சிறிலங்காவின் இராணுவ அடக்குமுறைக்கு ஊக்கமளிக்கும் கனடிய, இத்தாலிய அரசுகள்: சுவிஸ் தமிழர் பேரவை சாடல்
கனடா, இத்தாலி நாடுகளின் செயற்பாடானது சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ அடக்குமுறைக்கு ஊக்கம் கொடுக்கும் செயல் என்று சுவிஸ் தமிழர் பேரவை சாடியுள்ளது.
இது தொடர்பில் சுவிஸ் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உலகத் தமிழர் இயக்கத்தினை தடைசெய்தும், 33 தமிழ் இளைஞர்களை கைது செய்தும் முறையே கனடா மற்றும் இத்தாலி நாடுகள், தமிழ்ச் சமூகத்தின் பார்வையை உலகிற்கு குறைத்து மதிப்பிட்டுக் காட்டியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம், சிறுபான்மையினரான தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை உலகின் பல மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியும், கனடா மற்றும் இத்தாலியின் செயல்கள் இலங்கையை ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்துள்ளதாய் காண்பிக்கிறது.
இதனால், சிறிலங்கா அரசாங்கம் ஊக்கம் பெற்று, மேலும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையிலும், இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள அங்கீகாரம் அளிக்கப்பட்டதாய் எடுத்துக்கொள்ளும் நிலையை உருவாக்கியிருக்கிறது.
தீவிரவாதத்தின் மூலம் எந்த வகையிலும் கொல்லப்படுவதையும், வெறுக்கப்படுவதையும் யாரும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால், அரசாங்கத்தின் சமூக, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளை தட்டிக்கேட்க ஆயுதம் ஏந்திப் போராடுகின்ற புரட்சியாளர்கள், தேசிய விடுதலைப் போராளிகளை வரலாறு காட்டியுள்ளது.
இந்த வகையில் அமெரிக்கா, அயர்லாந்து, சோவியத் ரசியா, தென் ஆபிரிக்கா மற்றும் கியூபா என வரலாறு சொல்லுகிறது. இவை அனைத்தையும் தீவிரவாதம் எனும் சாயத்தை நாம் பூசிவிட முடியாது. பூசவும் கூடாது.
தொடர்ந்து 50 ஆண்டுகளாய் அரச பயங்கரவாதத்தை மேற்கொண்டு வருகிற சிறிலங்கா அரசு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனியின் சுதந்திரமாய் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்கள் 1976 ஆம் ஆண்டில் எற்படுத்தப்பட்டு, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முன்வைக்கப்பட்ட அடிப்படை கருத்து, "தமிழ்த் தேசியம், சுயச்சையான, மறுசீரமைப்புடன், சுதந்திரமான இறையாண்மையுடனும் அமையப் பெற்ற தமிழீழ நாடு அமைவது தமிழர்களை காப்பாற்ற தோற்றுவிக்கப்படுவது தவிக்க இயலாதது".
1977 ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, நாடாளுமன்றம் சென்றது. அவர்களின் கருத்து, நாடாளுமன்றதை உணரவைத்து வாக்குகள் பெற்றுவிட வேண்டும் என்பது மட்டும்தானே ஒழிய, தீவிரவாதம் அன்று.
தவிர்க்க முடியாமல் அரச பயங்கரவாதம் வெடித்ததன் விளைவாய், தமிழ்ப் போராளிகள், அதனை எதிர்க்கத் தோன்றினார்கள்.
பின்னர் பதவியேற்ற அரசுகளும் சிறுபான்மை தமிழர்கள் மீது பயங்கரவாதத்தை தொடர்ந்தது. 1956 ஆம் ஆண்டில் இருந்து, தமிழர்கள் வன்முறைக்கு பலியாகியும், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டும், பொருட்கள் கொள்ளைச் சம்பவங்களுக்கு மத்தியில் வாழவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
பல கோடி மதிப்புள்ள சொத்து இழப்பு ஏற்பட்டது. பல்லாயிரம் தமிழர்களின் இறப்பினாலும், லட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வு ஏற்பட்டு வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் ஏதிலிகளானார்கள்.
1980 ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து சிங்கள ஆட்சிகள் தமிழர்கள் அழிப்பு ஒழிப்புக்கொள்கை காரணமாய், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த முற்பட்டனர். சிறிலங்கா இராணுவம், ஒன்றும் அறிய, ஆயுதம் ஏந்தாத தமிழ் இளைஞர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டது.
சிறிலங்கா அரசாங்கம், தீயநோக்கோடு வெளியிட்ட இராஜதந்திர கட்டுக்கதைகளில் அனைத்துலக சமூகம் வீழ்ந்தது.
தமிழர்கள் மீதும், தமிழ் அமைப்புக்களின் மீதும் நடவடிக்கை எடுத்த நாடுகள், இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு அல்லற்பட்டுகொண்டிருக்கின்ற வன்முறைகளின் உண்மை நிலையை தெளிவாய் புரிந்து கொள்ளவில்லை.
மேற்கண்ட நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் பட்டினிச்சாவும், அரசாங்க இயந்திரத்தின் மூலம் அன்றாடம் தமிழிர்கள் மீது குண்டுவீசப்படுவதைப் பற்றியும் தெரிந்து கொள்ளவோ அல்லது அங்குள்ள நிலவரங்களை பார்த்ததோ கிடையாது.
கனடாவில் உலகத் தமிழர் இயக்கத்திற்கு தடை
கனடா நாடு பொதுவாக அமைதி நாடாயும், கிட்டத்தட்ட 4 லட்சம் தமிழ் மக்களையும் கொண்டுள்ளது.
கனடா மக்கள் தொகையில் 150,000 இரண்டாம் தலைமுறை தமிழ் இளைஞர்கள், தமிழர்களாகவோ அல்லது இலங்கை நாட்டு குடிமகனாகவோ சேர்த்துக்கொள்ளப்படவில்லை. 20,000 சிங்களவர்களும் கனடாவில் வசிக்கின்றனர்.
கனடா அரசாங்கத்தின் திரு. ஸ்டிபன் கார்ப்பர், குற்ற நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஜூன் 13 ஆம் நாளில், உலகத் தமிழ் இயக்கத்தினை தடை செய்யப்பட்டதனை கனடா தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தமிழ்ப் புலிகளின் நெடுங்கால ஏதிர்ப்பாளாரான கனடாவின் பொது பாதுகாப்புத்துறையின் திரு. ஸ்டாக் வெல்டே, முன்னாள் தலைமை அமைச்சர் திரு. ஜூன் கிருஷ்டியன் மற்றும் திரு. பால் மார்டினையும் புலிகளின் மீது அமைதியாய் எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கையை கண்டித்தே வந்துள்ளார்.
கனடிய அரசாங்கம், தீவிரவாதத்திடம் இருந்து தேசியப் பாதுகாப்புக்காக மற்றொரு முறையும் ஓர் தீர்வை எடுத்துள்ளது.
கனடாவில் புலிகளின் முன்னணி அமைப்பான உலகத் தமிழர் இயக்கத்தினை தடைப்பட்டியலில் சேர்த்ததன் விளைவு, தீவிரவாதத்திற்கு எதிரான உலகப்போரில் எமது பாதுகாப்பில் முக்கிய பாதையை வகுத்துள்ளதாய், திரு. ஸ்டாக் வெல்டே கூறினார்.
ஆனால், கனடா தமிழர்கள், பெரும் துன்பநிலையில் இருந்த போது, 1986 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட உலகத் தமிழர் இயக்கத்தின் மீது, அரசாங்கம் தற்போது கூறும் அபாண்டமான குற்றச்சாட்டு பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் மூலம் திரட்டிய நிதி, இலங்கையில் போரின் விளைவாய் இடப்பெயர்வில் பாதிக்கப்பட்டு அவல நிலையில் உள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் அனுப்பப்பட்டது.
2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது உலகத் தமிழர் இயக்கமும், உலகின் பல நாடுகளில் உள்ள அமைப்புக்கள், தமிழ்ப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு உதவிகளை குவித்தன.
ஆனால் சிறிலங்கா அரசாங்கம், இந்த வகை உதவிகளை புலிகள் பெற்று விடுவார்கள் எனக் கூறி, அனைத்துலக அரசாங்கம் சாரா அமைப்புக்களை அனுமதிக்க மறுத்தது.
அந்த நேரத்தில் புலிகளின் பகுதிகளுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் உலகத் தமிழர் இயக்கம் போன்ற பல அமைப்புக்கள் மனிதநேய அடிப்படையில் உதவிகளை அளித்து வந்தன. அப்போது, ஆயிரக்கணக்கான மக்கள் புலிகளின் பகுதிக்குள் சென்று இந்த அமைப்புக்களிடம் இருந்து உதவிகளைப் பெற்று வந்தனர்.
இந்த வகை உதவிகளை அனைத்துலக தமிழ்ச் சமூகத்திடம் இருந்து பெற்று, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் பல அமைப்புக்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு உதவியதனை உலகின் பல தலைவர்கள் அங்கீகரித்தனர்.
இந்த உதவி கிடைக்கவில்லை எனில், பல்லாயிரம் மக்கள் மடிந்திருக்கக்கூடும்.
பணத்திற்காக அச்சுறுத்தும் நபர்களையோ அல்லது மிரட்டும் நபர்களையோ அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை கனடிய அரசாங்கம் எடுக்கட்டும் என்பதே இன்றைய கனடிய தமிழ் மக்கள் எழுப்பும் கேள்வி.
மேற்சொன்ன பண உதவிகள் வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் சொந்தங்களுக்கு சென்று அடையாமல் இருந்திருக்குமெயானால், பட்டினியால் வாடும் மக்களுக்கு வேலை இல்லாமல் போய் இருக்கும், விவசாயமும் மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டிருக்கும்.
அதேசமயம், வடக்கு மற்றும் கிழக்கில் சிறிலங்கா இராணுவக் கொடுமைகளுக்கு பாதிக்கப்பட்டு ஆயிரமாயிரம் மக்கள் இடப்பெயர்வும், நிலையான ஊனம் ஏற்பட்டு, இறப்புக்கள் நிகழ்ந்திருக்கும்.
இந்த வகையில் மேற்கொள்ளப்பட்ட் வெளிநாட்டு உதவிகளின் விளைவாய் சிறிலங்கா அரசாங்கத்துக்கு சேரவேண்டிய நிதி, நேரடியாய் சென்றிருந்ததால், சிறிலங்கா அரசாங்கம், இந்த நிதியைக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராய் ஆயுதங்களை வாங்கி குவித்திருக்கும்.
கனடிய கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தின் குழப்பமான சூழ்நிலையைடுத்து, "ஷெல்லப் ஏஞ்சில்ஸ்", எனும் அமைப்புடன் பைக்கர் குழுவுடன் ஒரு சமயம் இருந்து வந்த பழைய பெண் உறவுக்காரி வீட்டில், முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் திரு. மெக்சிம் பெர்னர் வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை அங்கு கண்டுபிடிக்கப்பட்டதனை கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தின் குழப்பமான சூழ்நிலையில், உலகத் தமிழர் இயக்கம் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 28.05.2008 இல் பெர்னர் தனது பதவியில் இருந்து விலகினார். இதன் விளைவாய், ப்ளாக் குபெக்காய், என்.டீ.பீ. மற்றும் எதிர்க்கட்சிகளின் நுட்பமான ஆய்வில் கனடிய ஆளும் அரசாங்கம் சிக்கலில் இருக்கிறது.
இதனால் திரு பெர்னரின் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மக்களையும், எதிர்க்கட்சிகளின் கவனத்தை திசை திருப்பவும், உலகத் தமிழ் இயக்கம் ஓர் தீவிரவாத இயக்கமாய் முன்னெடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டது.
உலகத் தமிழ் இயக்கத்தின் அமைப்பாளர்கள் முதலில் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க எண்ணியும், இது வெற்றிகரமாய் அமையவில்லை எனில் பின்னர் இது குறித்து நீதிமன்றத்தினை நாடவுள்ளனர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திரு.ரோகித போகல்லாகம, கனடிய வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பெடுத்து நன்றிகளை தெரிவித்ததோடு அல்லாமல் உலகத்தமிழ் இயக்கத்திற்கு ஏதிரான நடவடிக்கைகள் எடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துகொண்டு, மேலும் தீவிரவாதத்திற்கு ஏதிராய் பணம், பொருள் மற்றும் தார்மீக அடிப்படை ஆதரவு தெரிவிக்கும் மற்ற பிற முன்னணி அமைப்புக்களின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அவர் "இலங்கையில் உள்ள அப்பாவி மக்களை கொன்று குவிக்க ஆயுதங்களை வாங்குவதற்கு உதவிகரமாய் விளங்கக்கூடிய முன்னணி கொடை அமைப்புக்களையும், உலக அளவில் பணம் மாற்றும் செய்யும் வலைகளையும் கண்டறிந்து முறியடிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மேலும், ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை தீவிரவாத அமைப்பைத் தடைசெய்திருந்த போதிலும், புலிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அனுமதிப்பது குறித்து ஆழ்ந்த கலலையை தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் கொடுக்கப்படும் அனுமதி, இலங்கையின் இறையான்மையையும், ஒற்றுமையையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைக்கு விரோதமாய் இருக்கிறது என்கிறார்.
வெளிநாட்டு மண்ணில், புலிகளுக்கு ஆதரவாய் வழங்கும் நிதியத்தையும், பிரச்சாரத்தை செய்யும் முன்னணி அமைப்புக்களை அனைத்துலக சமூகம் தடுப்பதற்கான நடவடிக்ககைளை மேற்கொள்ள வேண்டும், என்றும் கூறுகிறார்.
தமிழ் இளைஞர்களை சிறைப்படுத்திய இத்தாலி
சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கைக்கு அடுத்தநாளே,
இத்தாலி அரசாங்கம், அந்த நாட்டு மண்ணில் உள்ள தமிழர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. 33 ஈழத்தமிழர்கள், புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் எனக் கூறி சிறைப்படுத்தியுள்ளது.
தொடந்து 28 நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் புலிகளுக்கு நிதி உதவி செய்தார்கள் என்ற பேரில் சோதனையிடப்பட்டது.
மேலும் பல்லர்மோ மற்றும் சிசில் நகரில் தனித்தனியே நடத்திய சோதனையில் 5 நபர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமான காவல்துறையினர் இத்தாலி முழுவதும், தெற்கில் நெப்பில் இருந்து வடக்கே பலேக்னா, சிசிலி தீவு வரை சோதனை நடைபெற்றதாய் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அனைத்திலும் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். கொழும்பு அரசின் அழுத்தத்தின் விளைவாய், இந்திய அரசாங்கம், ஈழத் தமிழர்களை பொய்யான புலிகள் எனக்கூறி சிறையிலிட்டது.
சிறைப்படுத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு கையூட்டுப்பணம் கொடுத்து வெளிவந்தால் அவர்களுக்கு வேலையோ, சரியான படிப்போ பெற முடியாமற் போகிறது. தமிழ் இளைஞர்கள் இலங்கை உட்பட எங்கு சென்றாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சிறிலங்கா அரசாங்கம், எப்போது சிறுபான்மை தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்கின்றதோ, அப்போதுதான் தீவிரவாதம் முழுமையாய் நிறுத்தப்படும். அரசியல் ரீதியாய் அமைதி வழி கண்டால் தான் இலங்கையில் தீவிரவாதம் நிற்கும். இதனைத்தான் எல்லோரும் விரும்புகின்றனர்.
அறிவு வழியில் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
இன விவகாரத்தை பயன்படுத்தி சிறிலங்கா அரசியல் விளையாட்டை, அண்டை நாடான இந்தியா மட்டுமே ஈடுபடுத்தி வந்தது. ஆனால், தற்போது, மேற்கு நாடுகளின் கதவுகளும் இந்த இனச்சிக்கலுக்குள் வந்து விட்டது.
அனைத்துலக சமூகம், அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிற்க வேண்டும். தன்நாட்டு நீதிக்காகவும், சுயநிர்ணயத்திற்காகவும் போராடி வரும் தமிழ் மக்கள் எப்போதும் இந்த உலகிற்கு ஆபத்தாய் இருக்க மாட்டார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments