போரியல் வெற்றிகள் மூலமே, பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பது நிரூபணமாகி வருவதாக, கேணல் பானு தெரிவித்துள்ளார்.
மன்னார் - மணலாறு களமுனைகளில், சிறப்பாக செயலாற்றிய
பூநகரிப் படையணிப் போராளிகளை மதிப்பளிக்கும் நிகழ்வு, நேற்று
வன்னியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இடம்பெற்றிருந்தது.
இதன்பொழுது சிறப்புரையாற்றிய மன்னார் போர்முனை கட்டளை
தளபதி கேணல் பானு, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின்
எண்ணத்திற்கு வடிவம் கொடுப்பதற்கு, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்
அவர்களால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணி, யுத்த
களமுனைகளில் திறம்பட செயற்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
மன்னார் களமுனைகளில் சிறப்பாக செயலாற்றிய பூநகரிப்
படையணி, சிறீலங்கா படைகளின் முன்னேற்ற நடவடிக்கைகளை
தடுத்து நிறுத்துவதில், பாராட்டுக்குரிய வகையில் செயற்பட்டதாகவும்,
கட்டளை தளபதி கேணல் பானு அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.
போர்க்களங்களில், இழப்புக்களில் இருந்தே பட்டறிவையும்,
வெற்றிகளையும் ஈட்ட முடியும் என்பதோடு, போரியல் வெற்றிகள்
மூலமே, மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டு
வருவதாகவும், கட்டளை தளபதி கேணல் பானு குறிப்பிட்டுள்ளார்.
தளபதி கீதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்,
பொதுச்சுடரினை சோதியா படையணியின் சிறப்புத் தளபதி கேணல்
துர்க்கா அவர்கள் ஏற்ற, தமிழீழ தேசியக் கொடியினை, வடபோர்முனை
கட்டளை தளபதி கேணல் தீபன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, மாவீரர்களுக்கான பொதுத் திருவுருவப் படத்திற்கு,
தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி அவர்கள்
ஈகைச்சுடரேற்றி வைத்து, மலர் மாலையை அணிவித்தார்.
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு,
அவரது துணைவியார் இசைச்செல்வி அவர்களும், பிரிகேடியர் பால்ராஜ்
அவர்களின் திருவுருவப் படத்திற்கு, படைய புலனாய்வுப் பிரிவு சிறப்புத்
தளபதியும் ஈகைச்சுடர்களை ஏற்றி, மலர் மாலைகளை சூட்டினர்.
களமுனைகளில் தமது இன்னுயிர்களை ஈந்த, பூநகரிப் படையணி
மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு, தளபதிகள், பொறுப்பாளர்கள்,
போராளிகள், ஈகைச்சுடர்களை ஏற்றி மலர் மாலைகளை அணிவித்தனர்.
இதன்பொழுது, சிறப்புரையினை மன்னார் போர்முனை கட்டளை
தளபதி கேணல் பானு அவர்களும், மதிப்பளிப்பு உரையினை
வடபோர்முனை கட்டளை தளபதி கேணல் தீபன் அவர்களும் ஆற்றினர்.

Comments