அமெரிக்க சுதந்திர நிகழ்ச்சித் திட்ட அமைப்பின் தலைவரும், நீதி நாடும் தமிழர் குழுமத்தின் அமெரிக்க சட்டவாளருமாகிய புறூஸ் வெயின் கனடா வந்துள்ளார்.
இலங்கை இனப் பிரச்சனைக்கு ஒரு நீதியான, நியாயமான தீர்வு காண்பதற்கு, கனடியத் தமிழரின் ஆதரவை நாடி அவர் இங்கு வந்துள்ளார். தமிழ் மக்களைச் சந்தித்து, தமது திட்டங்களை அவர் வகுக்கவுள்ளார்.
"பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி நாடுவதே எனது பணி. அமெரிக்க அரசின் மட்டுமீறிய செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நான் பாடுபட்டு வருகிறேன். கடுங்கோலர்களை விரட்டியடிக்கும் உரிமையும் கடமையும் மக்களுக்கு உண்டு என்பதை வலியுறுத்தி வருகிறேன்.
இலங்கைத் தமிழ் அரசு ஒன்றினால் மட்டுமே அங்கு அப்பாவி மக்களைக் காக்க முடியும் என்று நான் உறுதிபட நம்புகிறேன். உலகம் அதனை ஏற்றுக்கொண்டால், இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும்.
கொசொவோவில் அப்படித்தான் நடந்தது. தமிழ் மக்கள் தமது தாயகத்தில் தமிழ் அரசை எய்துவதற்கு உதவும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு நான் உறுதுணை புரிவேன்" என்று புறூஸ் வெயின் குறிப்பிட்டுள்ளார்.
புறூஸ் வெயின் கலந்துகொள்ளும் வானொலி, தொலக்காட்சி நிகழ்ச்சிகளில் நேயர்கள் தொலைபேசி மூலம் நேரடியாகப் பங்குபற்றுவதற்கு வேண்டிய ஒழுங்குகளை நீதி நாடும் தமிழர் குழுமம் செய்துள்ளது:
1. யூன் 19 வியாழன், மாலை 7:00 - 9:00, Banquet Hall, Radisson Hotel Toronto East, 55, Hallcrown Place (Hwy 401 and Victoria Park Ave.) North York , Ontario M2J 4R1 .
2. யூன் 20 வெள்ளி, மாலை 6:30 - 9:00, கனடா கந்தசாமி கோவில், 733 Birchmount Road (South of Eglinton Ave. East), Scarborough, Ontario M1K 1R5.
3. யூன் 21 சனி, மாலை 4:00 - 9:00, கனடா கந்தசாமி கோவில், 733 Birchmount Road (South of Eglinton Ave. East), Scarborough, Ontario M1K 1R5.
Comments