நெதர்லாந்தில் பேரெழுச்சியுடன் பொங்குதமிழ் நிகழ்வில் அதிகமான மக்கள் பங்கேற்பு

நெதர்லாந்து நாடாளுமன்றமுன்றலில் நேற்று ஞாயிறு அன்று (22.06.2008) ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெருந்திரளான தமிழ்மக்கள் கலந்துகொண்ட பொங்குதமிழ் நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. பொங்குதமிழ் மேடையில் தமிழீழத்தேசியத்தலைவரின் முழுஉருவப்படம் பெரியளவில் வைக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற முன்றல் சிகப்பு மஞ்சல் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மக்கள் அனைவரினது கைகளிலும் நெதர்லாந்து, தமிழீழத்தேசியக்கொடிகளும் தேசியத்தலைவரின் உருவப்படத்தினையும் தாங்கியிருந்தனர். நிகழ்வுகள் மதியம் 2மணிக்கு ஆரம்பமாகின.



நிகழ்வின் ஆரம்பத்தில் பொதுச்சுடரினை யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரன் அவர்களும் நெதர்லாந்து தேசியக்கொடியினை தமிழ் டச்சு ஒன்றிய பொறுப்பாளர் திரு.ச.மகேந்திரம் அவர்களும் தமிழீழத்தேசியக்கொடியினை தமிழின உணர்வாளர் திரு. புலவர் புலமைப்பித்தன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து சிறீலங்கா அரசினால் இதுவரைபடுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் நினைவாக மலர்வளையத்தினை தமிழர் மனிதஉரிமைமையப்பொறுப்பாளர் திரு.சி. இந்திரன் அவர்கள் வைக்க, தொடர்ந்து அகவணக்கத்துடன் மேடைநிகழ்வுகள் ஆரம்பமாகின.

கலைஞர்களின் எழுச்சிப்பாடல்கள், எழுச்சிநடனங்கள், நாடகம் போன்ற எழுச்சிக்கலைநிகழ்வுகளுடன் சிறப்புரைகளை தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருந்த தமிழின உணர்வாளர் புலவர் புலமைப்பித்தன், யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரன் அவர்கள் ஆற்றியிருந்தனர். .மேலும் நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அம்மையார். சந்தலா அவர்களும் காணாமல் போதலிற்கு எதிரான சர்வதேச அமைப்பின் செயலாளர் திரு. அனா அவர்களும் இப்பேரெழுச்சிநிகழ்வில் உரையாற்றியிருந்தனர்.


நெதர்லாந்து மொழியில் தமிழ்மாணவி ஒருவர் தாயகத்தில் தமிழ்மாணவர்கள்மீது சிங்களப்படைகள் தமிழ். நெதர்லாந்து மொழிகளில் பொங்குதமிழ்ப்பாடல்களும் இறுதியாக பொங்குதமிழ்ப்பிரகடனம் அங்கு குழுமியிருந்த தமிழ்மக்கள் அனைவராலும் உறுதிஎடுக்கப்பட்டு இறுதியாக பொங்குதமிழ்ப்பாடலுடன் இப்பேரெழுச்சிநிகழ்வு நிறைவு மாலை 5மணிக்கு செய்யப்பட்டது.



Comments