகின்றது. இந்தச் செயலை, அவுஸ்திரேலியா உட்பட பல உலக நாடுகளின் மக்கள் கண்டித்து வருகின்றார்கள். இதில் முரண்நகையான விடயம் என்னவென்றால், இதே யப்பானின் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைத் தன்னுடைய ~அணுகுண்டு விஞ்ஞானப் பரிசோதனைக்காக| அமெரிக்கா கொன்றழித்துதான்! இன்றும் அணுக் கதிரின் பாரிய பக்;க விளைவுகளை யப்;பானிய மக்கள் அனுபவித்து வருகின்றார்கள்.
~உலக அமைதிக்கு இன்று யாரால் ஆபத்து?| - என்று ஒரு கருத்துக்; கணிப்பு 2006 ஆம் ஆண்டு, நடாத்தப்பட்டது. இது மேற்குலகம் நடாத்திய கருத்துக் கணிப்பாகும். உலக அமைதிக்கு பின்லாடனை விட, ஜோர்ஜ் பு~;~hல்தான் ஆபத்து என்று பெரும்பான்மையான பொது மக்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த மக்கள் கணிப்பு எதனைக் காட்டுகின்றது என்றால், பெரும்பான்மையான பொது மக்கள் பின்லாடனைவிட அமெரிக்காவின் ஜோர்ஜ் பு~;i~க் குறித்துதான் அச்சமுறுகின்றார்கள் என்பதைத்தான்!
இலங்கையில் பிரச்சனை இருந்தால்தான் அமெரிக்;கா இலகுவாக உள் நுழைய முடியும் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். இதனூடாக உள்நுழைந்து, ஓரளவு காலூன்றி விட்ட அமெரிக்கா, இனி இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் தன்னுடைய பொருளாதார, கேந்திர நலன்களைத் திடப்படுத்திக் கொள்ளத் திட்டம் போடுகின்றது. அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, இலங்கைத் தீவில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று அமெரிக்கா இன்று விரும்புகிறதே தவிர, தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வு வரவேண்டும் என்பதில் அமெரிக்காவிற்கு அக்கறையில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தி, ஓரம் கட்டி விட்டு, தமிழ் மக்கள் மீது, சிங்களப் பேரினவாதத்தின் அரைகுறைத் திட்டமொன்றைத் திணித்துவி;டலாம் என்று அமெரிக்கா தப்புக் கணக்கு போடுகின்றது.
சிறிலங்கா அரசின் தன்னிச்சையான யுத்த நிறுத்த ஒப்பந்த விலகலுக்குப் பின்னால், அமெரிக்காவின் மௌனமான அனுசரணை இருக்கக் கூடும் என்றே நாம் சந்தேகிக்கின்றோம். சிறிலங்காவிற்கு இராணுவ உதவிகளை அமெரிக்கா தரப்போவதில்லை என்பதும் வெறும் கண்துடைப்பு நாடகமே!
இப்படியான காலகட்டத்தின் ஊடாகத்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தேசியத் தலைமை நகர்த்திக் கொண்டு செல்ல இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளை ஓரம் கட்டவோ, வலுவிழக்கச் செய்யவோ முடியாது என்கின்ற நிதர்சனத்தை எமது தேசியத் தலைவர் உலகிற்கு உணர்த்துவார்.
இந்த வேளையில் புலம் பெயர் வாழ் தமிழீழ மக்கள் மேற்கொள்;ள வேண்டிய பரப்புரைப் பணி மகத்தானதாகும்! அமெரிக்காவில் அரசு மாறலாம், அதனுடைய ~பயங்கரவாதப் பார்வையிலும்|, வெளிநாட்டுக் கொள்கைகளிலும் 'சிறிது" மாற்றம் வரலாம் என்பதற்கு அப்பால் ஒரு முக்க்pய விடயம் உண்டு;. எதிர்காலத்தில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்படும் என்றுதான் நாம் கருதுகின்றோம்.
இப்போதைய சூழல் இன்று விரக்தி தருவதுபோல், குழப்பமான நிலை போல் புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களுக்குத் தோற்றம் தரக் கூடும். ஆனால் இதனூடே, தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தையும், அவர்களது சுயநிர்ணய உரிமைக்கான தகுதிளையும், நாம் உரிய முறையில் பரப்புரை செய்து, நாம் வாழுகின்ற நாடுகளினதும், இந்த நாடுகளின் வெகுசன ஆதரவையும் பெறுவதற்கான முயற்சிகளில் முழு மனதோடு, துணிந்து நின்று ஈடுபட வேண்டும்.
அங்கே இயக்கம் என்;ன செய்கின்றது என்று கேட்பதை விடுத்து, இங்கே நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்று எம்மை நாமே கேட்டுக் கொண்டால், விரைவில் விடிவு வரும்!
சபேசன் (அவுஸ்திரேலியா)-

Comments