போரில் வென்றவர்கள் புதிய எல்லைகளை வரையும் உரிமையைப் பெறுகிறார்கள்

பல மாதங்களாகத் தள்ளிப்போட்டு வந்த கொசோவோவின் ஒருதலைப்பட்ச சுதந்திரப் பிரகடனம் ஒருவாறு அறிவித்தாகி விட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் நாள் கொசோவோ நாடாளுமன்றம் கூடியபோது அந்த நாட்டின் தலைமை அமைச்சர் ஹாஷிம் தாசி (ர்யளாiஅ வுhயஉi) சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தார். அந்தப் பிரகடனம் மிகவும் முக்கியமானது.

'கொசோவோவை நாங்கள் ஒரு விடுதலை பெற்ற சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்துகிறோம். கொசோவோவில் வாழும் எல்லா சமூகத்தினரதும் உரிமைகள் சுதந்திரங்கள் ஆகியவற்றைப் பேணிப்பாதுகாக்கவும் அவர்கள் ஆட்சியில் பங்கு கொள்ளும் உரிமையையும் உறுதி செய்கிறோம். சிறுபான்மை மக்களது உரிமைகள் பற்றிக் குறிப்பிடும் திட்டத்தின் இணைப்பு 12 இனை முற்றாகப் பின்பற்றுவோம் என உறுதி கூறுகிறோம்..."

சேர்பியரது பெரும்பான்மை அரசின் அடக்குமுறை, இனச் சுத்திகரிப்பு போன்றவற்றில் இருந்து விடுபட்ட கொசோவோ தனது நாட்டில் இருக்கும் ஏனைய சிறுபான்மை மக்களது உரிமைகள், சுதந்திரங்களை உறுதி செய்ய முன்வந்ததில் வியப்பில்லை. அப்படி உறுதிசெய்ய முன்வராவிட்டால் கொடுங்கோல் செலுத்திய சேர்பியரது ஆட்சிக்கும் கொசோவினரது ஆட்சிக்கும் வேறுபாடு இல்லாது போய்விடும்.

இருபது இலக்கம் மக்கள் வாழும் கொசோவோவாவில் 120,000 ஆயிரம் சேர்பியர்கள் கொசோவோவின் வட பகுதியில் வாழ்கிறார்கள். இவர்களைப் பிரதிநித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்ட போது அவையில் இருக்கவில்லை. நாடாளுமன்ற அமர்வை அவர்கள் புறக்கணித்து விட்டார்கள்.

கொசோவோவின் சுகப்பேற்றுக்கு உதவியாக ஐரோப்பிய ஒன்றியம் காவல்துறை, நீதித்துறை மற்றும் நிருவாகத்துறையைச் சேர்ந்த 2,000 அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது. நேட்டோ படைகள் அங்கு அமைதியைத் தொடர்ந்து நிலைநாட்டும்.

கோசோவோவின் தலைநகர் பிறிஸ்ரினாவில் (Pசளைவiயெ) சுதந்திர நாளை மக்கள் அல்பேனிய, அமெரிக்க, பிரித்தானிய தேசியக் கொடிகளை அசைத்து ஆடிப் பாடிக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதே நேரத்தில் சேர்பியாவின் தலைநகர் பெல்கிறேட்டில் கொசோவோவின் சுதந்திரத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது (வியாழக்கிழமை) பெல்கிறேட்டில் அமெரிக்காவிற்கு எதிரான பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் தூதரகத்துக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் யூகோசிலோவிக்கிய குடியரசு கொசோவோ நாட்டோடு சேர்த்து இப்போது எட்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. சேர்பியா, அல்பேர்னியா, குரோசியா, மொன்ரநீக்றோ, ஸ்லோவேனியா, பொஸ்னியா - ஹேர்ஸ்கொவினா, மசிடோனியா மற்றும் கொசோவோ ஆகியவையே அந்த எட்டு நாடுகளாகும்.

கொசோவோவின் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனம் உலகம் முழுதும் எதிர்வலைகளையும் எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

சேர்பியா, ரசியா போன்ற நாடுகள் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்கின்றன. கொசோவோவை 'பொய்யான அரசு" (கயடளந ளவயவந) என வருணித்துள்ளன.

அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரித்தானியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் புதிய நாட்டை அங்கீகரித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் ஸ்பெயின், கிறீஸ், உரோமனேயா, சைப்ரஸ், ஸ்லோவேனியா, சைப்ரஸ் நீங்கலாக ஏனைய நாடுகள் கொசோவோவை அங்கீகரித்துள்ளன.

கொசோவோவின் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரித்ததின் மூலம் அமெரிக்கா ஒரு வல்லரசுக்கு உரிய தனது அரசியல் மற்றும் படை பலத்தை எண்பி;த்துள்ளது. உலகில் இன்று அமெரிக்கா வைத்ததுதான் சட்டம். அதை யாரும் இலேசில் மீறிவிட முடியாது.

இன்று கொசோவோவின் தலைமை அமைச்சராக இருப்பவர் முன்னாள் கொசோவோ விடுதலைப் படையின் (முழளழஎழ டுiடிநசயவழைn யுசஅல) தளபதி. கொசோவோ விடுதலைப் படை தொடக்கத்தில் அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கம் என முத்திரை குத்தப்பட்ட இயக்கம். ஹாஷிம் தாசி பயங்கரவாதி எனத் தேடப்பட்டவர். ஆனால் 1997 இல் அமெரிக்கா கொசோவோ விடுதலைப் படையை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது?.

அமெரிக்கா ஒரு விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கம் என அழைக்கும். பிறிதொரு காலத்தில் அதனை விடுதலை இயக்கம் என அழைக்கும். எல்லாம் அந்த நாட்டின் அரசியல் - புவியியல் நலன்களைப் பொறுத்தது. பயங்கரவாதி யார், விடுதலைப் போராளி யார் என்பதையும் அமெரிக்காதான் தீர்மானிக்கிறது. ஏன் ஜக்கிய நாடுகள் அவைகூட அமெரிக்காவிற்கு அடக்கம் என்பதை ஈராக் மீது ஒருதலைப் பட்சமாக - ஐக்கிய நாடுகள் அவையின் அனுமதியின்றி - படையெடுத்த போது காண முடிந்தது.

உலகில் எத்தனையோ நாடுகளில் எண்ணிக்கையில் குறைவான தேசிய இனங்கள் இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு, அடக்குமுறை போன்றவற்றுக்கு எதிராகப் போராடுகின்றன. இருந்தும் ஒரு முஸ்லிம் நாடான கொசோவோ மீது அமெரிக்காவிற்கு மட்டும் ஏன் இந்த அதீத அக்கறை? சோழியன் குடுமி சும்மாவா ஆடியது?

கொசோவோ அல்பேர்னிய முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்டத்தைப் பயன்படுத்தி அல் கொய்தா சக்திகள் ஐரோப்பாவில் நுழைந்துவிடக் கூடாது என்பது ஒரு காரணம். மற்றது அய்ரோப்பாவில் அமெரிக்கா தனது இரண்டு காலையும் சிக்காராக ஊன்ற ஒரு வாய்ப்பு.

ஐக்கிய நாடுகளின் 1999 ஆம் ஆண்டு எண் 1,244 தீர்மானத்தின் படி கொசோவோ சேர்பிய நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட ஜக்கிய நாடுகளின் பாதுகாப்பில் உள்ள நாடு. ஆனால் அதனை மீறி அமெரிக்காவின் ஆதரவோடு கொசோவோ தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தைச் செய்துள்ளது. அதனை ஜக்கிய நாடுகள் அவை கண்டுகொள்ளவில்லை.

சேர்பியாவின் ஒரே நட்பு நாடான ரசியா கூட கொசோவோவின் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்துக்கு எதிராக அறிக்கை விட்டு விட்டு அடங்கிப் போய்விட்டது. ஸ்டாலின் காலத்து ரசியா என்றால் கதை வேறு. இன்றுள்ள ரசியா வல்லரசு என்ற பட்டத்தை இழந்துவிட்ட நாடு. எதிர்த்துக் குரல் கொடுக்கத்தான் முடியுமே தவிர அமெரிக்காவோடு மோத முடியாது.

கொசோவோவின் ஒரு தலைப்பட்ச சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்கும் நாடுகளைப் பார்த்தால் அவை ஒவ்வொன்றுக்கும் முதுகில் புண் இருக்கும் உண்மை புலப்படும். ரசியா, ஸ்பெயின், இந்தியா, சீனா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் சுதந்திரம் கேட்டு சிறுபான்மை தேசிய இனங்கள் போராடி வருகின்றன. அந்த நாடுகளுக்கு முதுகில் புண் இருப்பதால் கொசோவோவை அங்கீகரிக்க மறுக்கின்றன.

திபெத் நாடு அகிம்சை வழியில் சீனாவின் மேலாண்மை மற்றும் அடக்குமுறைக்கு எதிராகக் கடந்த 58 ஆண்டுகளாக தலாய் லாமா தலைமையில் போராடி வருகிறது. சீனாவின் அடக்குமுறைக்கு ஒரு இலக்கம் மக்கள் பலியாகியுள்ளார்கள். திபெத் மக்களது நாகரிகம், பண்பாடு, மொழி சிதைக்கப்பட்டுள்ளன. ஆனால் தலாய் லாமாவுக்கு அமெரிக்கா மாலை மரியாதை செய்கிறதேயொழியத் திபெத்தை சீனாவிடம் இருந்து மீட்டுக்கொடுப்பது பற்றிப் பேச்சே இல்லை. என்ன காரணம்? திபேத்தை விடுவிப்பதில் அமெரிக்காவிற்கு எந்தப் அரசியல் - புவியியல் நன்மையும் இல்லை. மற்றது சீனாவும் இன்று ஒரு உலக சண்டியன் என்ற இடத்தில் இருக்கிறது. அந்த நாட்டோடு மோத அமெரிக்கா அணியமாய் இல்லை.

கொசோவோவின் ஒரு தலைப்பட்ச சுதந்திரப் பிரகடனத்தை எதிர்த்து முதலில் அறிக்கை விட்ட நாடுகளில் ஸ்ரீலங்காவும் ஒன்று.

ஸ்ரீலங்கா தமிழ்மக்களுக்கு எதிரான படையெடுப்பை நியாயப்படுத்த - இனப் படுகொலையை நியாயப்படுத்த - தனக்குள்ள இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைக் காரணம் காட்டுகிறது. அதாவது ஒரு சுதந்திர நாட்டுக்கு தனது இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற எதையும் செய்ய உரிமை இருப்பதாக வாதாடுகிறது.

ஆனால் இந்தக் கோட்பாட்டை சேர்பியாவைப் பொறுத்தளவில் அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. சேர்பியாவின் ஒரு பகுதியை ஜக்கிய நாடுகளது தீர்மானத்தை மீறி கொசோவோ மக்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டது.

கொசோவோ மக்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுத்த அமெரிக்கா - அந்த நாட்டின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய கொசோவோ விடுதலைப் படையை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து எடுத்த அமெரிக்கா - அந்தப் படையின் தளபதியாக இருந்தவரை பயங்கரவாதி என முத்திரை குத்தியதை நீக்கிய அமெரிக்கா - தமிழீழத்தையும் பிரித்துக் கொடுக்க முன்வரலாம்தானே? எனப் பலர் கேட்கிறார்கள்.

இந்தக் கேள்வி நியாயமானது. ஆனால் இன்றைய உலக ஒழுங்கில் நீதி, நியாயத்துக்கு .இடமில்லை. ஆயுத பலம் இருக்கிறதா? ஆள், ஆயுத பலம் உள்ள நாடு வைத்ததுதான் இன்று சட்டம்! வல்லான் வெட்டியதே வாய்க்கால்!

சேர்பியா - கொசோவோ ஒரு புறம். மறுபுறம் ஸ்ரீலங்கா - தமிழீழம். இவை இரண்டுக்கும் இடையில் நிறைய ஒற்றுமை உண்டு.


சேர்பியா 102,350 சகிமீ, 10.8 மில்லியன், கிறித்தவர் 65 %

கொசோவோ 10,912 சகிமீ, 2 மில்லியன் , முஸ்லிம் 90 % போராட்ட காலம் 10 ஆண்டுகள் , உயிரிழப்பு 10,000


ஸ்ரீலங்கா 46,730 சகிமீ , 17 மில்லியன் , பவுத்தர் 70 %


தமிழீழம் 18,880 சகிமீ, 3.2 மில்லியன், இந்து 85 %,
போராட்ட காலம் 25 ஆண்டுகள், உயிரிழப்பு 70,000


மேற்கூறப்பட்ட ஒற்றுமைகளைவிட ஒரு பலத்த வேறுபாடு கொசோவோ தமிழீழம் இரண்டுக்கும் இடையில் இருக்கிறது. கொசோவோ அய்ரோப்பாவின் கொல்லைப் புறத்தில் இருக்கிறது. ஸ்ரீலங்கா தெற்காசியாவில் இருக்கிறது.

தெற்காசியாவின் பிரதேச வல்லரசு இந்தியா என்பது அமெரிக்கா உட்பட எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக் கோட்பாடு.

ஒரு நாடு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப் படவேண்டும் என்றால் அந்த நாட்டுக்கு மூன்று தகுதிகள் இருக்க வேண்டும் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சு கூறுகிறது.

“India’s Ministry of External Affairs has issued a statement noting that as Kosovo does not meet all three conditions for recognition, namely “a defined territory, a duly constituted government in charge which is accepted by the people and which has effective control over an area of governance,” India is not offering recognition and would prefer the issue to be “resolved through peaceful means and through consultation and dialogue.”

'கொசோவோ அங்கீகாரத்துக்கு வேண்டிய மூன்று நிபந்தனைகளை நிறைவு செய்யத் தவறியுள்ளது. அதாவது 'வரையறை செய்யப்பட்ட நிலப்பரப்பு, அந்த நிலப்பரப்பின் மீது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசின் ஆட்சி, ஆட்சி செய்யப்படும் நிலப்பரப்பின் மீது செயற்திறனுள்ள (அதிகார) கட்டுப்பாடு" ஆகியன. எனவே இந்தியா அங்கீகாரம் அளிக்க முன்வராது. அதே நேரம் இந்தச் சிக்கல் அமைதி வழியில் எல்லோரும் கலந்து பேசி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என விரும்புகிறது.

எனவே கொசோவோ சுதந்திரத்துக்கு இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை தமிழீழம் நிறைவேறினால் இந்தியா தமிழீழத்தை அங்கீகரிக்கக் கூடும்.

போராட்டக் களத்தில் வெற்றி ஈட்டுவதன் மூலமே இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை நிறைவு செய்யலாம்.

It is useful to remember the axiom of statehood that “war is what dictates borders and winners get the right to draw the new lines.”



அரசுரிமைக்கு ஒரு வெளிப்படையான சித்தாந்தம் இருப்பதை நினைவில் வைத்துக்கொள்வது பயனுடையது. 'போரே ஒரு நாட்டின் எல்லைகளை நிருணயிக்கிறது. போரில் வென்றவர்கள் புதிய எல்லைகளை வரையும் உரிமையைப் பெறுகிறார்கள்!"

-நக்கீரன்-

Comments