போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்

தமிழீழ தாய்மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்து, ஐந்து மாவீரர்கள் வீரச்சாவை அணைத்துக் கொண்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று, லெப். பானுஜன் என்றழைக்கப்படும், முல்லைத்தீவு
மாவட்டத்தை லோகேந்திரன் தியாகிதாசன், வீரவேங்கை அமராவதி
என்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம்
சுமிதா, வீரவேங்கை குறிஞ்சிமலர் என்றழைக்கப்படும், யாழ்
மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் சாரதாதேவி,

வீரவேங்கை இளநங்கை என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த குமாரசாமி கமலேஸ்வரி ஆகிய போராளிகளும், கடந்த 24ஆம்நாளன்று,

2ஆம் லெப். சுடரேந்தி அல்லது தேனருவிஎன்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த சதானந்தம் தயானி என்ற போராளியும், தமது இன்னுயிர்களை ஈந்துள்ளனர்.

வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்


Comments