தமிழ் மக்களின் பலத்தை வெளிப்படுத்துகின்றன புலம்பெயர் தமிழர்களின் பொங்கு தமிழ் நிகழ்வுகள்: பா.நடேசன் பாராட்டு

பொங்கு தமிழ் நிகழ்வுகளின் ஊடாக தமிழ் மக்களின் பலத்தை புலம்பெயர் தமிழர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அக்கராயனில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய எழுச்சி மாநாட்டில் அவர் பேசியதாவது:

மக்களால் கட்டிவளர்க்கப்பட்ட அமைப்பாக தமிழீழ விடுலைப் புலிகள் அமைப்பு திகழ்கின்றது. களமுனையில் போராளிகள் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும் மக்களுக்கு கிடைக்கும் வெற்றியாக அமைகின்றது.

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த மக்கள் பொங்கு தமிழ் நிகழ்வின் ஊடாக தமது உணர்வின் வெளிப்பாட்டை, தமிழ் மக்களின் பலத்தை உலகிற்கு வெளிப்படுத்தி வருகின்றனர்.

போர் மூலமான தீர்வைத் திணிக்கும் சிறிலங்கா அரசுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு- ஒருமித்த சக்தியாக அணிதிரள வேண்டும்.

சிங்கள அரச இயந்திரம் பலவீனமாகப் போய்க்கொண்டிருக்கும் தற்போதைய நிலைமையில் தமிழ் மக்களாகிய நாம் தாயக விடுதலைக்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்வதற்கு தயாராக வேண்டும்.
சிறிலங்காப் படையினர் களத்தில் இப்போது அழிந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு கிழமைக்குள் பாரிய நிலப்பரப்பினை பிடித்த வரலாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உள்ளது.

பலமான ஒரு காலத்தில் பலமான நேரத்தில் மக்கள் அனைவரும் எழுச்சி கொண்டிருக்கின்றோம்

போராளிகள் தாய் மண் மீட்பிற்குச் செல்லும் போது மக்களுக்கு பலபணிகள் உண்டு. அப்பணிகளை சிறப்பாக செய்து முடிப்பதன் ஊடாக விடுதலையை விரைவுபடுத்தலாம் என்றார் அவர்.


Comments